ரிஸ்க் எடுக்கிறது உண்மையிலேயே இவருக்குத்தான் ரஸ்க் சாப்பிடுற மாதிரி!

லாஸ் ஏஞ்சல்ஸ்: நம்ம நாட்டில் எப்படி சியான் விக்ரம், அமீர்கான் போன்ற நடிகர்கள் உடல் எடையை கூட்டியும் குறைத்தும் நடிக்கிறார்களோ அதே போல ஹாலிவுட்டில் தனது உடல் எடையை இஷ்டத்துக்கு கூட்டியும் குறைத்தும் நடிக்கும் ரிஸ்க் மன்னர் நம்ம கிறிஸ்டியன் பேல் தான்.

2004ம் ஆண்டு வெளியான 'தி மெஷினிஸ்ட்' படத்திற்காக 45 கிலோ எடைக்கு மாறிய கிறிஸ்டியன் பேல், 'டார்க் நைட்' படத்தில் பேட்மேனாக நடிக்க 90 கிலோ எடைக்கு தன்னை மாற்றிக் கொண்டார்.

Christian Bale once again done weight loss for Ford vs Ferrari

2018ம் ஆண்டு வெளியான 'வைஸ்' படத்திற்காக ரியல் தொப்பை வைத்த கிறிஸ்டியன் பேல் 110 கிலோவாக தனது உடல் எடையை கூட்டி நடித்தார்.

நவம்பர் 15ம் தேதி வெளியாகவுள்ள Ford vs Ferrari படத்திற்காக மீண்டும் 30 கிலோ எடையை குறைத்து கிறிஸ்டியன் பேல் ரிஸ்க் எடுத்துள்ளார்.

Ford vs Ferrari படத்தில் கார் ரேஸர் கென் மைல்ஸ் கதாபாத்திரத்தில் கிறிஸ்டியன் பேல் நடித்துள்ளர்.

வரும் வெள்ளிக்கிழமை உலகம் முழுவதும் இந்த படம் வெளியாகிறது. சமீபத்தில் ஹாலிவுட்டில் வெளியாகி அபார வெற்றியை பதிவு செய்துள்ள ஜோக்கர் படத்தின் வசூல் சாதனையை Ford vs Ferrari முறியடிக்குமா? எனவும் ஹாலிவுட் ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஜேம்ஸ் கோல்ட் தயாரித்து இயக்கியுள்ள இந்த படத்தில், கிறிஸ்டியன் பேலுக்கு சமமாக பிரபல ஹாலிவுட் நடிகர் மேட் டாமன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

10 கோடி அமெரிக்க டாலர்களில் இந்த படம் உருவாகியுள்ளது. இந்த படத்திற்கான புரமோஷன் நிகழ்ச்சியில் பேசிய, நடிகர் கிறிஸ்டியன் பேல், கதை மற்றும் கதாபாத்திரங்களுக்கு தேவையான உடல் அமைப்பை கொண்டு வந்தால், தான் அது உணர்வு பூர்வமாக இருக்கும் என தெரிவித்தார்.

More from Filmibeat

Read more about: christian bale
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X