ஜேம்ஸ் கேமரூனின் “அவதார் 2“… ரிலீஸ் தேதி அறிவிப்பு !

நியூயார்க் : பிரபல ஹாலிவுட் இயக்குனர் ஜேம்ஸ் கேம்ரூன் இயக்கத்தில் வெளியான அவதார் 2 திரைப்படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு அறிவித்துள்ளது.

அவதார் 2ம் பாகத்தின் ரிலீசைத் தொடர்ந்து, அடுத்தடுத்த 5 பாகங்களும் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மிகப் பிரம்மாண்டமான கிராபிக்ஸ். புத்தம் புதியதோர் உலகின் ஒவ்வொரு ஜீவராசியும் ஒவ்வொரு இயற்கை அம்சமும் பிக்ஸல் பிக்ஸலாக அணு அணுவாக உருவாக்கப்பட்டுள்ளது.

அவதார்

அவதார்

2009ம் ஆண்டு வெளியான திரைப்படம் அவதார். இத்திரைப்படத்தை ஹாலிவுட் இயக்குநர் ஜேம்ஸ் கேமரூன் பதினோரு ஆண்டுகளுக்குப் பிறகு இந்த படத்தை இயக்கினார். 3டியில் திரையில் மிரட்டும் இப்படம் 1200 கோடி ரூபாய் செலவில் நான்காண்டுகள் படமாக்கப்பட்டது.

ரசிக்கும்படி

ரசிக்கும்படி

அடர்ந்த காடு, பிரம்மாண்டமான மரம், பறவைகள், விலங்குகள், இயற்கை மீது அம்மக்களுக்கு இருக்கும் பாசம், இறந்தவர்களை ஏவா என்ற கடவுளிடம் மன்றாடி உயிர்பிழைக்க வைப்பது என படம் முழுவதும் ரசிக்கும் படி இருக்கும்.

வசூலில் சாதனை

வசூலில் சாதனை

இயற்கையையும் வனங்களையும் மரங்களையும் அழிக்கும் நவீன விஞ்ஞானத் திரைத்தொழில்நுட்பத்தை இப்படம் அம்பலப்படுத்துகிறது. இதில் வேற்றுகிரக மனிதர்களை அங்கிருந்து வெளியேற்றும் முயற்சியும், நவீன ஆயுதங்களை எதிர்த்து அவர்கள் போராடி இறுதியில் பெற்று பெறுகிறார்கள். உலக அளவில் இத்திரைப்படம் வெளியாகி வசூலில் சாதனை படைத்தது.

படப்பிடிப்பு நிறுத்தம்

படப்பிடிப்பு நிறுத்தம்

முதல் பாகத்திற்கு கிடைத்த வரவேற்பை அடுத்து இப்படத்தின் இரண்டாம் பாகத்தின் படப்பிடிப்பு நியூஸிலாந்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வந்த நிலையில், கொரோனாவின் தீவிரத்தால் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது. எனினும் ஏற்கனவே முடிக்கப்பட்ட படப்பிடிப்பு காட்சிகளை வைத்து கிராபிக்ஸ் பணிகள் வீட்டிலிருந்த படியே முடித்தனர்.

அடுத்த ஆண்டு ரிலீஸ்

அடுத்த ஆண்டு ரிலீஸ்

முதல்பாகத்தை விட இரண்டாவது பாகம் பிரம்மாண்டமாக தயாராகி உள்ளது. அவதார் 2 பாகம் இந்த ஆண்டு டிசம்பரில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் படப்பிடிப்பு பணி, கிராபிக்ஸ் பணிகள் முடியாததால் படத்தின் வெளியீட்டை படக்குழு தள்ளிவைத்தது. இதையடுத்து அவதார் 2 அடுத்த ஆண்டு 2022 டிசம்பர் மாதம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டதுள்ளது.

மகிழ்ச்சி

மகிழ்ச்சி

அவதார் 2ம் பாகத்தின் ரிலீசைத் தொடர்ந்து அவதாரின் அடுத்தடுத்த பாகங்களும் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. உலக அளவில் ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வெற்றி பெற்ற அவதார் படத்தின் அடுத்தடுத்த பாகங்களின் வெளியீட்டு தேதி ஒரே சமயத்தில் அறிவிக்கப்பட்டதால் ரசிகர்கள் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X