காதலர் பிறந்தநாள் கொண்டாட்டம்.. கடற்கரையில் முழு நிர்வாண போஸ்.. ரசிகர்களை திணறடித்த பிரபல பாடகி!
லாஸ் ஏஞ்சல்ஸ்: பிரபல அமெரிக்க பாடகி பிரிட்னி ஸ்பியர்ஸ் முழு நிர்வாணமாக கடற்கரையில் அலையோடு விளையாடும் ஏகப்பட்ட புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஷேர் செய்து இணையத்தையே அதிர வைத்துள்ளார்.
சர்ச்சைக்கும் சாதனைக்கும் கொஞ்சம் கூட பஞ்சம் இல்லாத 40 வயது பாடகி பிரிட்னி ஸ்பியர்ஸுக்கு உலகளவில் ரசிகர்கள் உள்ளனர்.
தனது காதலர் சாம் அஸ்காரியின் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் மூழ்கி இருக்கும் அவர் இப்படி நிர்வாண கோலத்தில் புகைப்படங்களை ஷேர் செய்து பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளார்.

அமெரிக்க பாடகி
சர்வதேச ரசிகர்களை தனது மாயக் குரலால் கட்டிப் போட்டவர் பிரபல அமெரிக்க பாடகி பிரிட்னி ஸ்பியர்ஸ். நிர்வாண புகைப்படங்களை வெளியிட்டு ஏகப்பட்ட சர்ச்சைகளை கிளப்பிய இவர் மீண்டும் நிர்வாணமாக பல புகைப்படங்களை தற்போது வெளியிட்டு ஒட்டுமொத்த ரசிகர்களையும் ஷாக் ஆக்கி உள்ளார்.

இளம் வயது காதலர்
40 வயதாகும் பாடகி பிரிட்னி ஸ்பியர்ஸ் 28 வயதாகும் ஃபிட்னஸ் டிரைனர் சாம் அஸ்காரி என்பவரை காதலித்து வருகிறார். இருவரும் சமீபத்தில் நிச்சயமும் செய்து கொண்டனர். விரைவில் இருவரும் திருமணம் செய்து கொள்ளப் போவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. ஏற்கனவே ஜேசன் ஆலன் அலெக்ஸாண்டர் மற்றும் கெவின் ஃபெடர்லைன் என இருவரை திருமணம் செய்து பின்னர் விவாகரத்தும் செய்தவர் பிரிட்னி ஸ்பியர்ஸ்.

ஒட்டுத் துணியில்லாமல்
சர்ச்சைக்கு கொஞ்சமும் பஞ்சமில்லாத பாடகி பிரிட்னி ஸ்பியர்ஸ் தற்போது தனது காதலருடன் அவரது பிறந்தநாளை முன்னிட்டு தீவு ஒன்றில் ஹாலிடேவை கொண்டாடி வருகிறார். தனது காதலருக்கு முன்னர் கடற்கரையில் முழு நிர்வாணமாக படுத்து விளையாடும் புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் ஷேர் செய்துள்ளார்.

காதலர் க்ளிக் செய்தவை
இந்த நிர்வாண புகைப்படங்களை எல்லாம் பிரிட்னி ஸ்பியர்ஸின் காதலர் தான் க்ளிக் செய்துள்ளார் என்றும் பிரைவேட் பீச்சில் தான் இப்படி முழு நிர்வாணமாக போஸ் கொடுத்து அந்த போட்டோக்களை இன்ஸ்டாகிராமில் ஷேர் செய்திருக்கிறார் பிரிட்னி ஸ்பியர்ஸ் என்றும் கூறுகின்றனர்.

டைமண்ட் எமோஜி
ஒட்டுத் துணி இல்லாமல் முழு நிர்வாணமாக போட்டோக்களை எடுத்தாலும், முக்கியமான அங்கங்களை டைமண்ட் எமோஜியை வைத்து மறைத்தபடி தான் பிரிட்னி ஸ்பியர்ஸ் இந்த போட்டோக்களை ஷேர் செய்துள்ளார். அதற்கும் மேல் ஆபாசமாக போட்டோக்களை பதிவிட்டால், இன்ஸ்டாகிராம் தூக்கிவிடும் என்பதால் இப்படி மறைத்துள்ளார் என்றும் கூறப்படுகிறது.

பிறந்தநாள் எப்போது
வரும் மார்ச் 4ம் தேதி தான் பிரிட்னி ஸ்பியர்ஸின் இளம் வயது காதலர் சாம் அஸ்காரியின் பிறந்தநாள் வருகிறது. பிறந்தநாளை முன்னிட்டு ஒரு வாரத்திற்கு ஒரே கொண்டாட்டமாக தனித் தீவில் கும்மாளம் போட்டு வருகிறார். அந்த புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் ஷேர் செய்ய அது காட்டுத் தீ போல பரவி வருகிறது.


Click it and Unblock the Notifications











