லாக்டவுன் தந்த வாய்ப்பு... விவகாரத்து ஆன நடிகையுடன் திடீரென்று இணைந்த பிரபல ஹாலிவுட் நடிகர்!

By

லாஸ் ஏஞ்சல்ஸ்: விவாகரத்து ஆன தனது மனைவியுடன் ஒன்று சேர்ந்திருக்கிறார் பிரபல ஹாலிவுட் நடிகர்.

கொரோனா வைரஸ் உலகையே அச்சுறுத்திக் கொண்டிருக்கிறது. அதைக் கட்டுப்படுத்த உலக நாடுகள் தீவிரம் காட்டி வருகின்றன.

இத்தாலி, அமெரிக்கா, பிரான்ஸ், ஸ்பெயின் உள்ளிட்ட நாடுகளில் இந்த வைரஸ் கடும் பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது.

தனிமைப்படுத்தி

தனிமைப்படுத்தி

அமெரிக்காவில் இதன் பாதிப்பு தீவிரமாக இருக்கிறது. அங்கு உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை, நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் அங்கும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மக்கள் வெளியில் செல்ல வேண்டாம் என்று கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. இதனால் வீடுகளுக்குள் தங்களை தனிமைப்படுத்திக் கொண்டு அவர்கள் முடங்கி கிடக்கின்றனர்.

நடிகை டெமி மூர்

நடிகை டெமி மூர்

இருந்தும் இந்த உயிர்கொள்ளி வைரஸ் வேகமாக அங்கு பரவி வருகிறது. இந்நிலையில் பிரபல ஹாலிவுட் நடிகர் புரூஸ் வில்லிஸ், தனது விவாகரத்தான மனைவியும் நடிகையுமான டெமி மூருடன் வசித்து வருவதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன. பிரபல ஹாலிவுட் நடிகரான புரூஸ் வில்லிஸ், டெத் பிகம்ஸ் ஹர், பல்ப் பிக்சன், 12 மங்கிஸ், த பிஃப்த் எலிபென்ட், த எக்ஸ்பண்டபிள்ஸ் 2 உட்பட பல்வேறு படங்களில் நடித்துள்ளார்.

திருமணம்

திருமணம்

இவரும் நடிகை டெமி மூரும் காதலித்து 1987 ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டனர். இவர்களுக்கு மூன்று குழந்தைகள் உள்ளனர். பின்னர் இரண்டாயிரமாவது ஆண்டில் விவாகரத்து பெற்றனர். நடிகை டெமி மூர், விஸ்டம், செவன்த் சைன், கோஸ்ட், நத்திங் பட் டிரபிள், மிஸ்டர் புரூக்ஸ் உட்பட ஏராளமான படங்களில் நடித்துள்ளார். சில படங்களை தயாரித்தும் உள்ளார்.

லாக்டவுன்

லாக்டவுன்

விவாகரத்துக்குப் பிறகு புரூஸ் வில்லிஸ், எம்மா ஹெமிங்கையும், டெமி மூர், நடிகர் ஆஷ்டன் கட்சேராவையும் மறுமணம் செய்துகொண்டனர். இந்நிலையில் கொரோனா வைரஸ் காரணமாக, அமெரிக்காவில் பொதுமக்கள், தங்கள் வீடுகளுக்கு உள்ளேயே தனிமைப்படுத்தப்பட்டு வசித்து வருகின்றனர். இந்த லாக்டவுன் நேரத்தில் நடிகர் புரூஸ் வில்லிஸ், நடிகை டெமி மூருடன் வசித்து வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

புரூஸ் மனைவி

புரூஸ் மனைவி

இருவரும் தங்களது மூன்று குழந்தைகளுடன் கடந்த ஒரு மாதமாக ஒன்றாக வசித்து வருகின்றனர். இது புரூஸின் மனைவி எம்மாவுக்கும் தெரியும் என்று கூறப்படுகிறது. புரூஸ், டெமி, எம்மா மூவருமே நல்ல நட்பை கொண்டிருந்தார்கள் என்றும் அதனால் இதில் வேறு எதுவும் வித்தியாசமாக தெரியவில்லை என்றும் அவர்களுக்கு வேண்டியவர்கள் தெரிவித்துள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X