Don't Miss!
- News
"புடிங்க அவங்கள.." தமிழக இளைஞர்களை விரட்டியடித்த வடமாநிலத்தவர்! திருப்பூரில் உண்மையில் நடந்தது என்ன
- Sports
நியூசிலாந்துக்கு எதிரான முதல் டி20 - இந்திய அணியின் பிளேயிங் லெவன் என்ன? பிட்ச் ரிப்போர்ட்
- Finance
Budget 2023: கல்வித் துறைக்கும், ஹெல்த்கேர் துறைக்கும் முக்கியத்துவம் கிடைக்குமா?
- Technology
திடீர் விலைக்குறைப்பு! கம்மி விலையில் புது Smart Watch வாங்க சரியான நேரம்.. அதுவும் OnePlus வாட்ச்!
- Automobiles
நாடே காத்து கிடந்த எலெக்ட்ரிக் காருக்கு புக்கிங் தொடக்கம்! விலை இவ்ளோதானா! அதான் எல்லாரும் அலை மோதறாங்க!
- Lifestyle
இந்த இந்திய மசாலா பொருட்கள் உங்க குடலுக்கு பல அதிசயங்களை செய்யுமாம்... அவை என்னென்ன தெரியுமா?
- Education
Mega Job Fair in tiruppur 2023:ஆயிரம் நிறுவனங்கள் பங்கேற்கும் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் எங்கே தெரியும்...?
- Travel
சென்னையில் இத்தனை அமானுஷ்யம் நிறைந்த இடங்களா – இனி இந்த பக்கம் போகவே கூடாது!
அவதார் 2 டிரைலர் எப்போ ரிலீஸ் ஆகுது தெரியுமா? ஜேம்ஸ் கேமரூனின் வேறலெவல் ராஜ தந்திரம்!
சென்னை: விண்ணைத் தாண்டி வருவாயா படத்தில் சிம்பு சத்யம் திரையரங்கில் நடனமாடும் போது அந்த தியேட்டரில் அவதார் படம் ஓடிக் கொண்டிருக்கும்.
2009ம் ஆண்டு வெளியான அவதார் படத்தின் முதல் பாகத்தை தொடர்ந்து அதன் அடுத்த பாகம் எப்போது வரும் என காத்திருந்த குழந்தைகள் எல்லாம் டிகிரியே முடித்து வேலைக்கு சென்றிருப்பார்கள்.
இந்நிலையில், குறிஞ்சிப்பூ போல அவதார் 2 படம் இந்த ஆண்டு இறுதியில் வெளியாகும் என்கிற தகவல் மற்றும் அவதார் 2 டிரைலர் எப்போ ரிலீஸ் என்கிற ஹாட் அப்டேட் எல்லாம் கசிந்துள்ளன.
அனிருத்
என்னோட
படத்திற்கு
இசையமைக்க
முடியாது
என்றார்
!

அவதார்
டெர்மினேட்டர் படங்களை இயக்கி அகில உலகுக்கும் ஹியூமனாய்டு ரோபோவை அறிமுகம் செய்து வைத்த இயக்குநர் ஜேம்ஸ் கேமரூன், உடைந்த டைட்டானிக் கப்பலுக்குள்ளும் உடையாமல் ஒரு உன்னத காதல் இருந்ததை காதலர்களுக்கு உணர்த்தினார். ஏலியன் படத்தில் ஏலியன்கள் பூமிக்கு வந்து அட்டகாசம் செய்வதை காட்டிய அவர், அவதார் படத்தில் அப்படியே உல்டாவாக பாண்டோரா கிரகத்திற்கு ஏலியன்களாக செல்லும் மனிதர்களின் அட்டகாசத்தை படமாக்கி காட்டியிருந்தார்.

உலகிலேயே நம்பர் ஒன்
அதுவரை ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் வெளியான டைட்டானிக் செய்த வசூல் சாதனை தான் உலகிலேயே அதிகம் என நினைத்திருந்த நிலையில், என்னை தோற்கடிக்க ஒருத்தன் வருவானே.. அட அவனும் இங்க நான் தானே என அவதார் படம் மூலம் 25 ஆயிரம் கோடி வசூலை ஈட்டி உலகின் நம்பர் ஒன் வசூல் ஈட்டிய படமாக பல ஆண்டுகள் அந்த சிம்மாசனத்தில் இருந்தது.

முறியடித்த எண்ட்கேம்
அவதார் படத்தின் வசூலை முறியடிக்க முடியாமல் மார்வெல் திரையுலகின் பல படங்கள் தவித்த நிலையில், அவெஞ்சர்ஸ் எண்ட்கேம் திரைப்படம் டைட்டானிக் மற்றும் அவதார் படங்களின் வசூலை முறியடித்தது. அவதார் 2 வெளியானால் வேற ஒரு புதிய வசூல் ரெக்கார்டு உருவாகும் என ஒட்டுமொத்த திரையுலகமே காத்திருக்கிறது.

இந்த ஆண்டு கன்ஃபார்ம்
பல ஆண்டுகளாக டிமிக்கி கொடுத்து வந்த அவதார் 2 படத்தின் ரிலீஸ் கண்டிப்பாக இந்த ஆண்டு இறுதியில் வெளியாகும் என உறுதியாகி உள்ளது. அவதார் 2ம் பாகம் இந்த ஆண்டு வெளியாகும் நிலையில், அதன் 3ம் பாகம் அடுத்த ஆண்டும் 4ம் பாகம் அதற்கு அடுத்த ஆண்டும் வெளியாகும் என தகவல்கள் வெளியாகி உள்ளன. ஒட்டுமொத்தமாக 4 பாகங்கள் வரை இயக்கி வருவதால் தான் இத்தனை ஆண்டுகள் தாமதம் என்கின்றனர்.

டிரைலர் எப்போ
அவதார் 2ம் பாகத்தின் டிரைலர் வரும் மே 6ம் தேதி வெளியாகும் என தற்போது கசிந்துள்ள ஹாட் அப்டேட் உலகளவில் டிரெண்டாகி வருகிறது. ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் ஜேக் சுல்லியாக சாம் வொர்த்திங்டன், நெய்த்ரியாக ஜோ சல்டானா நடித்துள்ள இந்த படத்தில் டைட்டானிக் புகழ் கேட் வின்ஸ்லெட்டும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளாராம். அவதார் படத்தில் முழுக்க முழுக்க தண்ணீர் உலகத்திலேயே இந்த படம் உருவாகி இருப்பது கூடுதல் ஆச்சர்யம்.

ராஜதந்திரம்
வரும் மே 6ம் தேதி மார்வெலின் டாக்டர் ஸ்ட்ரேஞ்ச் இன் தி மல்டிவெர்ஸ் ஆஃப் மேட்னஸ் திரைப்படம் தியேட்டர்களில் வெளியாகும் நிலையில், அந்த படத்துடன் இந்த அவதார் 2 டிரைலரை வெளியிட ஜேம்ஸ் கேமரூன் பலே ராஜதந்திரம் போட்டுள்ளதாக கூறுகின்றனர். ஆனால், இன்னமும் இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை என்பது வருத்தமான உண்மை.