நடிகர் பிராட் பிட் ஏஞ்சலினா ஜூலியை காதலிக்கவில்லை, அப்படின்னா ஏன் பிரியவில்லை?: 'சைக்கிக்' விளக்கம்
நியூயார்க்: ஹாலிவுட் நடிகர் பிராட் பிட் தனது லிவ் இன் பார்ட்னரான நடிகை ஏஞ்சலினா ஜூலியை காதலிக்கவில்லை, 6 குழந்தைகளுக்காக தான் அவருடன் சேர்ந்து வாழ்கிறார் என்று நடப்பவற்றை கணித்துக் கூறும் ரான் பார்ட் என்பவர் தெரிவித்துள்ளார்.
ஹாலிவுட்டின் அழகிய தம்பதியாக வலம் வந்தவர்கள் நடிகர் பிராட் பிட்டும், நடிகை ஜெனிபர் ஆனிஸ்டனும். இந்நிலையில் மிஸ்டர் அன்ட் மிஸ்ஸஸ் ஸ்மித் படத்தில் நடிக்கையில் பிராட் நடிகை ஏஞ்சலினா ஜூலி மீது காதல் கொண்டு மனைவி ஆனிஸ்டனை பிரிந்தார்.
இந்நிலையில் பிராட் பிட்டின் சைக்கிக் அதாவது நடப்பதை முன்கூட்டியே கூறுபவரான ரான் பார்ட் சில திடுக்கிடும் தகவல்களை தெரிவித்துள்ளார். அவர் கூறுகையில்,

ஆனிஸ்டன்
பிராட் பிட்டை கடந்த 2004ம் ஆண்டு ஜெனிபர் ஆனிஸ்டன் தான் எனக்கு அறிமுகப்படுத்தி வைத்தார்.

காதல்
கடந்த 2005ம் ஆண்டு பிராட் பிட் மிஸ்டர் அன்ட் மிஸ்ஸஸ் ஸ்மித் படத்தில் நடிக்கையில் நீங்கள் ஒருவரை சந்திப்பீர்கள், அவரால் உங்கள் வாழ்க்கையே மாறிவிடும் என்றேன். அந்த ஆண்டே பிராட் ஆனிஸ்டனை பிரிந்து ஜூலியுடன் சென்றுவிட்டார்.

பிராட் பிட்
பிராட் பிட் ஜூலியை காதலிக்கவில்லை அவர் 6 குழந்தைகளுக்காக தான் அவருடன் சேர்ந்து வாழ்கிறார். மேலும் அவர் பிரிந்து வந்தால் அவரின் இமேஜ் கெட்டுவிடும் என்று நினைக்கிறார் பிட்.

குழந்தைகள்
பிராட் பிட் ஜூலியுடனான உறவை விட குழந்தைகளை தான் மிகவும் நேசிக்கிறார். அவர் தனக்கு எது சரி என்று தோன்றுகிறதோ அதை தான் செய்வார்.

இன்னும்
பிராட் பிட் தனது மனைவி ஜெனிபர் ஆனிஸ்டனை விவாகரத்து செய்துவிட்டாலும் இன்னும் அவர் ஆனிஸ்டனை காதலிக்கிறார்.

திருமணம்
பிட்டும், ஜூலியும் ரகசியமாக திருமணம் செய்திருக்க வேண்டும். அப்படி இல்லை என்றால் அது இன்னும் சில மாதங்களில் நிச்சயம் நடக்கும் என்றார் பார்ட்.

6 குழந்தைகள்
பிராட் பிட், ஜூலிக்கு பிறந்த குழந்தைகள் 3, அவர்கள் தத்தெடுத்த குழந்தைகள் 3 என்று மொத்தம் 6 குழந்தைகள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











