அயன்மேனை 3000 தடவை காதலிக்கும் கேப்டன் அமெரிக்கா.. என்ன விஷயம் தெரியுமா?

லாஸ் ஏஞ்சல்ஸ்: ஹாலிவுட் நடிகர் ராபர்ட் டவுனி ஜூனியரின் 55வது பிறந்த நாள் ஏப்ரல் 4ம் தேதி கொண்டாடப்பட்டது.

Recommended Video

Jackie Chan prevention advice | கொரோனா Safety Measures

அயன்மேன் ஹீரோவான ராபர்ட் டவுனி ஜூனியர், அவென்ஞ்சர்ஸ் குழுவை லீடு செய்து பல வெற்றிப் படங்களை மார்வெல் திரையுலகிற்கு வழங்கினார்.

Avengers actors wishes Happy Birthday to Robert Downey Jr.,

கடந்த ஆண்டு வெளியான அவெஞ்சர்ஸ் எண்ட்கேம் படத்தில், தானோஸுக்கு எதிரான போரில் அயன்மேன் அழிவது போன்ற காட்சி இடம்பெற்றிருக்கும். அந்த காட்சி அயன்மேன் ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியது.

அயன்மேன் கதாபாத்திரத்திற்கு மிகவும் நெருங்கிய நட்புக் கொண்ட கேப்டன் அமெரிக்கா கதாபாத்திரத்தில் நடித்த ஹாலிவுட் நடிகர் கிரிஸ் எவான்ஸ், ராபர்ட் டவுனி ஜூனியரின் பிறந்த நாளுக்கு வாழ்த்துக்களையும், 3000 காதல்களையும் பரிசாக அளித்துள்ளார்.

அவெஞ்சர்ஸ் படங்கள் மட்டுமின்றி ஷெர்லாக் ஹோம்ஸ், ட்யூ டேட், டு லிட்டில், சாப்ளின் உள்ளிட்ட பல படங்களில் தனது வித்தியாசமான நடிப்பை வெளிப்படுத்தி உலகளவில் ரசிகர்களை பெற்றுள்ளார் ராபர்ட் டவுனி ஜூனியர்.

கிரிஸ் எவான்ஸை தொடர்ந்து ஹல்க் நடிகரான மார்க் ரஃபலோவும் ராபர்ட் டவுனி ஜூனியருக்கு தனது பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். கொரோனா கலவரத்தால் நேரில் சென்று வாழ்த்த முடியாத நிலையில், விர்ச்சுவலாக தனது ஹக்ஸ் உங்களை சென்று சேரட்டும் என மார்க் ரஃபலோ பதிவிட்டுள்ள ட்வீட்டும் பலரது பாராட்டுக்களை பெற்றுள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X