இடியின் அரசன் கிறிஸ் ஹெம்ச்வோர்த்-க்கு இன்று பிறந்தநாள்... இணையத்தை கலக்கும் வாழ்த்து செய்தி !
மெல்போர்ன் : மார்வல் சீசனில் தோர் கதாபாத்திரத்தில் நடித்து உலகம் முழுவதும் இன்று வரை பலகோடி ரசிகர்களை கொண்டுள்ள இடியின் அரசன் என்று அழைக்கப்படுபவர் கிறிஸ் ஹெம்ச்வோர்த்.
பிரபலமான பல்வேறு ஆங்கில திரைப்படங்களில் நடித்து வரும் இவர் தோர் என்ற கதாபாத்திரத்தின் மூலம் ரசிகர்களை மிகவும் கவர்ந்து இன்றுவரை பிரபலமான நடிகராக வலம் வருகிறார்.
இவ்வாறு உலகம் முழுவதும் பல கோடிக்கணக்கான ரசிகர்களைக் கொண்டுள்ள கிறிஸ் ஹெம்ச்வோர்த் ஆகஸ்ட் 11 ஆம் தேதியான இன்று தனது பிறந்தநாளை கொண்டாடி வருவதையொட்டி உலகெங்கிலுமுள்ள இவரது ரசிகர்கள் வாழ்த்துக்களை சொல்லி இணையதளத்தை தெறிக்க விடுகின்றனர்.

தோர் கதாபாத்திரத்தில்
ஆஸ்திரேலிய நாட்டின் பிரபல திரைப்பட நடிகராக வலம் வரும் கிறிஸ் ஹெம்ச்வோர்த் பல்வேறு ஹாலிவுட் திரைப்படங்களில் நடித்துவருகிறார். எனினும் மார்வல் சீசனில் இவர் தோர் கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் ரசிகர்களை மிகவும் கவர்ந்து உலக அளவில் மிகப் பிரபலமான நடிகராக வலம் வந்து கொண்டிருக்கிறார்.

ஸ்டார் ட்ரெக்
ஆஸ்திரேலியாவில் பல்வேறு தொலைக்காட்சி தொடர்களில் நடித்துக் கொண்டிருந்த இவர் 2009 ஆம் ஆண்டு வெளியான "ஸ்டார் ட்ரெக்" என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் திரையுலகிற்கு அறிமுகமானார்.

சூப்பர் ஹீரோவாக
பின்னர் 2011 ஆம் ஆண்டு வெளியான மார்வல் சீசனில் தோர் கதாபாத்திரத்தில் தனது அதிரடியான நடிப்பை வெளிப்படுத்தியதன் மூலம் உலக அளவில் பிரபலம் ஆகியுள்ளார். மேலும் இத்திரைப்படத்தில் இவர் சூப்பர் ஹீரோவாக "இடியின் அரசன்" கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் ரசிகர்களை மிகவும் கவர்ந்து இழுத்தார்.

அவேஞ்சர்ஸ்: எண்ட்கேம்
பல்வேறு திரைப்படங்களில் இவர் நடித்து இருந்தாலும் தோர், தோர்: தி டார்க் வேல்டு, தி அவேஞ்சர்ஸ் மற்றும் அவேஞ்சர்ஸ்: ஏஜ் ஆப் அல்ட்ரான் உள்ளிட்ட திரைப்படங்கள் இவரை புகழின் உச்சியில் நிற்க வைத்தது. இந்நிலையில் சென்ற ஆண்டு வெளியான அவேஞ்சர்ஸ்: எண்ட்கேம் உலக அளவில் பல்வேறு வசூல் சாதனைகளை முறியடித்து பலரையும் ஆச்சரியப்படுத்தி இருந்தது.

பிறந்தநாள்
இவ்வாறு உலக அளவில் சிறந்த நடிகராக வலம் வரும் கிறிஸ் ஹெம்ச்வோர்த் நடிப்பில் சமீபத்தில் வெளியான எக்ஸ்ட்ராக்சன் பல்வேறு ரசிகர்களை கவர்ந்து மிகப்பெரிய வரவேற்பை பெற்று வந்த நிலையில், இவர் தனது பிறந்தநாளை ஆகஸ்ட் 11ஆம் தேதியான இன்று வெகு விமர்சையாக கொண்டாடி வருவதையொட்டி உலகெங்கிலுமுள்ள இவரது தீவிர ரசிகர்கள் சமூக வலைத்தளங்களின் மூலம் வாழ்த்துக்களை சொல்லி இணையதளத்தை தெறிக்க விடுகின்றனர்.


Click it and Unblock the Notifications











