Joe Russo: அவெஞ்சர்ஸ் சீரீஸ்ல இந்தியன் ஹீரோன்னா அது ரஜினிகாந்த்தான்.. ஜோ ரூசோ உறுதி!
சென்னை: நடிகர் ரஜினிகாந்த் சர்வதேச அளவில் ஏராளமான ரசிகர்களை கவர்ந்து தொடர்ந்து வெற்றி படங்களை கொடுத்து வருகிறார். கடந்த ஆண்டில் அவரது நடிப்பில் வெளியான ஜெயிலர் படம் மிகப்பெரிய ஹிட் அடித்துள்ளது. இதேபோல கடந்த பிப்ரவரி மாதத்தில் வெளியான லால் சலாம் படம் கலவையான விமர்சனங்களை பெற்றுக் கொடுத்தது.
தற்போது ஜெய் பீம் பட இயக்குனர் டிஜே ஞானவேல் இயக்கத்தில் வேட்டையன் படத்தில் நடித்து முடித்துள்ளார் ரஜினிகாந்த். இந்தப் படம் வரும் அக்டோபர் மாதத்தில் தீபாவளி ரிலீசாக வெளியாக உள்ளது. இந்த படங்களை தொடர்ந்து அடுத்ததாக லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கூலி படத்தில் அடுத்த மாதம் துவக்கத்தின் இணையவுள்ளார் ரஜினிகாந்த்.

நடிகர் ரஜினிகாந்த்: நடிகர் ரஜினிகாந்த் இந்திய அளவில் மட்டுமல்லாமல் சர்வதேச அளவில் ஏராளமான ரசிகர்களுக்கு சொந்தக்காரராக உள்ளார். கடந்த ஆண்டில் ரஜினிகாந்த் நடிப்பில் ஜெயிலர் படம் வெளியான நிலையில் கடந்த பிப்ரவரி மாதத்தில் லால் சலாம் படம் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றது. இந்த படங்களை தொடர்ந்து தற்போது டிஜே ஞானவேல் இயக்கத்தில் வேட்டையன் படத்தில் ரஜினிகாந்த் நடித்து முடித்துள்ளார். இந்த படத்தில் போலீஸ் அதிகாரியாக அவர் நடித்துள்ளதாக கூறப்பட்டுள்ளது. இந்த படத்தின் ரிலீஸ் வரும் அக்டோபர் மாதம் தீபாவளியையொட்டி திட்டமிடப்பட்டுள்ளது.
ரஜினிகாந்தை பாராட்டிய அவெஞ்சர்ஸ் இயக்குநர்: வேட்டையன் ரிலீஸ் குறித்து முன்னதாக லைகா நிறுவனம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இந்நிலையில் இந்த படத்தை தொடர்ந்து அடுத்த மாதம் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கூலி படத்தின் சூட்டிங்கில் இணையவுள்ளார் ரஜினிகாந்த். 70 வயதை கடந்த நிலையிலும் அடுத்தடுத்த படங்களில் இளம் ஹீரோக்களுக்கு டஃப் கொடுக்கும் வகையில் அவர் நடித்து வருவது ரசிகர்களை கவர்ந்து வருகிறது. இந்நிலையில் ஹாலிவுட்டில் ஏராளமான ரசிகர்களை கவர்ந்த அவெஞ்சர்ஸ் சீரீஸின் இயக்குனர் ஜோ ரூசோ ரஜினிகாந்த் குறித்து தனது சமீபத்திய பேட்டியில் பேசியுள்ளார்.
ரஜினிதான் அயர்ன் மேன்: அவெஞ்சர்ஸ் படத்திற்காக இந்திய ஹீரோவை தேர்வு செய்வது என்றால் தன்னுடைய முதல் சாய்ஸாக அயன் மேன் கேரக்டரில் ரஜினிகாந்தை தான் தேர்ந்தெடுப்பேன் என்று அவர் கூறியுள்ளார். இதே போல பாலிவுட்டில் சல்மான்கானை ஹல்க்காக தேர்ந்தெடுப்பேன் என்றும் அவர் தெரிவித்துள்ளார். மார்வெல் சினிமாட்டிக் யூனிவர்சின் அடுத்தடுத்த படங்கள் வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகின்றன. கேப்டன் அமெரிக்கா மற்றும் தண்டர்போல்ட்ஸ் அடுத்தடுத்து ரிலீசாகிவரும் சூழலில் அடுத்த ஆண்டில் அவெஞ்சர்ஸ் தி கேங் டைனாஸ்டி படம் ரிலீசாகவுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
அவெஞ்சர்ஸ் சீரிஸ்: இதேபோல அவெஞ்சர்ஸ் : சீக்ரெட் வார்ஸ் படம் 2026ம் ஆண்டில் ரிலீசாகவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த 2012ம் ஆண்டில் துவங்கிய அவெஞ்சர்ஸ் பயணம் தொடர்ந்து வருகிறது. கடந்த 2017ம் ஆண்டில் எம்பயர் பத்திரிகை சார்பில் நடத்தப்பட்ட ஆய்வில் அனைத்து காலங்களிலும் ரசிகர்களை கவர்ந்த 100 படங்களின் பட்டியலில் அவெஞ்சர்ஸ் படமும் இடம்பெற்றிருந்தது. இந்நிலையில் இதன் இயக்குநர்களில் ஒருவரான ஜோ ரூசோ, நடிகர் ரஜினிகாந்தை தன்னுடைய ஹீரோவாக தேர்ந்தெடுப்பேன் என்று கூறியுள்ளது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.


Click it and Unblock the Notifications











