twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    டெர்மினேட்டர் 5 - மீண்டு(ம்) வருகிறார் அர்னால்ட்

    By Manjula
    |

    லாஸ் ஏஞ்செல்ஸ்: ஹாலிவுட் படங்களில் ஏதாவது ஒருபடம் வெற்றியடைந்து விட்டால் போதும் உடனே ரீபூட் முறையைப் பயன்படுத்தி அடுத்தடுத்த பாகங்களை எடுக்கத் தொடங்கி விடுவார்கள். அதென்ன ரீபூட் எனக் கேட்கிறீர்களா ஒரு படம் வெற்றியடைந்து விட்டால் அதன் கதைக் கருவை மட்டும் வைத்துக் கொண்டு அடுத்தடுத்த பாகங்களை உருவாகுவது.

    ஹாலிவுட்டில் ஏற்கனவே ஹல்க், சூப்பர்மேன், ஸ்பைடர்மேன், பேட்மேன் இந்த வரிசையில் டெர்மினேட்டர் படங்களும் இணைந்துவிட்டன. எல்லாப் படங்களிலும் கதை ஒரே மாதிரித்தான் இருக்கும் திரைக்கதை, நடிகர், நடிகைகள் மற்றும் காட்சிகள் போன்றவை காலத்திற்கு ஏற்றவாறு மாற்றி இருப்பார்கள். டெர்மினேட்டர் படங்கள் இதுவரை 4 பாகங்கள் வெளிவந்து முறையே வெற்றிபெற்றுவிட்டதால் தற்போது 5 வது பாகத்தை மீண்டும் ஆக்க்ஷன் நடிகர் அர்னால்டை வைத்து எடுத்துக் கொண்டிருக்கிறார்கள்.

    Arnold Schwarzenegger and Terminator Genisys: he's back, again

    டெர்மினேட்டர் முதல் பாகம் 1984 ல் வெளிவந்து வெற்றி பெற்றது, தொடர்ந்து இந்த 30 வருடங்களில் இதுவரை ஜட்ஜ்மென்ட் டே , ரைஸ் ஆப் தி மெசின் மற்றும் டெர்மினேட்டர் 4 சால்வேசன் ஆகிய மூன்று டெர்மினேட்டர் சீரீஸ் படங்கள் வந்து வசூலில் குறைவைக்காமல் ஓடியதால் தற்போது இந்த வருடம் அதன் 5 ம் பாகமான டெர்மினேட்டர் ஜெனிசிஸ் அடுத்த மாதம் வெளிவர இருக்கிறது.

    அர்னால்ட்

    ஹாலிவுட் நடிகர் அர்னால்டைப் பற்றி நமது தாய்த்திரு தமிழ்நாட்டில் அறியாதவர்கள் குறைவே நேற்று முளைத்த பொடிசுகள் முதல் பிரபல நடிகர்கள் வரை அர்னால்டை தங்கள் ரோல் மாடலாக எடுத்துக் கொள்ளாதவர்கள் இங்கு குறைவுதான் நீங்கள் எந்த ஜிம்மிற்கு சென்றாலும் அங்கு அர்னால்டின் புகைப் படத்தைதான் முதலில் ஒட்டியிருப்பார்கள். அவரை மாதிரி உடற்கட்டு வேண்டும் என்று தினசரி உடற்பயிற்சியில் தங்களை வருத்திக் கொல்லும் இளைஞர்களை நீங்கள் எங்கெங்கு சென்றாலும் காணலாம். இவ்வளவு சிறப்பு வாய்ந்த அர்னால்ட் டெர்மினேட்டர் படங்களின் மூலம் உலக அளவில் புகழ் பெற்றவர் அந்தக் கதையை இவரை மனதில் வைத்தே எழுதி இருப்பார்கள் போல.

    டெர்மினேட்டர் படங்களின் கதை என்ன

    இயந்திரங்களிடம் இருந்து மனிதர்களை காப்பாற்றுவது தான் டெர்மினேட்டர் படங்களின் கதை இதைக் காலத்திற்கு தகுந்தவாறு மாற்றி இயந்திரங்களில் நல்ல இயந்திரம் கெட்ட இயந்திரம் மற்றும் எதிர்கால உலகில் இயந்திரங்களின் பங்கு எப்படி இருக்கும் போன்றவற்றை கொஞ்சம் மசாலா கலந்து அழகிய படமாக மாற்றி நம்மை யோசிக்க விடாமல் செய்து படத்தைப் பார்க்க வைப்பதில் அடங்கியிருக்கிறது படத்தை தொடர்ந்து இயக்கிவரும் இயக்குனர்களின் மூளை.

