twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    பாக்ஸ் ஆபீஸில் புஸ்ஸாகிப்போன எக்ஸ்பான்டபிள் 3!

    By Shankar
    |

    பெரிதும் எதிர்ப்பார்க்கப்பட்ட எக்ஸ்பான்டபிள் 3 திரைப்படம் சர்வதேச பாக்ஸ் ஆபீசில் எதிர்ப்பார்த்த அளவு வசூலைக் குவிக்கவில்லை.

    மாறாக இந்தப் படத்துக்கு போட்டியாக வெளியான டீனேஜ் மியூடன்ட் நிஞ்ஜா டர்ட்ல்ஸ் மற்றும் கார்டியன் ஆப் தி கேலக்ஸி படங்கள் நல்ல வசூலுடன் முன்னணியில் உள்ளன.

    எக்பான்டபிள் சீரிஸ்

    எக்பான்டபிள் சீரிஸ்

    எக்ஸ்பேன்டபிள் முதல் பாகம் கடந்த 2010-ம் ஆண்டு வெளியானது. எண்பதுகள்- தொன்னூறுகளில் பிரபலமாக இருந்த ஆக்ஷன் ஹீரோக்களை ஒன்றிணைத்து மிரட்டலான ஆக்ஷன் படம் தருவதுதான் இந்த எக்ஸ்பான்டபிள் வரிசைப் படங்களின் நோக்கம்.

    படா நடிகர்கள்

    படா நடிகர்கள்

    அர்னால்ட் ஸ்வார்ஷ்நேகர், சில்வஸ்டர் ஸ்டல்லோன், ஹாரிஸன் போர்ட், ஜெட் லி, மெல் கிப்ஸன் என பெரிய நட்சத்திரங்கள் நடித்த படம் இது. முதல் பாகம் 35 மில்லியன் டாலர்களை ஆரம்ப வாரத்தில் குவித்தது.

    இரண்டாம், மூன்றாம் பாகங்கள்

    இரண்டாம், மூன்றாம் பாகங்கள்

    இதன் இரண்டாம் பாகம் 2012-ல் வெளியானது. இதே நட்சத்திரங்கள்தான் அந்தப் படத்திலும், அதுவும் 28 மில்லியன் டாலர்களை முதல் வாரத்தில் குவித்தது.

    ஆனால் இந்த மூன்றாவது பாகம் வெறும் 16.2 மில்லியன் டாலர்களை மட்டுமே ஈட்டியுள்ளது.

    ஜெயித்த ஆமை

    ஜெயித்த ஆமை

    இந்தப் படத்துடன் வெளியான டீனேஜ் மியூடன்ட் நிஞ்ஜா டர்ட்ல்ஸ் 28.4 மில்லியன் டாலர்களையும், கார்டியன்ஸ் ஆப் தி கேலக்ஸி 24.7 மில்லியன் டாலர்களையும் வசூலித்துள்ளன. லெட்ஸ் பி காப்ஸ் படம் 17.7 மில்லியன் டாலர்களை வசூலித்து மூன்றாம் இடத்தில் உள்ளது.

    வசூல் குறைவு

    வசூல் குறைவு

    எக்பான்டபிள் 3 படத்துக்கு 16.2 மில்லியன் டாலர்களை ஈட்டியுள்ளது. இது கடந்த இரண்டு பாகங்களோடு ஒப்பிடுகையில் மிகவும் குறைவாகும்.

    அடுத்த வாரம் இந்தப் படத்தின் வசூல் 15 மில்லியன் டாலர் வரை இருக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. ஆனால் அப்போது இந்தப் படம் ஏழாவது இடத்திலிருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.

    English summary
    The much hyped and expected Expandable 3 is not doing well in the box office, according to international box office reports.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X