ஹாலிவுட்டில் சோகம்.. பிரபல நடிகர் டொனால்ட் சதர்லேண்ட் உயிரிழந்தார்!
லாஸ் ஏஞ்சல்ஸ்: ஆறு தசாப்தங்களுக்கும் மேலாக ஹாலிவுட் சினிமாவில் முத்திரைப்பதித்து பழம்பெரும் நடிகராக இருந்த டொனால்ட் சதர்லேண்ட் உடல்நலக்குறைவு காரணமாக உயிரிழந்தார். அவருக்கு வயது 88. இவரின் மறைவுக்கு ஹாலிவுட் சினிமா சோகத்தில் ஆழ்த்தி இருக்கும் நிலையில், பலத் திரைப்பிரபலங்கள் இணையத்தின் வழியில் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
நடிகரான டொனால்ட் சதர்லேண்ட் 1935ம் ஆண்டு ஜூலை 17ந் தேதி கனடாவில் நியூ பிரன்சுவிக் நகரில் பிறந்தார். பொறியியல் பட்டம் பெற்ற இவர் லண்டன் இசை மற்றும் நாடகக் கலை அகாடமியில் நடிகராகப் பயிற்சி எடுத்துக்கொண்டார். இதைத்தொடர்ந்து தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் சிறிய கேரக்டரில் நடித்து வந்த அவருக்கு சினிமாவில் சின்ன கதாபாத்திரத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.

அந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொண்ட இவருக்கு 1970 ஆம் ஆண்டு, M.A.S.H, கெல்லியின் ஹீரோஸ் ஆகிய இரண்டு போர் திரைப்படங்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. இதில், M.A.S.H படததில், சதர்லேண்ட் மரியாதையற்ற அறுவை சிகிச்சை நிபுணர் ஹாக்கி பியர்ஸாக நடித்திருந்தார். இந்த கேரக்டர் இவருக்கு நல்ல பெயரை பெற்றுக் கொடுத்தது
டொனால்ட் சதர்லேண்ட்: இதைத்தொடர்ந்து, டோன்ட் லுக் நவ், திஹங்கர் கேம்ஸ் உள்ளிட்டட் படங்களில் நடித்துத் மிகவும் பிரபலமடைந்தார். இவர் சிட்டிட்சன் எக்ஸ் மற்றும் பாத் டு வார் ஆகிய திரைப்படங்களில் நடித்ததற்காக சிறந்த துணைநடிகருக்கான இரண்டு முறை கோல்டன் குளோப் விருதை வென்றார். இவர் கடைசியாக 2015ம் ஆண்டு வெளியான The Hunger Games trilogy என்ற படத்தில் இரக்கமற்ற சர்வாதிகாரியான கொரியோலனஸ் ஸ்னேவான கேரக்டரில் நடித்திருந்தார்.
உயிரிழந்தார்: அந்த படத்திற்கு பின் இவரின் உடல்நிலை பாதிக்கப்பட்டதை அடுத்து, இவர் சினிமாவில் தலைகாட்டாமல் வீட்டிலேயே ஓய்வில் இருந்தார். இந்நிலையில் இவர் நேற்று உயிரிழந்தார். அவருக்கு வயது 88. நடிகர் டொனால்ட் சதர்லேண்ட்டிற்கு மூன்றாவது மனைவியும் ஃபிரான்சின் ராசெட் மற்றும் நடிகர் கீஃபர் சதர்லேண்ட் உட்பட ஐந்து குழந்தைகள் உள்ளனர்.
மகன் இரங்கல்: நடிகரின் மரணம் குறித்து அறிக்கை வெளியிட்டள்ள கீஃபர் சதர்லேண்ட், கனத்த இதயத்துடன், எனது தந்தை டொனால்ட் சதர்லேண்ட் உயிரிழந்தார் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன். திரைப்பட வரலாற்றில் மிக முக்கியமான நடிகர்களில் ஒருவராக என் தந்தை இருந்ததை நினைத்து பெருமை அடைகிறேன். நல்ல, கெட்ட , அசிங்கமான எந்த ஒரு பாத்திரத்திம் நடிக்க அவர் ஒரு போதும் தயங்கியது இல்லை. அவர் செய்ததை விரும்பினார் என பதிவிட்டுள்ளார். பிரபல நடிகரின் மறைவுக்கு பல ஹாலிவுட் திரைப்பிரபலங்களும் தங்களது இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











