பிளாக் பாந்தர் நாயகன் சட்விக் போஸ்மேன் திடீர் மரணம்.. ஹாலிவுட் ரசிகர்கள் பேரதிர்ச்சி!

லாஸ் ஏஞ்சல்ஸ்: கருப்பின மக்களின் சூப்பர் ஹீரோவாக வலம் வந்த பிளாக் பாந்தர் நாயகன் சட்விக் போஸ்மேன் காலமானார். அவருக்கு வயது 43.

Recommended Video

பிளாக் பாந்தர் நாயகன் சட்விக் போஸ்மேன் காலமானார்

கேன்சர் பாதிப்பு காரணமாக சிகிச்சைப் பெற்று வந்த பிரபல ஹாலிவுட் நடிகர் சட்விக் போஸ்மேன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த செய்தி உலகளவில் உள்ள அவரது ரசிகர்களை பேரதிர்ச்சி கொள்ள செய்துள்ளது.

அமெரிக்காவின் தெற்கு கரோலினாவில் 1976ம் ஆண்டு நவம்பர் 29ம் தேதி பிறந்தவர் சட்விக் போஸ்மேன்.

கேன்சர்

கேன்சர்

பெருங்குடல் புற்றுநோய் பாதிப்பு காரணமாக கடந்த 4 ஆண்டுகளாக சிகிச்சை பெற்று வந்துள்ளார் நடிகர் சட்விக் போஸ்மேன். ஆனால், அதனை வெளிப்படையாக அவர் அறிவித்ததே இல்லை என அவரது குடும்பத்தினர் தற்போது தெரிவித்துள்ளனர். லாஸ் ஏஞ்சல்ஸில் உள்ள தனது வீட்டிலேயே அவரது உயிர் வெள்ளியன்று பிரிந்துள்ளது.

பிளாக் பாந்தர்

பிளாக் பாந்தர்

மார்வெல் யூனிவர்ஸின் தயாரிப்பில் பிரம்மாண்டமாக வெளியான பிளாக் பாந்தர் படத்தில் நாயகனாக நடித்தவர் சட்விக் போஸ்மேன். அயன்மேன், ஸ்பைடர்மேன், ஹல்க், தோர் போல இவருக்கும் மார்வெல் தனிக்கதை படங்களை தயாரித்து இருந்தது. வகாண்டாவின் அரசனான பிளாக் பாந்தர், அவெஞ்சர்ஸ் இன்ஃபினிட்டி வார் மற்றும் அவெஞ்சர்ஸ் எண்ட்கேம் உள்ளிட்ட படங்களில் தானோஸை அழிக்க தனது படையுடன் உதவி செய்வார்.

கருப்பின மக்களின் சூப்பர் ஹீரோ

கருப்பின மக்களின் சூப்பர் ஹீரோ

வகாண்டா எனும் தனி ராஜ்ஜியத்தையே உருவாக்கி அதனை ஆட்சி செய்து வந்த பிளாக் பாந்தர் கதாபாத்திரத்தில் நடித்ததற்காக பல விருதுகளையும், ஒட்டுமொத்த கருப்பின மக்களின் பாராட்டுக்களையும் ஆதரவையும் பெற்றிருந்தார் சட்விக் போஸ்மேன். அவரது இந்த திடீர் மரணம் ஒட்டுமொத்த ஹாலிவுட் திரையுலகத்தையே சோகக் கடலில் ஆழ்த்தி உள்ளது.

ஏகப்பட்ட விருதுகள்

ஏகப்பட்ட விருதுகள்

மார்வெல் யூனிவர்ஸின் பிளாக் பாந்தர் படத்தில் நடித்ததற்காக ஏகப்பட்ட விருதுகளை அள்ளி உள்ளார் சட்விக் போஸ்மேன். சிறந்த ஹீரோ, சிறந்த நடிப்பு என இரு பிரிவுகளில் எம்.டிவி விருதுகளை தட்டிச் சென்றுள்ளார். ஸ்க்ரீன் ஆக்டர்ஸ் கில்டு விருது மற்றும் NAACP இமேஜ் விருதுகள் என ஒட்டுமொத்த விருதுகளையும் பிளாக் பாந்தர் படத்தில் நடித்ததற்காக தட்டிச் சென்றது குறிப்பிடத்தக்கது.

மற்ற படங்கள்

மற்ற படங்கள்

2008ம் ஆண்டு வெளியான தி எக்ஸ்பிரஸ்: தி எர்னி டேவிஸ் ஸ்டோரி படத்தின் மூலம் அறிமுகமான இவர், தி கில் ஹோல், 42, கெட் ஆன் அப், காட்ஸ் ஆஃப் எகிப்த், கேப்டன் அமெரிக்கா: சிவில் வார், மார்ஷல், 21 பிரிட்ஜஸ், டா 5 பிளட்ஸ் உள்ளிட்ட பல சூப்பர் ஹிட் படங்களில் நடித்துள்ளார். மா ரெய்னிஸ் பிளாக் பாட்டம் படம் போஸ்ட் புரொடக்‌ஷனில் உள்ளது குறிப்பிடத்தக்கது. இவரது மரண செய்தி அறிந்து அதிர்ந்து போன பல பிரபலங்களும், ரசிகர்களும் சட்விக் போஸ்மேன் மரணத்திற்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X