15க்கும் மேற்பட்ட பலாத்கார வழக்குகள்.. கிராமி விருது வென்ற பியோன்ஸின் தயாரிப்பாளர் அதிரடி கைது

லாஸ் ஏஞ்சல்ஸ்: பிரபல அமெரிக்க பாடகி பியோன்ஸ் சமீபத்தில் தான் Black is King என்ற இசை ஆல்பத்தை நடத்தி அசத்தி இருந்தார்.

இந்நிலையில், தற்போது அவரது தயாரிப்பாளர் டீட்டெய்ல் எனும் நோயல் கிறிஸ்டோபர் ஃபிஷர் பலாத்கார வழக்கில் அதிரடியாக கைது செய்யப்பட்டு இருக்கிறார்.

கிட்டத்தட்ட 15க்கும் மேற்பட்ட பலாத்கார வழக்குகள் அவர் மீது போடப்பட்டுள்ளன.

பிளாக் இஸ் கிங்

பிளாக் இஸ் கிங்

அமெரிக்காவில் கருப்பினர்களுக்கு எதிரான வன்மம் தொடர்ந்து வரும் நிலையில், பிளாக் இஸ் கிங் என்ற இசை ஆல்பத்தை பிரபல அமெரிக்க பாடகியான பியோன்ஸ் இசையமைத்து பாடி ஆடி அசத்தி இருந்தார். அவரது இசை ஆல்பம் உலகம் முழுக்க வைரலாகி வருகிறது. டிஸ்னி பிளஸில் அந்த ஆல்பம் வெளியாகி உள்ளது குறிப்பிடத்தக்கது.

பலாத்கார வழக்கு

பலாத்கார வழக்கு

இந்நிலையில், கடந்த புதன்கிழமை பாடகி பியோன்ஸின் தயாரிப்பாளரும் கடந்த 2015ம் ஆண்டு கிராமி விருது வென்றவருமான டீட்டெய்ல் எனப்படும் எனும் நோயல் கிறிஸ்டோபர் ஃபிஷர் கிட்டத்தட்ட 15க்கும் மேற்பட்ட பலாத்கார வழக்கில் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார். இவரது கைது ஹாலிவுட்டில் மிகப்பெரிய அதிர்வை ஏற்படுத்தி உள்ளது.

9 ஆண்டுகள்

9 ஆண்டுகள்

கடந்த 2010ம் ஆண்டு முதல் 2018ம் ஆண்டு வரை கிட்டத்தட்ட 15க்கும் மேற்பட்ட பெண்களை பாடகி பியோன்ஸின் தயாரிப்பாளர் ஃபிஷர் பலாத்காரம் செய்துள்ளதாக அவர் மீது கடந்த ஜூலை 31ம் தேதி வழக்கு பதிவு செய்யப்பட்டது. 41 வயதாகும் இவர், ‘Drunk in Love' எனும் இசைப் பாடலில் பியோன்ஸுடன் இணைந்து பணியாற்றியதில் கிராமி விருது வென்றது குறிப்பிடத்தக்கது.

ஏற்கனவே பலாத்கார வழக்கில்

ஏற்கனவே பலாத்கார வழக்கில்

கடந்த ஆண்டு இதுபோன்ற ஒரு பலாத்கார வழக்கில் சிக்கிய ஃபிஷர், மாடல் அழகி ஒருவருக்கு நஷ்ட ஈடாக 15 மில்லியன் டாலர்களை கொடுத்தது குறிப்பிடத்தக்கது. தற்போது பெயிலில் வர வேண்டுமென்றால், கிட்டத்தட்ட 6.3 மில்லியன் டாலர் அவர் கொடுக்க வேண்டுமாம், அந்த அளவுக்கு வலுவான வழக்கை அவர் மீது லாஸ் ஏஞ்சல்ஸ் போலீசார் பதிவு செய்துள்ளனர்.

More from Filmibeat

Read more about: beyonce arrest கைது
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X