ஐந்தே நாட்களில் 5 ஆயிரம் கோடி...? நான் ஸ்டாப் வசூல் மழையில் அவதார் 2!
சென்னை: ஜேம்ஸ் கேமரூன் இயக்கியுள்ள அவதார் இரண்டாம் பாகம் கடந்த 16ம் தேதி திரையரங்குகளில் வெளியானது.
உலகம் முழுவதும் 150க்கும் மேற்பட்ட மொழிகளில் வெளியாகியுள்ள அவதார் 2 திரைப்படத்துக்கு ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.
இந்நிலையில், அவதார் 2 படத்துக்கு கலவையான விமர்சனங்கள் கிடைத்த போதும் வசூலில் புதிய சாதனை படைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அவதார் 2 படத்திற்கு வரவேற்பு
ஹாலிவுட்டில் ஜேம்ஸ் கேமரூன் இயக்கியுள்ள அவதார் படத்தின் இரண்டாம் பாகம் கடந்த வாரம் 16ம் தேதி வெளியானது. 13 ஆண்டுகள் காத்திருந்த ஹாலிவுட் ரசிகர்களின் எதிர்பார்ப்புடன் வெளியாஅ அவதார் இரண்டாம் பாகம், சிறப்பான வரவேற்பைப் பெற்றுள்ளது. உலகம் முழுவதும் 160 மொழிகளில் வெளியான இந்தப் படத்துக்கு கலவையான விமர்சனங்கள் கிடைத்தாலும், வசூலில் சாதனை படைத்து வருகிறது. இந்தியாவில் மட்டும் முதல் ஐந்து நாட்களில் 150 கோடி ரூபாய்க்கும் மேல் வசூல் செய்துள்ளது.

ஐந்து நாட்களில் அதிரிபுதிரி வசூல்
இந்தியா தவிர்த்து சீனா, வட அமெரிக்கா, சிங்கப்பூர், மலேசியா, வளைகுடா நாடுகளிலும் அவதார் 2 திரைப்படம் கோடிக்கணக்கில் வசூல் செய்து வருகிறதாம். மேலும், முதல் வாரம் உலகம் முழுவதும் அவதார் 2 படத்தின் கலெக்ஷன்ஸ் 3500 கோடி ரூபாயை நெருங்கியது. அதனையடுத்து அடுத்து இரண்டு நாட்களிலும் வசூல் குறையவில்லையாம். இதுவரை மொத்தம் 5 ஆயிரம் கோடி ரூபாய் கலெக்ஷன்ஸ் செய்துள்ளதாக சொல்லப்படுகிறது.

பட்ஜெட்டை நெருங்கிய கலெக்ஷன்ஸ்
அவதார் 2. இந்த திரைப்படம் மொத்தம் 7500 கோடி ரூபாய் பஜெட்டில் பிரம்மாண்டமாக உருவாகியுள்ளது. முதல் வாரத்திலேயே 3500 கோடி வசூலித்த அவதார் 2, அடுத்த இரண்டு நாட்களையும் சேர்த்து மொத்தம் 5000 கோடி வசூலை கடந்துவிட்டது. மேலும் இந்த வாரம் இறுதிக்குள் படத்தின் பட்ஜெட் வசூலில் கிடைத்துவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதுமட்டும் இல்லாமல் கிறிஸ்துமஸ், நியூ இயர் விடுமுறைகள் இருப்பதால், அடுத்தடுத்த வாரங்களில் வசூல் மேலும் அதிகரிக்கும் என்றே சொல்லப்படுகிறது.

ரசிகர்கள் பாராட்டு
2009ல் வெளியான அவதார் முதல் பாகத்தை விடவும், இரண்டாம் பாகம் விஷுவலாக மிரட்டியுள்ளதாக ரசிகர்கள் கூறி வருகின்றனர். படத்தின் மேக்கிங் சிலிர்க்க வைப்பதாகவும், நீருக்கு அடியில் ஜேம்ஸ் கேமரூன் ஷூட் செய்துள்ள காட்சிகள் பிரமிப்பை ஏற்படுத்துவதாகவும் பாராட்டி வருகின்றனர். தியேட்டர் எக்ஸ்பீரியன்ஸுக்கான தரமான திரைப்படமாக அவதார் 2 உருவாகியுள்ள குறிப்பிடத்தக்கது. ஜோ சல்டானா, சாம் வொர்திங்டன், சிகர்னி வீவர் உள்ளிட்டோர் நடித்துள்ள இந்தப் படத்தை, ஜேக், நேத்ரி அவரின் குழந்தைகளை மையமாக வைத்து ஜேம்ஸ் கேமரூன் இயக்கியுள்ளார். மேக்கிங், விஷுவல் ட்ரீட் என எல்லா வகையிலும் ரசிகர்களை மிரட்டியுள்ள அவதார் 2, இன்னும் பல சாதனைகள் படைக்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications











