»   »  தண்ணியடிக்க பாருக்கு சென்ற இடத்தில் மதுபான அதிபர் ஆன பிரபல ஹீரோ

தண்ணியடிக்க பாருக்கு சென்ற இடத்தில் மதுபான அதிபர் ஆன பிரபல ஹீரோ

Posted By:
Subscribe to Oneindia Tamil

லாஸ் ஏஞ்சல்ஸ்: மது அருந்த சென்ற இடத்தில் நல்ல மது கிடைக்காததால் மதுபான அதிபராகியுள்ளார் ஹாலிவுட் நடிகர் சானிங் டாட்டம்.

ஹாலிவுட் நடிகர் சானிங் டாட்டம் தனது நண்பர் ஜாக் என்பவருடன் வோட்கா மது அருந்த பாருக்கு சென்றுள்ளார். வோட்கா எப்பொழுதுமே ஏன் வெளிநாடுகளில் இருந்து வரவழைக்கப்படுகிறது, அமெரிக்காவிலேயே ஏன் தயாரிக்கப்படுவது இல்லை என்று அவர்கள் பேசியுள்ளனர்.

Channing Tatum launches his signature Vodka line

இதையடுத்து புதிய வோட்கா பிராண்டை அவர்கள் துவங்கியுள்ளனர். அதற்கு பார்ன் அன்ட் பிரெட் என பெயர் வைத்துள்ளனர். ஐடாஹோவின், ட்ரிக்ஸ் பகுதியில் உள்ள கிராண்ட் டெடான் டிஸ்டிலரியுடன் கூட்டு வைத்து இந்த வோட்காவை தயாரிக்கிறார்கள்.

இது குறித்து சானிங் டாட்டம் கூறுகையில்,

பார்ன் அன்ட் பிரெட் வோட்கா வகையை அறிமுகம் செய்து வைக்கும் முன்பு நானும், எனது நண்பர் ஜாக்கும் பல நிறுவன வோட்காக்களை ருசி பார்த்தோம். இறுதியில் கிராண்ட் டெடான் டிஸ்டிலரியுடன் கூட்டு வைக்க முடிவு செய்தோம் என்கிறார்.

ஏற்கனவே பல ஹாலிவுட் பிரபலங்கள் மதுபான தொழிலில் ஈடுபட்டுள்ள நிலையில் டாட்டமும் இந்த தொழிலுக்கு வந்துள்ளார்.

English summary
Celebrated Hollywood dancer and actor Channing Tatum is all set to launch his own vodka brand named Born and Bred.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil