பீக்கில் இருந்தபோதே சென்றார்.. 'இதற்காகத்தான் சினிமாவை விட்டு விலகினேன்' மனம் திறந்த பிரபல நடிகை!

By

சென்னை: இந்தக் காரணத்துக்காகத்தான் சினிமாவில் இருந்து விலகினேன் என்று பிரபல நடிகை தெரிவித்துள்ளார்.

பிரபல ஹாலிவுட் நடிகை கேமரூன் டயஸ். இவரது கேரக்டர் பெரும்பாலும் காமெடி தன்மையுடன் படைக்கப்பட்டிருக்கும்.

த லாஸ்ட் சப்பர், மை பெஸ்ட் பிரண்ட்ஸ் வெட்டிங், சார்லீஸ் ஏஞ்சல்ஸ், ஷ்ரக், மைனாரிட்டி ரிப்போர்ட், த அன்பிலிவர்ஸ் உட்பட பல படங்களில் நடித்துள்ளார்.

நடிப்புக்கு முழுக்கு

நடிப்புக்கு முழுக்கு

இவர் கடைசியாக வில் கிளக் இயக்கிய அன்னி (Annie) என்ற படத்தில் நடித்திருந்தார். இந்த மியூசிக்கல் காமெடி படம் கடந்த 2014 ஆம் ஆண்டு வெளியானது. சின்னத்திரை தொடர்களிலும் நடித்து வந்த இவர், கடந்த 2014 ஆம் ஆண்டு வெளியான பேடு டீச்சர் என்ற தொடருடன் நடிப்புக்கு முழுக்குப் போட்டார். அதற்கு பிறகு அவர் டிவி, சினிமாக்களில் நடிக்கவில்லை.

அதற்கான காரணம்

அதற்கான காரணம்

நடிப்புக்காக கோல்டன் குளோப் உட்பட பல்வேறு விருதுகளை பெற்றுள்ள கேமரூன் டயஸ், ஹாலிவுட்டில் அதிக சம்பளம் வாங்கிய நடிகைகளில் ஒருவராக இருந்தார். திடீரென கடந்த 2018 ஆம் ஆண்டு சினிமாவில் இருந்து விலகுவதாக அறிவித்தார். நடிப்புக்கு அவர் முழுக்குப் போட்டது, ஹாலிவுட் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. ஆனால், அதற்கான காரணம் குறித்து அவர் ஏதும் சொல்லாமல் இருந்தார்.

தனிப்பட்ட வாழ்க்கை

தனிப்பட்ட வாழ்க்கை

இந்நிலையில் இப்போது அவர் அந்தக் காரணத்தைத் தெரிவித்துள்ளார். அவர் கூறியிருப்பதாவது: இவ்வளவு காலமாக சினிமாவில் வேலை செய்துவிட்டேன். கடுமையாக வேலை செய்தேன். அது சுற்றிக்கொண்டே இருப்பது போல இருந்தது. ஆனால், என் தனிப்பட்ட வாழ்க்கைக்காக எந்த இடத்தையும் நான் உருவாக்கவில்லை.

அமைதி தேவைப்பட்டது

அமைதி தேவைப்பட்டது

அதனால் என் வாழ்க்கையில் வேறு விஷயங்கள் வேண்டும் என்று முடிவு செய்தேன். அதனால் சினிமாவில் இருந்து வெளியேறினேன். என் மனதுக்கு அமைதி தேவைப்பட்டது. ஒருவழியாக என் ஆன்மாவுக்கு இப்போது அது கிடைத்துவிட்டது. நான் என்னைக் கவனித்துக் கொள்கிறேன்' என்று கூறியுள்ளார். நடிகை கேமருன் டயஸ், உடல் நலம் குறித்து த பாடி புக், லாங்க்விட்டி புக் என்ற இரண்டு புத்தகங்களையும் எழுதியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X