    டெர்மினேட்டர்

    டெர்மினேட்டர் படத்தின் முதல் பாகம் அக்டோபர் மாதம் 1984ம் ஆண்டு ஒரு சுபயோக சுபதினத்தில் வெளிவந்தது, அர்னால்டுடன் மைகேல் பீன், லிண்டா ஹாமில்டன் மற்றும் பால் வின்பீல்ட் நடித்து இருந்த இந்தப் படத்தை இயக்குனர் ஜேம்ஸ் கேமரூன் இயக்கி இருந்தார். கதை 2029 ல் நடகிறது அப்போது இந்த உலகத்தை இயந்திரங்கள் ஆளுகின்றன 1984ம் வருடம் ஒரு மனிதக் குழந்தை பிறக்க இருக்கிறது அந்தக் குழந்தை பிறந்தால் ஆபத்து என்பதால் ஒரு இயந்திரத்தை அனுப்பி (அர்னால்ட்) அந்தக் குழந்தையின் தாயைக் கொல்ல சொல்லுகின்றன இயந்திரங்கள். அதே நேரம் மனிதர்களும் கைல் ரீஸ் என்னும் ஒரு மனிதரை அனுப்பி அந்தக் குழந்தையை காப்பாற்ற சொல்கின்றனர், கைல் ரீஸ் இயந்திர மனிதரிடம் இருந்து அந்தக் குழந்தையைக் காப்பாற்றினாரா என்பது தான் படத்தின் கதை. 6.4 மில்லியன் செலவில் எடுக்கப் பட்டு 78.4 மில்லியன்களை வசூலித்து சாதனை புரிந்தது படம்.

    டெர்மினேட்டர் 2 தி ஜட்ஜ்மென்ட் டே

    டெர்மினேட்டர் படத்தின் இரண்டாம் பாகமான தி ஜட்ஜ்மென்ட் டே சுமார் ஏழு வருடங்கள் கழித்து வெளிவந்தது, ஒருசில நடிகர்கள் மட்டும் படத்தில் மாறியிருந்தனர் படத்தின் கதை இதுதான் மனிதர்கள் வாழும் இந்தப் பூமியில் இரண்டு வகையான இயந்திரங்கள் தோன்றுகின்றன, ஒன்று நல்ல இயந்திரம் மற்றொன்று நல்ல மனிதர்களை அழிக்கத் துடிக்கும் கெட்ட இயந்திரம். நல்ல இயந்திரமாக வரும் அர்னால்ட் கெட்ட இயந்திரத்திடம் இருந்து மனிதர்களைக் காப்பாற்றினாரா இல்லையா என்பது தான் கிளைமாக்ஸ். படம் ஏழு வருடங்கள் கழித்து வந்ததினாலோ என்னவோ பேய் ஓட்டம் ஓடி வசூலை வாரிக் குவித்தது 100 மில்லியன் செலவில் எடுக்கப் பட்ட இந்தப் படம் சுமார் 520 மில்லியன் டாலர்களை வசூலித்தது.

    டெர்மினேட்டர் 3 ரைஸ் ஆப் தி மெசின்ஸ்

    1997 ல் நிறுத்தப் பட்ட ஜட்ஜ்மென்ட் டே நிறைவேற்றப் படுகிறது இந்தப் பாகத்தில் 2004 ல் முதல் பாகத்தில் பார்த்த அந்தக் குழந்தை பிறந்து தற்போது இளைஞனாக மாறி விடுகிறான் (ஜான் கானர் ) அவனது அம்மா இறந்து விடுகிறார். இயந்திரங்களுக்குப் பயந்து தலைமறைவு வாழக்கை வாழும் ஜானை கொள்ள ஒரு அழகான இயந்திரத்தை பெண்ணாக மாற்றி அனுப்புகிறது ஸ்கைநெட் குழு. அந்த இளைஞனக் காப்பாற்றும் நல்ல இயந்திரமாக அர்னால்ட். இருவருக்கும் இடையேயான சண்டையில் ஜானைக் காப்பாற்றப் போராடும் அர்னால்ட் அந்தப் போராட்டத்தில் வென்றாரா இல்லையா என்பதுதான் கதை. அதிரடியான ஆக்சன்களுடன்2003ல் வெளிவந்த இந்தப் படம் 188 மில்லியன் செலவில் எடுக்கப் பட்டு 433 மில்லியன் வசூலைக் குவித்தது. ஒரே ஒரு மாற்றமாக இந்தப் படத்தின் இயக்குனராக ஜோனாதன் மாஸ்டோ படத்தை இயக்கியிருந்தார்.

