பிரபல நடிகை ஜெங் ஷூவாங்கிற்கு ரூ338 கோடி …அபராதம்.. ஏன் தெரியுமா !
சீனா : சீனாவின் பிரபல நடிகையான ஜெங் ஷூவாங்குக்கு வரி ஏய்ப்பு செய்த காரணத்திற்காக ரூ.338 கோடி அபராதம் விதிக்கப்பட்டது.
Recommended Video
டி.வி. தொடர் ஒப்பந்தத்தில் ஜெங் ஷூவாங் இரண்டுவிதமான ஆவணங்களை தயார் செய்து மோசடி செய்துள்ளது தெரியவந்துள்ளது.
ஜெங் ஷூவாங் நடித்து வெளியான நிகழ்ச்சிகள் அனைத்தும் நீக்கப்படுவதாக தேசிய வானொலி மற்றும் தொலைக்காட்சி நிர்வாகம் அறிவித்துள்ளது.

தீவிர நடிவடிக்கை
சீனாவில் அரசு பொருளாதாரத்தின் பல்வேறு துறைகளைச் சேர்ந்த தொழில்நுட்பம், ஆன்லைன் கல்வி மற்றும் ரியல் எஸ்டேட் உள்ளிட்ட வருமான சமத்துவமின்மை அதிகரித்து வருவதால், கடன் மற்றும் நுகர்வு குறைதல் ஆகியவற்றைச் சமாளிக்க மற்ற நிறுவனங்களின் மீது முன்னெப்போதும் இல்லாத வகையில் கடுமையான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

கண்காணிப்பு
சீனா தற்போதைய ஐந்தாண்டு திட்டத்தின்படி அதிபர் ஜி ஜின்பிங் தலைமையிலான சீன ஆளும் கம்யூனிஸ்ட் கட்சியின் புதிய கொள்கை மாற்றத்தை கொண்டு வந்துள்ளது. இதனால், பிரபலங்கள் மீதான கண்காணிப்பை சீனா கடந்த மாதங்களாக கடுமையாக்கி உள்ளது.

ஜெங் ஷூவாங் பிரபல நடிகை
சீனாவில் பிரபல நடிகையாக இருப்பவர் ஜெங் ஷூவாங். இவர் சினிமா மற்றும் டி.வி. தொடர்களில் நடித்து வருகிறார். 2019 மற்றும் 2020-ம் ஆண்டுகளில் ஒரு டி.வி. தொடருக்காக அவர் ஒப்பந்தம் செய்யப்பட்டார். இந்த ஒப்பந்தத்தில் அவர் வரி ஏய்ப்பு செய்து இருந்தது கண்டுப்பிடிக்கப்பட்டது.

போலி ஆவணம்
டி.வி. தொடர் ஒப்பந்தத்தில் ஜெங் ஷூவாங் இரண்டுவிதமான ஆவணங்களை தயார் செய்துள்ளார். அதில் ஒரு ஆவணத்தில் தனக்கு குறைந்த வருமானம் கிடைப்பது போல குறிப்பிட்டுள்ளார். மேலும், அசல் ஆவணத்தை தன்னிடம் வைத்துக் கொண்டு குறைந்த வருமானம் பெறுவது போன்று குறிப்பிட்டிருந்த ஆவணத்தை வருமான வரித்துறையிடம் சமர்ப்பித்துள்ளார்.

வரி ஏய்ப்பு செய்தார்.
இந்த இரண்டு ஆவணங்களும் சரி பார்க்கப்பட்டது, இதையடுத்து, அவர் வரியை குறைவாக செலுத்தி மோசடி செய்து இருப்பது தெரியவந்தது. இதையடுத்து நடிகை ஜெங் ஷூவாங்குக்கு வரி ஏய்ப்பு செய்த காரணத்தால் ரூ.338 கோடி அபராதம் விதிக்கப்பட்டது. இதற்கான உத்தரவை ஷாங்காய் நகராட்சி வரி சேவை மையம் பிறப்பித்துள்ளது. மேலும் ஜெங் ஷூவாங் நடித்து வெளியான நிகழ்ச்சிகள் அனைத்தும் நீக்கப்படுவதாக தேசிய வானொலி மற்றும் தொலைக்காட்சி நிர்வாகம் அறிவித்துள்ளது.

குழந்தைகளை கைவிட்டார்
இந்த ஆண்டு தொடக்கத்தில் அமெரிக்காவில் தனது இரண்டு வாடகை குழந்தைகளை கைவிட்டுவிட்டதாக குற்றச்சாட்டுகளுக்காக ஜெங் கடுமையான பொது விமர்சனங்களை எதிர்கொண்டார என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











