»   »  ஆஹா, அந்த ஹாலிவுட் ஜோடி பிரிய கள்ளத்தொடர்பு காரணமாம்!

ஆஹா, அந்த ஹாலிவுட் ஜோடி பிரிய கள்ளத்தொடர்பு காரணமாம்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

லாஸ் ஏஞ்சல்ஸ்: தான் ஒரு குடிகாரன், கள்ளத்தொடர்பு வைத்திருப்பவன், போதைப்பொருள் அடிமை என்று கூறி விவாகரத்து கோரியுள்ள ஹாலிவுட் நடிகை ஏஞ்சலினா ஜூலி மீது அவரது கணவரும், நடிகருமான பிராட் பிட் கடும் கோபத்தில் உள்ளார்.

ஹாலிவுட்டின் பிரபல ஜோடியான பிராஞ்சலினா பிரிந்துவிட்டார்கள். தனது கணவரும், நடிகருமான பிராட் பிட்டிடம் இருந்து விவாகரத்து கோரி லாஸ் ஏஞ்சல்ஸ் நீதிமன்றத்தில் கடந்த திங்கட்கிழமை மனு தாக்கல் செய்துள்ளார் ஜூலி.

மனுவில் பிராட் பிட் மீது ஏகப்பட்ட குற்றச்சாட்டுகளை சுமத்தியுள்ளார் ஜூலி.

குடி, போதை

குடி, போதை

பிராட் பிட் அளவுக்கு அதிகமாக குடிக்கிறார், போதைப் பொருட்களுக்கு அடிமையாக உள்ளார். மேலும் அவருக்கு அடிக்கடி கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு கோபம் வருவதால் அவரால் குழந்தைகளுக்கு நல்ல தந்தையாக இருக்க முடியாது என்று ஜூலி மனுவில் தெரிவித்துள்ளார்.

கள்ளத்தொடர்பு

கள்ளத்தொடர்பு

பிராட் பிட்டும், மரியான் கோட்டில்லார்ட் என்ற நடிகையும் சேர்ந்து அல்லைட் என்கிற ஹாலிவுட் படத்தில் நடித்து வருகிறார்கள். இந்நிலையில் ஜூலி துப்பறியும் நிபுணர்களை வைத்து பிட், கோட்டில்லார்டு இடையே கள்ளத்தொடர்பு இருப்பதை கண்டுபிடித்தாராம்.

விவாகரத்து

விவாகரத்து

நடிகை மரியானுடன் பிட் கள்ளத் தொடர்பு வைத்திருப்பது உறுதியான பிறகு தான் ஜூலி விவாகரத்து கோரி நீதிமன்றம் சென்றுள்ளாராம். ஜூலி கூறியுள்ள குற்றச்சாட்டுகளால் பிட் அவர் மீது கோபத்தில் உள்ளார்.

பிராட் பிட்

பிராட் பிட்

ஜூலி என் மீது கூறியுள்ள குற்றச்சாட்டுகள் வருத்தம் அளிக்கின்றது. நான் நல்ல தந்தையாக இருக்க முடியாது என்று கூறியுள்ளார். பெரியவர்களை போன்று நடந்து கொள் என்று கூறியும் ஜூலி அனைவருக்கும் தெரியும் வகையில் விவாகரத்து கோரியுள்ளார் என்கிறார் பிட்.

English summary
Hollywood actor Brad Pitt is furious at actress Angelina Jolie for accusing him as a bad father who is addicted to alcohol and drugs.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil