தானோஸை எதிர்த்து போராடியவர்கள்.. கொரோனாவை எதிர்த்தும் போராட திட்டம்.. மீண்டும் இணைந்த அவெஞ்சர்ஸ்!

லாஸ் ஏஞ்சல்ஸ்: அவெஞ்சர்ஸ் எண்ட்கேம் ரிலீசாகி ஓராண்டு நிறைவு அடைந்துள்ளது.

Recommended Video

கொரோனா நிதி திரட்ட ஒன்றிணையும் அவெஞ்சர்ஸ் டீம் - வீடியோ

தானோஸை எதிர்க்க கிட்டத்தட்ட 12 ஆண்டுகளாக உருவான மார்வெல் சூப்பர் ஹீரோக்களின் படை ஒட்டுமொத்தமாக இணைந்து போராடி அவனை வீழ்த்தியது.

Chris Evans assembles ‘Avengers’ stars for COVID-19 relief

அதே சமயம், அயன்மேனையும் அவெஞ்சர்ஸ் ரசிகர்கள் இழந்தனர். அவெஞ்சர்ஸ் உலகுக்கு கடந்த ஆண்டு குட்பை சொன்ன ரசிகர்கள் மீண்டும், அவர்கள் ஒன்றிணைவதை காண உள்ளனர்.

இன்ஸ்டாகிராமின் கோரிக்கையை ஏற்று கடந்த மே 1ம் தேதி தனது இன்ஸ்டாகிராம் பக்க கணக்கை கேப்டன் அமெரிக்கா நடிகர் கிறிஸ் எவான்ஸ் துவாக்கினார்.

முதல் பதிவாக அவர் பதிவிட்டுள்ள வீடியோவில், கொரோனாவை எதிர்த்து போராட அவெஞ்சர்ஸ் குழு மீண்டும் ஒன்றிணைய வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.

Chris Evans assembles ‘Avengers’ stars for COVID-19 relief

அயன்மேன் நடிகர் ராபர்ட் டவுனி ஜூனியர், தோர் நடிகர் கிறிஸ் ஹெம்ஸ்வொர்த், ஸ்கார்லெட் ஜோஹன்சன், ஹல்க் நடிகர் மார்க் ரஃபலோ மற்றும் ஜெரிமி ரன்னருடன் விர்ச்சுவலாக ஒன்றிணைந்து கொரோனா நிதி திரட்டும் நிகழ்ச்சியை கேப்டன் அமெரிக்கா நடிகர் ஏற்பாடு செய்துள்ளார்.

கிறிஸ் எவான்ஸின் இந்த அறிவிப்பு வீடியோவையே 3 மில்லியனுக்கும் மேலான ரசிகர்கள் பார்த்துள்ளனர்.

ஒட்டுமொத்த அவெஞ்சர்ஸ் டீமும் இணைந்து நடத்தப்போகும் லைவ் நிகழ்ச்சியின் மூலம் கிடைக்கும் பணத்தை அப்படியே, கொரோனாவால் பாதிக்கப்படும் நபர்களுக்கு உதவி செய்து வரும் தொண்டு நிறுவனங்களான Feeding America, Meals On Wheels, World Central Kitchen and No Kid Hungry நிறுவனங்களுக்கு நேரடியாக சென்று சேரும் எனக் கூறியுள்ளார்.

உலகத்தையே ஆட்டி படைத்து வரும் கொரோனாவுக்கு எதிரான போராட்டத்தில் ரீல் சூப்பர் ஹீரோக்கள் ரியல் சூப்பர் ஹீரோக்களாக மாறும் இந்த முயற்சியை ரசிகர்கள் வரவேற்றுள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X