அடுத்த விவாகரத்து.. 500 கோடி வீட்டை விட்டு வெளியேறிய பேட்மேன் நடிகர்.. ஜெனிஃபர் லோபஸ் உடன் சண்டை?
லாஸ் ஏஞ்சல்ஸ்: ஹாலிவுட்டில் பேட்மேனாக நடித்து பிரபலமான பென் அஃப்லெக் மற்றும் அனகோண்டா பட நாயகி ஜெனிஃபர் லோபஸ் இருவரும் கடந்த 2022ம் ஆண்டு திருமணம் செய்துக் கொண்டனர். பல வருடங்களுக்கு முன்பே இருவரும் காதலித்த நிலையில், திருமணம் செய்துக் கொள்ளாமல் வேறு நபர்களை திருமணம் செய்தனர். ஆனால், இருவருக்கும் திருமண வாழ்க்கை செட்டாகாத நிலையில், மீண்டும் இணைவோம் என 2022ல் பிரம்மாண்டமாக திருமணத்தை நடத்தினர்.
கடந்தஆண்டு 500 கோடி ரூபாய்க்கு 12 பெட்ரூம்கள் கொண்ட இஷா அம்பானியின் பிரம்மாண்டமான வீட்டை வாங்கி இருவரும் குடிபுகுந்தனர். 54 வயதாகும் பிரபல ஹாலிவுட் நடிகையும் பாடகியுமான ஜெனிஃபர் லோபஸ் ஏற்கனவே மூன்று கணவர்களை விவாகரத்து செய்து விட்டு 4வதாக பேட்மேன் பட நடிகர் பென் அஃப்லெக்கை திருமணம் செய்துக் கொண்டார்.

இந்நிலையில், பென் அஃப்லெக்கையும் அவர் பிரிந்து விட்டதாக ஹாலிவுட்டில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. அதற்கு முக்கிய காரணமே அந்த அரண்மனையில் இருந்து பென் அஃப்லெக் வெளியேறியது தான் என்கின்றனர்.
4 விவாகரத்தா?: ஹாலிவுட்டின் பிரபல நடிகையும் பாடகியுமான ஜெனிஃபர் லோபஸுக்கு 54 வயதாகிறது. கடந்த ஆண்டு அவர் நடிப்பில் வெளியான தி மதர் திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. சமீபத்தில் ஏஐ டெக்னாலஜியை வில்லனாக்கி அட்லஸ் படத்திலும் நடித்திருந்தார். 1997ம் ஆண்டு ஒஜானி நோஹா என்பவரை திருமணம் செய்த ஜெனிஃபர் லோபஸ் அவருடன் ஒரு வருடம் கூட சேர்ந்து வாழாமல் விவாகரத்து செய்து பிரிந்தார். அதன் பின்னர் கிறிஸ் ஜூட் என்பவரை 2001ம் ஆண்டு திருமணம் செய்து கொண்ட ஜெனிஃபர் லோபஸ் 2003ம் ஆண்டு விவாகரத்து செய்து பிரிந்தார். அடுத்து மார்க் ஆண்டனி என்பவரை 2004ம் ஆண்டு திருமணம் செய்து 2014ம் ஆண்டு வரை சுமார் 10 ஆண்டுகள் வாழ்ந்து விட்டு பிரிந்தார். அடுத்ததாக பென் அஃப்லெக்கையும் பிரிந்து விட்டதாக பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளன.
பேட்மேன் நடிகர்: கடைசியாக 4வது கணவராக பேட்மேன் படங்களில் நடித்து வந்த பென் அஃப்லெக் என்பவரை காதலித்து 50 வயதுக்கு மேல் திருமணம் செய்துக் கொண்டார் ஜெனிஃபர் லோபஸ். கடந்த 2022ம் ஆண்டு இவர்கள் திருமணம் செய்துக் கொண்ட நிலையில், இருவரும் ராஜ வாழ்க்கை வாழ வேண்டும் என இஷா அம்பானிக்கு சொந்தமான பிரம்மாண்ட அரண்மனை வீட்டை இருவரும் இணைந்து வாங்கினர்.
500 கோடி அரண்மனை: சுமார் 38 ஆயிரம் சதுர அடி இடம் கொண்ட பிரம்மாண்ட சொகுசு அரண்மனையை 500 கோடிக்கு வாங்கினர். ஒட்டுமொத்தமாக 12 பெட்ரூம், ஒரு பெரிய நீச்சல் குளம், டென்னிஸ் பால் கோர்ட், ஜிம், ஸ்பா, சலூன், அவுட்டோர் கிட்சன் உள்ளிட்ட பல அம்சங்கள் கொண்ட அழகான வீடு அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸில் உள்ள பீவர்லி ஹில்ஸ் பகுதியில் உள்ளது. பென் அஃப்லெக் இதற்கு முன் இருந்த தனது பங்களா வீடான பசிபிக் பலிசேட்ஸ் வீட்டை 28.5 மில்லியன் டாலருக்கு விற்றுள்ளார். அதே போல ஜெனிஃபர் லோபஸ் பெல் ஏர் எனும் இடத்தில் உள்ள 30 மில்லியன் டாலர் மதிப்புடைய சொத்துக்களை விற்று இந்த வீட்டை வாங்கினர்.
வீட்டை விட்டு வெளியேறிய பென் அஃப்லெக்: இந்நிலையில், திடீரென ஜெனிஃபர் லோபஸுக்கும் பென் அஃப்லெக்குக்கும் இடையே சண்டை வெடித்ததாகவும் அதன் காரணமாக தனது பொருட்களை எடுத்துக் கொண்டு அந்த அரண்மனையை விட்டு பென் வெளியேறியது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. ஏற்கனவே 2005ம் ஆண்டு ஜெனிஃபர் கார்னர் என்பவரை திருமணம் செய்த பென் அஃப்லெக் 2018ல் அவரை விவாகரத்து செய்தது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











