twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    60 ஆண்டுகள்.. சினிமாவே மூச்சு என வாழ்ந்த பழம்பெரும் நடிகை காலமானார்.. பிரபலங்கள் இரங்கல்

    |

    லாஸ் ஏஞ்சல்ஸ்: 60 ஆண்டுகளாக ஹாலிவுட் சினிமாவில் பணியாற்றிய பிரபல நடிகை ஜெசிகா வால்டர் காலமானார். அவருக்கு வயது 80.

    1964ம் ஆண்டு வெளியான லில்த் எனும் திரைப்படம் மூலம் அறிமுகமானவர் இவர்.

    காஞ்சனா 3 பட நடிகைக்கு கொரோன உறுதி.. வீட்டிலேயே தனிமைப்படுத்தப்பட்டார்! காஞ்சனா 3 பட நடிகைக்கு கொரோன உறுதி.. வீட்டிலேயே தனிமைப்படுத்தப்பட்டார்!

    இயக்குநராகவும், டிவி நடிகையாகவும், ஸ்க்ரீன் கில்டு விருது குழுவின் தலைவராகவும் பணியாற்றியவர் ஜெசிகா வால்டர். இவரது மறைவால் ஹாலிவுட் திரையுலகம் சோகத்தில் ஆழ்ந்துள்ளது.

    தூக்கத்திலேயே நின்ற மூச்சு

    தூக்கத்திலேயே நின்ற மூச்சு

    1941ம் ஆண்டு ஜனவரி 31ம் தேதி அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள ப்ரூக்ளினில் பிறந்த ஜெசிகா வால்டர் கடந்த மார்ச் 24ம் தேதி இரவு தூங்கிக் கொண்டிருக்கும் போதே தனது மூச்சை நிறுத்திக் கொண்டார். அவருக்கு வயது 80. ஜெசிகாவின் மறைவு செய்தியை அவரது மகள் ப்ரூக் போமேன் அறிவித்துள்ளார்.

    ஜெசிகா வால்டர்

    ஜெசிகா வால்டர்

    1964ம் ஆண்டு வெளியான லில்த் எனும் திரைப்படம் மூலம் அறிமுகமான ஜெசிகா, 1966ம் ஆண்டு வெளியான கிராண்ட் ப்ரிக்ஸ் திரைப்படம் மூலம் சர்வதேச பிரபலமானார். அந்த படத்தில் நடித்ததற்காக சிறந்த நடிகைக்கான கோல்டன் குளோப் விருதுக்கு நாமினேட் செய்யப்பட்டார். நம்பர் ஒன், கோல்டன் கேர்ள், கோஸ்ட் இன் தி மெசின், தி மிமிக் என ஏகப்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார்.

    அரெஸ்டட் டெவலப்மெண்ட்

    அரெஸ்டட் டெவலப்மெண்ட்

    2003ம் ஆண்டு முதல் 2019ம் ஆண்டு வரை ஒளிபரப்பான பிரபல டிவி தொடரான அரெஸ்டட் டெவலப்மெண்ட் தொடரில் லூசில் ப்ளூத் கதாபாத்திரத்தில் நடித்து மிகவும் புகழ் பெற்றவர் ஜெசிகா. மேலும், தி இம்மார்டல்ஸ், மிசன் இம்பாசிபிள், ஆர்ச்சர் மற்றும் இந்த ஆண்டு ஒளிபரப்பாகி வரும் அமெரிக்கன் ஹவுஸ்வைஃப் தொடர் வரை நடித்துள்ளார் ஜெசிகா வால்டர்.

    எம்மி விருதுகள்

    எம்மி விருதுகள்

    இரண்டு முறை கோல்டன் குளோப் விருதுக்காக நாமினேட் செய்யப்பட்ட இவர், ஆமி பிரெண்டிஸ் எனும் தொடரில் சிறப்பாக நடித்ததற்காக எம்மி விருதுகளை வென்றுள்ளார். மேலும், சில ஸ்க்ரின் கில்டு விருதுகளுக்கும் நாமினேட் செய்யப்பட்ட இவர், அந்த விருது குழுவின் தலைவராகவும் சில காலம் பணியாற்றியது குறிப்பிடத்தக்கது.

    பிரபலங்கள் இரங்கல்

    பிரபலங்கள் இரங்கல்

    சுமார் 60 ஆண்டுகளாக ஹாலிவுட்டில் பன்முகத்தன்மையோடு பணியாற்றி வந்த பழம்பெரும் நடிகையின் மறைவை அறிந்த ஏகப்பட்ட ஹாலிவுட் கலைஞர்களும் சக நடிகர்களும் ஜெசிகா வால்டரின் மறைவுக்காக ஆழ்ந்த இரங்கல் தெரிவித்து வருகின்றனர். கடந்த 2019ம் ஆண்டு இவரது கணவர் ரான் லெப்மென் காலமானார். தனது மகளுடன் வசித்து வந்த ஜெசிகாவின் மறைவு ஹாலிவுட்டில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    Read more about: dead மரணம்
    English summary
    Award winning actor Jessica Walter dies at 80. More over 6 decades she serves for Film Industry. Many Hollywood celebrities mourns for her loss.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X