»   »  இளம் நடிகையால் விவாகரத்தை நோக்கி ஏஞ்சலினா ஜூலி- பிராட் பிட்?

இளம் நடிகையால் விவாகரத்தை நோக்கி ஏஞ்சலினா ஜூலி- பிராட் பிட்?

Posted By:
Subscribe to Oneindia Tamil

லாஸ் ஏஞ்சல்ஸ்: ஹாலிவுட் நடிகர் பிராட் பிட்டும், அவரது மனைவியும், நடிகையுமான ஏஞ்சலினா ஜூலியும் விவாகரத்து பெற உள்ளதாக கூறப்படுகிறது.

ஹாலிவுட் நடிகர் பிராட் நடிகை ஜெனிபர் ஆனிஸ்டனை திருமணம் செய்து வாழ்ந்து வந்தபோது நடிகை ஏஞ்சலினா ஜூலிக்காக அவரை விவாகரத்து செய்தார். ஜூலியும், பிட்டும் பல ஆண்டுகளாக லிவ் இன் முறைப்படி வாழ்ந்து 3 குழந்தைகளை பெற்றெடுத்தனர், 3 குழந்தைகளை தத்தெடுத்தனர்.

குழந்தைகளின் நச்சரிப்பால் ஒரு வகையாக கடந்த 2014ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர்.

பிராட்

பிராட்

பிராட் பிட் மாடலும், நடிகையுமான காரா டெலவிஞ்ச்(23) என்பவருடன் ஓவர் நெருக்கம் காட்டி வருகிறார். காரா மாதிரி ஒரு திறமைசாலி இல்லை. அவர் நிச்சயம் ஒரு நாள் ஆஸ்கர் விருது வாங்குவார் என்று பார்ப்பவர்களிடம் எல்லாம் கூறி வருகிறாராம்.

நடிகை

நடிகை

காராவை தனது படத்தில் நடிக்க வைக்க அவரிடம் கேட்டதற்கு மறுத்துவிட்டார். இருப்பினும் அவரை எப்படியாவது தனது படத்தில் நடிக்க வைக்க வேண்டும் என்று முயற்சி செய்து வருகிறார் பிட்.

ஜூலி

ஜூலி

பிராட் பிட் காராவுடன் நெருக்கம் காட்டுவது ஜூலிக்கு சுத்தமாக பிடிக்கவில்லையாம். மேலும் ஜூலி நாளுக்கு நாள் எலும்பும் தோலுமாக ஆவதால் அவரை கண்டால் பிட்டுக்கு பிடிக்கவில்லையாம்.

விவாகரத்து

விவாகரத்து

ஜூலி பிராட் பிட்டின் சேட்டையால் தான் நாளுக்கு நாள் மெலிந்து கொண்டே போகிறாராம். இனியும் சேர்ந்து வாழ முடியாது என்ற முடிவுக்கு இருவரும் வந்துவிட்டார்களாம். விரைவில் அவர்கள் விவாகரத்து கோரக்கூடும் என்று கூறப்படுகிறது.

English summary
Buzz is that Hollywood couple Brad Pitt and Angelina Jolie are heading towards divorce because of his closeness with a young actress.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil