»   »  ஹாலிவுட்டில் நடிக்கப் போகும் பாலிவுட் இளவரசர்

ஹாலிவுட்டில் நடிக்கப் போகும் பாலிவுட் இளவரசர்

Posted By:
Subscribe to Oneindia Tamil

மும்பை: பாலிவுட்டின் இளவரசர் என்று வர்ணிக்கப்படும் நீல் நிதின் முகேஷ், அமெரிக்காவின் பிரபல தொலைக்காட்சித் தொடரான கேம்ஸ் ஆப் த்ரோனில் நடிக்கும் வாய்ப்பைப் பெற்றிருக்கிறார்.

பாலிவுட்டின் இளம் நடிகர்களில் குறிப்பிடத்தகுந்தவர் நீல் நிதின் முகேஷ் இவர் தற்போது, பிரேம் ரத்தன் தான் பாயோ திரைப்படத்தில் சல்மான் கானின் சகோதரராக நடித்திருக்கிறார்.

Neil Nitin Mukesh

இப்படம் தமிழ், தெலுங்கு மற்றும் ஹிந்தி மொழிகளில் வருகின்ற 12 ம் தேதி உலகம் முழுவதும் வெளியாகிறது. இந்நிலையில் அமெரிக்காவில் மிகவும்

புகழ்பெற்ற மற்றும் பலகோடிப் பேரால் பார்த்து ரசிக்கக் கூடிய தொலைக்காட்சித் தொடரில் நடிக்கும் வாய்ப்பை நீல் பெற்றிருக்கிறார்.

கேம் ஆப் த்ரோன்ஸ் என்று பெயரில் வெளியாகும் அந்தத் தொடர் பேன்டஸி வகையைச் சேர்ந்தது. திடீர்திடீரென்று இந்த நாடகத்தில் வருபவர்களை சாகடித்து புதிய முகங்களை அறிமுகம் செய்வதில் பெயர் பெற்றது இந்த தொடர்.(நம்ம ஊரு சீரியல்களில் இனி இவருக்குப் பதிலாக இவர் என்று கூறுவார்களே அதே போல)

இந்தத் தொடரானது நிர்வாண காட்சிகளுக்கும் பெயர் பெற்றது சமீபத்திய பேட்டியில் நீலிடம் இதனைப் பற்றிக் கேட்டபோது "காட்சிக்கு அவசியம் என்றால் ஏன் நடிக்கக் கூடாது.

நிர்வாணமாக நடிப்பது ஒன்றும் தவறல்ல நான் ஏற்கனவே எனது முந்தைய படத்தில் (ஜெயில் 2009) இதே போன்று நடித்திருக்கிறேன். மேலும் இயக்குனர்கள் சொல்வதைக் கேட்பதுதான் எனது வேலை என்று கூறியிருக்கிறார்.

இந்தத் தொடரில் நீலின் நடிப்பை மக்கள் விரும்புகிறார்களா என்பது 2ம் பட்சம்தான் ஆனால் கண்டிப்பாக இது அவரது திரை வாழ்க்கையில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்தும் என்று பாலிவுட் நட்சத்திரங்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர்.

English summary
Bollywood Young Actor Neil Nitin Mukesh Debut in Hollywood Series. He is Offered a role in the popular American television series Game of Thrones.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil