twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    உலகத்தை மிரட்டும் கொரோனா.. பிரமாண்ட 'அவதார் 2'- வுக்கும் இந்த நிலைமைதான்.. கேமரூன் கவலை!

    By
    |

    லாஸ் ஏஞ்சல்ஸ்: உலகத்தை மிரட்டும் கொரோனா வைரஸ் காரணமாக, மெகா பட்ஜெட் ஹாலிவுட் படங்களின் ரிலீஸ் மீண்டும் தள்ளி வைக்கப்பட்டுள்ளன.

    Recommended Video

    அம்மன் தாயி டபுள் ஆக்சனில் நடிக்கும் ‘பிக்பாஸ்’ ஜுலி- வீடியோ

    ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் 2009 ஆம் ஆண்டு வெளியான சயின்ஸ் பிக்சன் படம், 'அவதார்.'

    இந்தப் படம் உலகம் முழுவதும் பரபரப்பாகப் பேசப்பட்டது. வசூலில் டைட்டானிக் படத்தின் சாதனையை முறியடித்தது.

    நாடு முழுவதும் ஆகஸ்ட் மாதம் தியேட்டர்களை திறக்க ஆலோசனை.. ஏகப்பட்ட கட்டுப்பாடுகளை ஏற்குமா நிர்வாகம்?.நாடு முழுவதும் ஆகஸ்ட் மாதம் தியேட்டர்களை திறக்க ஆலோசனை.. ஏகப்பட்ட கட்டுப்பாடுகளை ஏற்குமா நிர்வாகம்?.

    அடுத்தப் பாகம்

    அடுத்தப் பாகம்

    இந்தியாவிலும் இந்தப் படத்துக்கு வரவேற்புக் கிடைத்தது. சாம் வொர்த்திங்டன், ஸோ சல்தானா, ஸ்டீபன் லாங், மைக்கேல் ரொன்ட்ரிக்யூஸ் உட்பட பல நடித்திருந்தனர். இந்தப் படத்தின் அடுத்தப் பாகம் விரைவில் தொடங்கும் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அடுத்த பாகத்தை உடனடியாகத் தொடங்காத கேமரூன், இதன் ஸ்கிரிப்டுக்காக சில வருடங்களை எடுத்துக்கொண்டார்.

    2 வருட இடைவெளி

    2 வருட இடைவெளி

    பின்னர் இந்த படத்தின் நான்கு பாகங்கள் எடுக்க முடிவு செய்து, ஒவ்வொரு பாகத்தையும் இரண்டு வருட இடைவெளியில் வெளியிடவும் முடிவு செய்தார் கேமரூன். அதாவது, இரண்டாம் பாகத்தை 2021 ஆம் ஆண்டு டிசம்பர் 17 ஆம் தேதியும், மூன்றாம் பாகத்தை 2023 ஆம் ஆண்டு டிசம்பர் 22 ஆம் தேதியும், நான்காம் பாகத்தை டிசம்பர் 19, 2025 ஆம் ஆண்டும் அடுத்த பாகத்தை, 2017 ஆம் ஆண்டு டிசம்பர் 17 ஆம் தேதியும் வெளியிடுவது என்று திட்டம் வகுத்திருந்தார்.

    தியேட்டர்கள்

    தியேட்டர்கள்

    ஆனால் கொரோனா வைரஸ் காரணமாக உலகம் முழுவதும் தியேட்டர்கள் மூடப்பட்டுள்ளன. படப்பிடிப்புகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன. இதனால் அவதார் படத்தின் ஷூட்டிங்கும் ரத்து செய்யப்படந்து. ஆனால் 'எங்கள் ஷூட்டிங் தொடங்க இன்னும் 2 மாதம் ஆகலாம். ஆனால், பட ரிலீஸ் தேதியில் மாற்றமும் இருக்காது' என்று கடந்த சில மாதங்களுக்கு முன் தெரிவித்திருந்தார் கேமரூன்.

    சாத்தியமில்லை

    சாத்தியமில்லை

    இப்போது அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 'கொரோனா காரணமாக, நியூசிலாந்தில் நடக்கும் அவதார் 2 படத்தின் ஷூட்டிங் தாமதமாகி வருகிறது. இதனால் சொன்ன தேதியில் படத்தை வெளியிடுவது சாத்தியமில்லை. இந்த தாமதம் காரணமாக, என்னை விட அதிகம் கவலைப்படுவோர் இருக்க முடியாது என்று கூறியுள்ளார்.

    கொரோனா காரணமாக

    கொரோனா காரணமாக

    இதற்கு முன், பிரமாண்ட பட்ஜெட் படங்களான முலன், டெனட் உட்பட பல படங்களின் ரிலீஸ் தேதியும் கொரோனாவால் தள்ளி வைக்கப்பட்டுள்ளன. ஸ்டார்வார்ஸ் படத்தின் அடுத்த பாகம், பிளாக் விடோ உட்பட மார்வெல் படங்களின் ரிலீஸும் மாற்றி வைக்கப்படுவதாக டிஸ்னி நிறுவனம் தெரிவித்துள்ளது. இது ஹாலிவுட் சினிமா ரசிகர்களிடையே கவலையை ஏற்படுத்தி இருக்கிறது.

    English summary
    The coronavirus pandemic has forced Disney to indefinitely postpone the release of big-budget films like Avatar 2 and Mulan.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X