    டெர்மினேட்டர் 4 சால்வேசன்

    டெர்மினேட்டர் படங்கள் என்றாலே அர்னால்ட் தான் ஹீரோ என்னும் மக்களின் நம்பிக்கையை உடைத்தெறிந்து 2009ம் ஆண்டு வெளிவந்த இந்தப் படம் அதன் விளைவை படத்தின் வசூலில் தெரிந்து கொண்டது. படத்தை இயக்கி இருந்தார் இயக்குனர் எம்சிஜி, இந்தக் கதை கொஞ்சம் குழப்பமானது தான் இந்த முறை ஜான் கானர் ஸ்கைநெட்டுடன் போராட நட்சத்திரமாக மாறிவிடுகிறான், அத்துடன் ஒரு போரை ஸ்கைநெட்டுடன் அரங்கேற்றி வெற்றி பெறுகிறான், ஆனால் கதையில் ஒரு ட்விஸ்ட் இந்த முறை ஜான் கானரை அழிப்பதற்குப் பதிலாக அவனுடைய அப்பாவை (முதல் பாகத்தில் ஒரு மனிதன் வந்து அந்தக் குழந்தையை காப்பாற்றுவாரே) அழிக்க ஒரு இயந்திரத்தை அனுப்புகிறது ஸ்கைநெட். ஆனால் அந்த இயந்திரம் தன்னை மனிதன் என்று நம்பிக் கொண்டு ஜானுடன் சேர்ந்து பணிபுரியும் ஒரு கட்டத்தில் போரினால் ஜான் இறந்து போகும் சூழல் ஏற்பட தனது இதயத்தை ஜானுக்கு கொடுத்து பார்ப்பவர்களின் கண்ணில் நீரை வரவழைத்து இறந்து விடும் அந்த இயந்திரம். கதையை படிக்க முடியல தானே அர்னால்ட் இல்லாத குறை படத்துல பெரிசா தெரிஞ்சிடக் கூடாதுன்னு இந்த மாதிரி கதையைச் சொதப்பி இருந்தாங்க. படத்தோட வசூல் என்னவோ சும்மார் தான் 200 மில்லியன் செலவில எடுத்த இந்தப் படம் 71 மில்லியனோட வசூல முடிச்சிக்கிருச்சி.

    டெர்மினேட்டர் ஜெனிசிஸ்

    மீண்டும் நம்ம அர்னால்டைக் கொண்டுவந்து விட்டார்கள் படத்தில் டெர்மினேட்டர் ஜெனிசிஸ் படம் அடுத்த மாதம் வெளியாக இருக்கிறது படம் மூன்ற பாகங்களாக எடுக்கப் படுகிறது என்றும் முதல் பாகம் 2016 இரண்டாம் பாகம் 2017 மூன்றாம் பாகம் 2018 லும் வெளியாக இருக்கிறதாம் மூன்றிலும் அர்னால்ட் தான் ஹீரோ மூன்று பாகங்களையும் இயக்குபவர் இயக்குனர் ஆலன் டெய்லர், கிட்டத்தட்ட சுமார் 520 கோடியில் மூன்று பாகங்களும் வெளிவர இருக்கிறது. டிரைலர் வெளியான சிலமணி நேரங்களுக்குள்ளேயே 30 லட்சம் பேர் டிரைலரைக் கண்டு களித்திருக்கிறார்கள், அர்னால்டின் ஆதிக்கம் இந்தப் படத்தில் மிகவும் கம்மியாக உள்ளதாக டிரைலரைப் பார்த்தவர்கள் கருத்துக் கூறியிருக்கிறார்கள். அடுத்த மாதம் ஜூன் 25 அன்று வெளியாகும் இந்தப் படத்தின் மீதான மக்களின் எதிர்பார்ப்பு மிகவும் அதிகமாக உள்ளது, எதிர்பார்ப்பைப் படம் பூர்த்தி செய்யுமா பார்க்கலாம்.

    ஒரு மெஷின வச்சே படத்த இன்னும் எத்தன காலத்துக்குத் தான் ஓட்டுவீங்க...

    English summary
    We’ve long heard that Terminator: Genisys is the first part in a proposed new trilogy of Terminator movies. Since the release of the first trailer, that fact has taken a back seat as fans and skeptics alike are focusing on the film at hand. However, for one particular star of the film, eyes are already turning to the sequel. On a recent trip abroad, Arnold Schwarzenegger himself reportedly said he expects to return for a sequel to Terminator Genisys in 2015.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X