ஆஸ்கர் விருது விழா: ஏஞ்சலீனா ஜோலி வடிவமைத்த நகைகளை அணிந்து அழகுக் காட்டிய பிராட் பிட்
லாஸ் ஏஞ்சலெஸ்: நல்ல திறமையான நடிகை மற்றும் மனித நேய மிக்கவர் என மக்களால் அறியப் பட்ட பிரபல நடிகை ஏஞ்சலீனா ஜோலி தற்போது மிகச்சிறந்த நகை மற்றும் ஆடை வடிவமைப்பாளர் எனத் தெரிய வந்துள்ளது.
அதற்குச் சாட்சியாக ஆஸ்கர் பட விழாவுக்கு வந்த நடிகர் பிராட் பிட்டின் உடையை அலங்கரித்த டிசைனர் நகைகள் அவரது அன்புக்குரிய ஏஞ்சலீனா ஜோலி வடிவமைத்து டிசைன் செய்தது என தகவல் வெளியாகியுள்ளது.
அழகான நடிகையான ஏஞ்சலீனா ஜோலி, நகைகள் விடிவமைப்பிலும் கில்லாடி என்பதைப் பறை சாற்றும் வகையில் அமைந்திருந்தது பிராட் பிட்டின் ஆடைகள். ஆஸ்கர் விருது விழாவுக்கு வந்திருந்த அனைவரது கண்களும் பிராட் பிட்டின் உடை மீதே இருந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அழகோ அழகு...
ஏஞ்சலீனா ஜோலி வடிவமைத்த நகைகளை அணிந்து கொண்டுதான் 86வது வருடாந்திர ஆஸ்கர் விருது விழா மற்றும் ரெட் கார்பெட் நிகழ்ச்சிக்கு வந்திருந்தார் பிராட் பிட்.

தங்கத்துக்கே தங்கமா....
அவர் அணிந்திருந்த கம்பீரான டக்ஸெடோ டிரஸ்ஸில் இடம் பெற்றிருந்த பட்டன்கள், கப்லிங்க்ஸ் போன்றவை பிராட் பிட்டின் கம்பீரத்தை இன்னும் தூக்கலாகக் காண்பித்தன.

கிறிஸ்துமஸ் கிப்ட்...
அவை வைரம் மற்றும் தங்கத்தால் ஆனவை என்பது போனஸ் செய்தி. உண்மையில் இதை கிறிஸ்துமஸ் கிப்ட்டாக ஜூலி, பிட்டிடம் கொடுத்திருந்தார்.

ஆஸ்கர் விருது விழா...
தனது மனைவியின் அன்புப் பரிசான அதை ஆஸ்கர் விழாவுக்கு அணிந்து வந்ததன் மூலம் ஜூலியின் திறமையை வெளிச்சத்துக்கு கொண்டு வந்து விட்டார் பிராட்.


Click it and Unblock the Notifications











