twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    மார்வெல் நாயகி ஸ்கார்லெட் ஜோஹன்சனின் ‘பிளாக் விடோ’.. ஹாலிவுட்டுக்கு முன்னாடியே இங்க ரிலீஸ்!

    |

    Recommended Video

    Black Widow release date in India | ‘பிளாக் விடோ’இந்திய வெளியீடு தேதி அறிவிப்பு

    சென்னை: மார்வெல் மாய உலகில் இருந்து எத்தனையோ சூப்பர் ஹீரோக்கள் படம் வெளியாகியுள்ளது.

    அவர்கள் ஒட்டுமொத்தமாக இணைந்து தானோஸை துவம்சம் செய்த அவெஞ்சர்ஸ் எண்ட்கேம் படம் இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் வெளியாகி, அவதார் வசூலை மிஞ்சி உலகளவில் வசூலில் முதலிடத்தை பிடித்துள்ளது.

    அவெஞ்சர்ஸ் எண்ட்கேம் படத்தில் நடித்த முக்கிய சூப்பர் ஹீரோக்களின் தனி கதைகள் படமாக முன்பே வந்திருந்த நிலையில், தற்போது ஸ்கார்லெட் ஜோஹன்சன் நடிப்பில் உருவாகியுள்ள பிளாக் விடோ படம் அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் வெளியாகிறது.

    வேகமாக ஓடிய போது விபரீதம்.. ரியாலிட்டி ஷோவில் மயங்கி விழுந்த பிரபல நடிகர் திடீர் மாரடைப்பால் மரணம்வேகமாக ஓடிய போது விபரீதம்.. ரியாலிட்டி ஷோவில் மயங்கி விழுந்த பிரபல நடிகர் திடீர் மாரடைப்பால் மரணம்

    பிளாக் விடோ

    ஆஸ்திரேலிய இயக்குநர் கேட் ஷார்ட்லேண்ட் இயக்கத்தில் ஹாலிவுட்டின் லேடி சூப்பர் ஸ்டார் ஸ்கார்லெட் ஜோஹன்சன் நடிப்பில் உருவாகியுள்ள பிளாக் விடோ படம் அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் வெளியாகிறது. நடாஷா ரோமனாஃப் மற்றும் பிளாக் விடோ என இரு பெயர்களில் அவெஞ்சர்ஸ் படங்களில் நடித்த ஸ்கார்லெட்டுக்கு இது தான் முதல் தனி படம் என்பது குறிப்பிடத்தக்கது.

    மீண்டும் அயன்மேன்

    இந்த ஆண்டு வெளியான அவெஞ்சர்ஸ் எண்ட்கேம் படத்தில் அயன்மேன் இறுதியில் இறந்துவிடுவார். இதற்கு மேல், மார்வெல் படத்தில் அயன்மேனை காண முடியாது என ரசிகர்கள் வருத்தப்பட்டிருந்த நிலையில், அவெஞ்சர்ஸ் எண்ட்கேமுக்கு முந்தைய காலக்கட்டத்தில் உருவாக்கப்பட்டுள்ள பிளாக் விடோ படத்தில் அயன்மேன் கதாபாத்திரம் வரும் என ரசிகர்கள் எதிர்பார்த்துள்ளனர்.

    ஒரு நாள் முன்பே

    ஹாலிவுட் படமான பிளாக் விடோ அமெரிக்கா மற்றும் உலக நாடுகளில் மே 1ம் தேதி வெளியாகிறது. ஆனால், இந்தியாவில் ஒரு நாள் முன்பாக ஏப்ரல் 30ம் தேதியே ரிலீசாகிறது. கடந்த ஆண்டு ஏப்ரலில் வெளியான அவெஞ்சர்ஸ் எண்ட்கேம் இந்தியாவில் பல நூறு கோடிகளை வசூலித்த நிலையில், பிளாக் விடோ படத்தையும் இந்தியாவில் மார்வெல் பிரம்மாண்டமாக ரிலீஸ் செய்கிறது.

    6 மொழிகளில்

    வழக்கமாக ஆங்கில படங்கள் இந்தியாவில் ரிலீசானால், அதிக மார்க்கெட் உள்ள தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி மொழிகளில் மட்டுமே ரிலீஸ் செய்து வந்த நிலையில், பிளாக் விடோ படம் இந்தியாவில் 6 மொழிகளில் ரிலீசாக உள்ளது. தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி மற்றும் ஆங்கிலம் மொழிகளில் பிளாக் விடோ இந்தியாவில் வெளியாகிறது.

    Read more about: black widow marvel
    English summary
    Scarlett Johansson's stand-alone ‘Black Widow’ film will now release in India on April 30, 2020 - a day before its release in the US.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X