கரு சிதைந்த கவலை மறப்பதற்குள்ளே 3வது திருமணத்தை முடித்த பிரிட்னி ஸ்பியர்ஸ்.. டிரெண்டாகும் பிக்ஸ்!

லாஸ் ஏஞ்சல்ஸ்: பிரபல பாப் பாடகி பிரிட்னி ஸ்பியர்ஸ் தனது 3வது திருமணத்தை செய்து கொண்டார்.

தன்னை விட பல வருடங்கள் வயது குறைவான அமெரிக்க நடிகர் சாம் அஸ்காரியுடன் கடந்த ஆண்டு நிச்சயம் செய்து கொண்ட நிலையில், சமீபத்தில் கர்ப்பமாக இருப்பதாக அறிவித்தார்.

ஆனால், எதிர்பாராத விதமாக வயிற்றிலேயே அந்த சிசு கலைந்து விட்ட சோகத்தை சமீபத்தில் பதிவிட்ட நிலையில், தற்போது திடீரென திருமணத்தை கோலாகலமாக நடத்தி முடித்திருக்கிறார் பிரிட்னி ஸ்பியர்ஸ்.

பாப் இளவரசி

பாப் இளவரசி

பாப் உலகின் இளவரசி என அழைக்கப்பட்டு வரும் பிரபல பாடகி, பாடலாசிரியர், டான்ஸர் என பல பரிமாணங்களை கொண்டவர் பிரிட்னி ஸ்பியர்ஸ். 15 வயதில் இருந்தே பல இசை மேடைகளில் பாடி ரசிகர்களை கவர்ந்து வரும் பிரிட்னி ஸ்பியர்ஸுக்கு தற்போது 40 வயதாகிறது. பேபி ஒன் மோர் டைம், ஐ டிட் இட் அகைன் உள்ளிட்ட இவரது ஆல்பங்கள் உலகளவில் பிரபலமானவை.

3வது முறையாக

3வது முறையாக

கடந்த 2004ம் ஆண்டு ஜேசன் ஆலன் அலெக்ஸாண்டர் என்பவரை திருமணம் செய்து கொண்ட இவர் அந்த ஆண்டே அவரை விட்டு பிரிந்து கெவின் ஃபெடர்லைன் எனும் அமெரிக்க பாடகரை திருமணம் செய்து கொண்டார். ஆனால், அந்த திருமணமும் ரொம்ப வருஷம் நீடிக்கவில்லை. 2007ம் ஆண்டு அவரை விவாகரத்து செய்த பிரிட்னி ஸ்பியர்ஸ் இத்தனை ஆண்டுகள் தனிமையில் இருந்து வந்த நிலையில், கடந்த சில ஆண்டுகளாக சாம் அஸ்காரி என்பவரை காதலித்து கடந்த ஆண்டு நிச்சயம் செய்துக் கொண்டார்.

கரு சிதைந்தது

கரு சிதைந்தது

காதலருடன் எல்லை மீறி பழகியதில் வயிற்றில் கரு உருவாகி விட்டது என சமீபத்தில் அறிவித்து தனது சந்தோஷத்தை வெளிப்படுத்தி இருந்தார். மேலும், விரைவிலே இருவரும் திருமணம் செய்து கொள்ளப் போவதாகவும் அறிவித்தார். ஆனால், எதிர்பாராத விதமாக சில வாரஙக்ளுக்கு முன்னதாக வயிற்றிலேயே அவரது கரு சிதைந்து விட்டதாக வருத்தத்துடன் தெரிவித்தார்.

களைகட்டிய திருமணம்

களைகட்டிய திருமணம்

கரு சிதைந்ததும் இருவரும் பிரிந்து விடுவார்கள், திருமணம் செய்து கொள்ளமாட்டார்கள் என ஏகப்பட்ட வதந்திகள் ஹாலிவுட்டில் உலா வந்தன. ஆனால், திடீரென தற்போது திருமணம் செய்து கொண்ட புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு ஃபேரிடேல் என்பது பொய் அல்ல எனக் குறிப்பிட்டுள்ளார்.

ராயல் லுக்

ராயல் லுக்

கருப்பு நிற கோட் அணிந்து செம ஹேண்ட்ஸம் ஆக சாம் அஸ்காரியும் வெள்ளை நிற கவுனில் ஏஞ்சல் போல 41 வயது பிரிட்னி ஸ்பியர்ஸும் மணமக்களாக மேடையை அலங்கரித்தனர். திருமணமான சந்தோஷத்தை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து கொண்ட பிரிட்னி ஸ்பியர்ஸ் ஏகப்பட்ட கல்யாண புகைப்படங்களையும் ஷேர் செய்துள்ளார்.

மடோனா லிப் கிஸ்

மடோனா லிப் கிஸ்

ஹாலிவுட் பிரபலங்கள் பலரும் இந்த திருமணத்தில் பங்கேற்றுள்ளனர். பிரிட்னி ஸ்பியர்ஸின் உதட்டிலேயே மடோனா முத்தம் கொடுத்த புகைப்படத்தையும் ஷேர் செய்துள்ளார். செலினா கோமஸ் உள்ளிட்ட பல ஹாலிவுட் பிரபலங்கள் இந்த திருமணத்தில் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தி உள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X