வைர பிரேஸ்லெட் திருடிய பிரிட்னி ஸ்பியர்ஸ் முன்னாள் கணவர்.. கொத்தாக தூக்கி கைது செய்த போலீஸ்!

லாஸ் ஏஞ்சல்ஸ்: பிரபல அமெரிக்க பாடகி பிரிட்னி ஸ்பியர்ஸ் சமீபத்தில் 3வது திருமணம் செய்துக் கொண்டார்.

பிரிட்னி ஸ்பியர்ஸின் முதல் கணவரான ஜேஸன் அலெக்சாண்டர் வைர பிரேஸ்லெட் திருடிய வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளது ஹாலிவுட்டில் பரபரப்பை கிளப்பி உள்ளது.

அந்த வைர பிரேஸ்லெட்டின் மதிப்பு சுமார் 400 டாலர்கள் எனக் கணக்கிடப்பட்டுள்ளது.

முதல் கணவர்

முதல் கணவர்

பிரபல அமெரிக்க பாடகி பிரிட்னி ஸ்பியர்ஸ் இந்த ஆண்டு தனது பாய் பிரெண்ட் சாம் அஸ்காரி என்பவரை 3வதாக திருமணம் செய்து கொண்டார். அதற்கு முன்னதாக 2004ம் ஆண்டு கெவின் ஃபெடர்லைன் என்பவரை இரண்டாவதாக திருமணம் செய்த பிரிட்னி ஸ்பியர்ஸ் 2007ல் அவரை விவாகரத்து செய்தார். கெவினுக்கு முன்னதாக அதே 2004ல் ஜேசன் அலெக்ஸாண்டரை திருமணம் செய்து கொண்டார். சட்டப்படி அவர் தான் பிரிட்னி ஸ்பியர்ஸின் முதல் புருஷன்.

55 மணி நேரத்தில் விவாகரத்து

55 மணி நேரத்தில் விவாகரத்து

கேட்க என்னமோ வடிவேலு காமெடி போல இருந்தாலும், அதை விட ஷாக்கான சம்பவமாக திருமணம் ஆன 55 மணி நேரத்திலேயே ஜேசன் அலெக்ஸாண்டருடன் செட் ஆகாது என புரிந்து கொண்டு அதிரடியாக அவரை விவாகரத்து செய்து அதே ஆண்டு கெவினை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டார் பிரிட்னி ஸ்பியர்ஸ்.

பிரிட்னி ஸ்பியர்ஸ் முதல் கணவர் கைது

பிரிட்னி ஸ்பியர்ஸ் முதல் கணவர் கைது

இந்நிலையில், பாடகி பிரிட்னி ஸ்பியர்ஸின் அந்த 55 மணி நேர முதல் கணவர் ஜேசன் அலெக்ஸாண்டர் கைது செய்யப்பட்டு இருப்பது ஹாலிவுட்டையே பரபரப்பாக்கி உள்ளது. அதுவும் ஒரு நகை திருட்டு வழக்கில் சிக்கி இருக்கிறார் ஜேசன். நல்லவேளை அப்பவே பிரிட்னி ஸ்பியர்ஸ் அவரை பிரிந்து விட்டார் என ரசிகர்கள் கமெண்ட் போட்டு வருகின்றனர்.

வைர பிரேஸ்லெட்

வைர பிரேஸ்லெட்

வாடகைக்கு குடியிருந்த ஓனரிடமே கடந்த 2015ம் ஆண்டு அவரது வைர பிரேஸ்லெட்டை திருடி இருக்கிறார் ஜேசன் அலெக்ஸாண்டர். அந்த வழக்கு 2016ம் ஆண்டு பதிவு செய்யப்பட்டு, கைது செய்யப்பட்ட ஜேசன் அலெக்ஸாண்டர் வெஞ்சுரா சிறையில் இருந்து நபா கவுண்டி சிறைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X