அப்பாவை போலவே பாடிபில்டிங் போஸ்.. அசத்திய ஜூனியர் அர்னால்ட்..அப்படி கொண்டாடும் ஆக்‌ஷன் ரசிகர்கள்!

By

கலிபோர்னியா: அப்பா, அர்னால்டை போலவே அவரது மகன் கொடுத்துள்ள பாடி பில்டிங் போஸ், சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

Recommended Video

Arnold Massive Contribution | Shah Rukh Khan Donated? | Lock Down

ஹாலிவுட் ஆக்‌ஷன் படங்களின், அசைக்க முடியாத அடையாளம், அர்னால்ட் ஸ்வாஸ்நேகர்.

டெர்மினேட்டர் வரிசை படங்கள், கமாண்டோ, பிரிடேட்டர், என்ட் ஆப்த டேஸ், எஸ்கேப் பிளான் உட்பட அவர் நடித்த பல படங்களில் ஆக்‌ஷனே பிரதானம்.

உலக ஆணழகன்

உலக ஆணழகன்

அந்த காட்சிகள் மிரட்டுவதாக இருக்கும். பாடிபில்டரான ஸ்வாஸ்நேகர், தனது 15 வயதில் இருந்தே உடற்பயிற்சியில் ஆர்வம் கொண்டவர். 20 வயதிலேயே உலக ஆணழகன் படத்தை பெற்றவர். பாடி பில்டிங் பற்றி சில புத்தகங்களையும் எழுதி இருக்கிறார். 1991-ல் வெளியான டெர்மினேட்டர் 2, ஜட்ஜ்மெண்ட் டே படத்தை ரசிகர்களால் மறக்கமுடியாது.

நம்பும்படியாக

நம்பும்படியாக

இதன் இயக்கம், கதை, தயாரிப்பு என பெரிய பொறுப்புகளை ஏற்றிருந்தார், அர்னால்ட். இந்தப் படத்தின் ஆக்‌ஷன் காட்சிகள்தான் உலகம் முழுவதும் அர்னால்டுக்கு பெரிய ரசிகர் பட்டாளத்தை உருவாக்கிக் கொடுத்தது. தொடர்ந்து நடித்து வந்த அர்னால்டின் ஆக்‌ஷன் காட்சிகள், அவரது உடலுக்கு ஏற்ற வகையில் நம்பும்படியாக இருப்பதால், ரசிகர்கள் அவர் படங்களை விரும்பிப் பார்த்தனர்.

சென்னையில் அர்னால்ட்

சென்னையில் அர்னால்ட்

2003 ஆம் ஆண்டில் இருந்து 2011 வரை கலிபோர்னியா மாகாண ஆளுநராக இருந்த அர்னால்ட், சென்னைக்கும் ஒரு முறை விசிட் அடித்தார். விக்ரம், எமி ஜாக்சன் நடித்த ஐ படத்தின் பாடல் வெளியீட்டு விழாவுக்காக, சென்னை வந்திருந்தார் அவர். அப்போது அவர் தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவையும் சந்தித்துப் பேசியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

View this post on Instagram

Perfect time to practice some posing!

A post shared by Joseph Baena (@projoe2) on

பிராக்டிஸ்

இந்நிலையில் அர்னால்ட் தனது இளம் வயதில் தனது உடற்கட்டை காண்பித்தபடி ஒரு போஸ் கொடுத்திருப்பார். இந்த போஸ் பிரபலமான ஒன்று. இப்போது அவர் மகன் ஜோசப் பயேனா (22 வயது), அப்பாவை போல போஸ் கொடுத்து போட்டோ எடுத்துள்ளார். இதை தனது இன்ஸ்டாகிராமில் பதிவு வெளியிட்டுள்ளார் ஜோசப். அதற்கு கேப்ஷனாக, இதுதான் பிராக்டிஸ் பண்ண சரியான நேரம் என்று குறிப்பிட்டுள்ளார்.

ஜூனியர் அர்னால்ட்

ஜூனியர் அர்னால்ட்

இதற்கு ஏராளமான ரசிகர்கள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர். சிலர், அர்னால்ட் 2.0 என்று வர்ணித்துள்ளனர். அப்பாவை போல பிள்ளையும் உடலை சூப்பரா ஏத்திட்டாரே என்று பலர் கமென்ட் அடித்துள்ளனர். சிலர், என்ன ஜூனியர் அர்னால்ட், அப்பா பக்கத்துல இருக்காரா? என்று கேட்டுள்ளனர். இந்தப் போட்டோ, இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X