அவதார் 2 ..புதிய அப்டேட்.. ரிலீஸ் தேதியை அறிவித்தது படக்குழு!

கலிபோர்னியா: கிட்டத்தட்ட பத்து ஆண்டுகளை கடந்தும் இன்றும் அவதார் திரைப்படம் பலரையும் பிரம்மிப்பில் ஆழ்த்தியும் ரசிக்கவும் வைத்துக் கொண்டிருக்கிறது.

உலக அளவில் அதிக வசூல் செய்த அவதார் திரைப்படத்தின் பாகம் 2 தயாராகி வருவதாக அந்த படக்குழு பல ஆண்டுகளாக கூறி வந்த வேளையில் தற்பொழுது அதன் ரிலீஸ் தேதி மற்றும் நடிகர்கள் பற்றி அறிவித்துள்ளனர்.

இவ்வாறு அனைவரிடமும் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வரும் அவதார் 2 வெளியீட்டு தேதியை அறிந்த அதன் ரசிகர்கள் இந்த படத்தை திரையில் பார்க்க ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கின்றனர்.

10 ஆண்டுகளாக

10 ஆண்டுகளாக

2009 ஆம் ஆண்டு வெளியான அவதார் திரைப்படம் உலக அளவில் மிகப்பெரிய வசூல் சாதனை செய்து முதல் இடத்தில் இருந்தது. இந்த 10 ஆண்டுகளாக இருந்த வசூல் சாதனையை அவெஞ்சர்ஸ் என் கேம் தற்போது முறியடித்துள்ளது.

மும்முரமாக

மும்முரமாக

அவதார் படத்தை இயக்கிய இயக்குனர் ஜேம்ஸ் கேமரூன் இதுபோன்ற வசூல் சாதனை பெயர்கள் எல்லாம் பற்றி கவலைப்படாமல் இவர் இயக்கி வரும் அவதார் 2, 3, 4, 5 என இதன் அடுத்த கட்ட வேலையை மும்முரமாக பார்த்துக் கொண்டிருக்கிறார்.

புதிய தகவல்

புதிய தகவல்

மிகப்பெரிய பிரம்மாண்ட பொருட்செலவில் 2009 ஆம் ஆண்டு வெளியான அவதார் உலக திரைப்படத் துறையில் மிகப் பெரிய மைல் கல்லாகவும் சவாலான தொழில்நுட்பங்களையும் கொண்டு உருவாகி இருந்தது. இந்நிலையில் இதன் இரண்டாம் பாகம் தயாராகி கொண்டு உள்ளதாக தெரிவித்த படக்குழு இப்படம் வரும் 2021 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் வெளியாகும் என தெரிவித்திருந்த நிலையில் சற்று முன் 2020 டிசம்பர் மாதமே வெளியாக வாய்ப்புள்ளது என புதிய தகவல் கிடைத்துள்ளது.

ஒரு பாகம்

ஒரு பாகம்

அவதார் படக்குழு இதற்கு முன் சொல்லியிருந்த தகவலின் பெயரில் புதிய அவதார் சீரிஸ்கள் ஓராண்டுக்கு ஒரு பாகம் என 2027 க்குள் 5 பாகங்களையும் வெளியிடத் திட்டமிட்டிருந்தது. எனினும் இப்போது இருக்கும் கொரானா நோய்தொற்று என்ற கடுமையான சூழ்நிலையில் இதன் வெளியீட்டு தேதிகள் கொஞ்சம் தள்ளிப் போகவும் வாய்ப்புள்ளது எனவும் தெரிவித்துள்ளது.

விஷுவல்

விஷுவல்

ஆயினும் ஜேம்ஸ் கேமரூன் லேட்டா வந்தாலும் லேட்டஸ்ட்டா வருவேண்டா என்றவாறு அவதார் 2 சிறிது தாமதமானாலும் அவரது பிரம்மிக்க வைக்கும் விஷுவல் காட்சிகளால் நம் அனைவரையும் திருப்தி படுத்துவார் என்பதில் எந்த ஒரு சந்தேகமும் இல்லை.

இளவரசி நெய்த்ரி

இளவரசி நெய்த்ரி

இதில் ஜோ சல்டன ந'வி-ன் இளவரசி நெய்த்ரி-யாக அடுத்தடுத்த பாகங்களில் நடித்துள்ளார். ஜோ சல்டன இதற்கு முன் ஸ்டார் ட்ரேக் மற்றும் கார்டியன்ஸ் ஆப் தி கேலக்சி போன்ற படங்களில் நடித்ததன் மூலம் மிகவும் பிரபலமானவர்.

திரையில் பார்க்க

திரையில் பார்க்க

இவ்வாறு அனைவரையும் மிகுந்த ஆவலுடன் எதிர் பார்க்க வைத்திருக்கும் அவதார் 2 இந்த ஆண்டு இறுதியிலும் மற்றும் அதன் அடுத்தடுத்த பாகங்கள் ஓராண்டுக்கு ஒன்று வெளியாகும் என சொல்லி வந்த நிலையில் ரசிகர்கள் அனைவரும் அவதார் 2 திரையில் பார்க்க நீண்ட ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X