twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    பிரபல இயக்குனர் திடீர் தற்கொலை.. திரையுலகினர் அதிர்ச்சி.. சின்னத்திரை தொடர்களையும் இயக்கியவர்!

    By
    |

    லாஸ் ஏஞ்சல்ஸ்: பிரபல ஹாலிவுட் இயக்குனர் ஜான் லாஃபியா தற்கொலை செய்துகொண்டது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

    ஜெஸிகா ஹார்பர், டைலான் மேக்டெர்மோட் நடித்த, த புளு இக்குவானா, ஹாரார் காமெடி படமான, மேன்ஸ் பெஸ்ட் ஃபிரண்ட் உட்பட சில படங்களை இயக்கியவர் ஜான் லாஃபியா.

    Child’s Play 2 director John Lafia commits suicide

    புகழ்பெற்ற, டாம் ஹாலந்த் இயக்கிய சைல்ட்ஸ் பிளே படத்துக்கு ஸ்கிரிப்ட் எழுதிய ஜான் லாஃபியா, இந்தப் படத்தின் அடுத்த பாகத்தை இயக்கவும் செய்தார்.

    கோஸ்ட் ஸ்டோரிஸ், டார்க் ஜஸ்டிஸ், த டெட் ஸோன், த ரேட்ஸ் உட்பட பல சின்னத்திரைத் தொடர்களையும் இயக்கியுள்ளார்.

    இவர் தனது முன்னாள் மனைவி பேவர்லி, குழந்தைகள் டெஸ், கனே ஆகியோருடன் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் வசித்து வந்தார். இந்நிலையில் கடந்த ஏப்ரல் 29 ஆம் தேதி அவர் திடீரென தற்கொலை செய்துகொண்டார். அவருக்கு வயது 63. எதற்காக தற்கொலை செய்துகொண்டார் என்பதற்கான காரணம் தெரிவிக்கப்படவில்லை.

    மெயின்டனன்ஸில் ரஜினியின் ராகவேந்திரா மண்டபம்? லதா மேடம் அப்படி சொல்லவே இல்ல.. பிஆர்ஓ விளக்கம்!மெயின்டனன்ஸில் ரஜினியின் ராகவேந்திரா மண்டபம்? லதா மேடம் அப்படி சொல்லவே இல்ல.. பிஆர்ஓ விளக்கம்!

    இதையடுத்து அவருடன் பணியாற்றிய நடிகர், நடிகைகள், இயக்குனர்கள் அவர் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளனர்.

    சைல்ட் பிளே படத்தின் கிரியேட்டரும் ஸ்க்ரீன் ரைட்டருமான டான் மான்சினி கூறும்போது, இதைக் கேள்விபட்டதும் உடைந்துவிட்டேன். எங்களின் சிறந்த நண்பர். அவரை போன்ற கிரியேட்டிவ் நபரை பார்த்ததில்லை. இந்த இழப்பு தாங்க முடியாததாக இருக்கிறது என்று தெரிவித்துள்ளார்.

    English summary
    Writer-director John Lafia, who co-wrote the 1988 horror movie 'Child’s Play' and directed its 1990 sequel has died by suicide. He was 63.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X