எமகாதக இயக்குநர் கிறிஸ்டோபர் நோலனின் 50வது பிறந்தநாள்.. உலகளவில் டிரெண்டாகும் #ChristopherNolan

லண்டன்: பல மாஸ்டர் பீஸ் படங்களை கொடுத்துள்ள மேஜிக் மேன் கிறிஸ்டோபர் நோலனின் 50வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது.

மெமென்டோ, தி டார்க் நைட், இன்சப்ஷன், டன்கிர்க், இன்டர்ஸ்டெல்லார் உள்ளிட்ட பல மிரட்டலான படங்களை உருவாக்கியவர் இவர்.

இவர் இயக்கத்தில் உருவாகி உள்ள டெனெட் திரைப்படம் கொரோனா பரவல் காரணமாக தள்ளி வைக்கப்பட்டிருக்கிறது.

மாஸ்டர்

மாஸ்டர்

ஹாலிவுட் நடிகர்களுக்கே இல்லாத அளவுக்கு ஒரு இயக்குநர் மீது ரசிகர்களுக்கு கிரேஸ் இருக்கிறது என்று சொன்னால், அது நம்ம கிறிஸ்டோபர் நோலனுக்குத் தான். தான் இயக்கும் மாஸ்டர்பீஸ் படங்களை தரமாக கொடுக்க வேண்டும் என்பது மட்டுமின்றி புதிராகவும் கொடுப்பதில் கில்லாடியான மாஸ்டர் இவர்.

50 வயசு

50 வயசு

உலகின் தலை சிறந்த மூளையை கொண்டு இருக்கும் கெட்டிக்கார இயக்குநருக்கு 50 வயதாவதை முன்னிட்டு, உலகளவில் உள்ள ரசிகர்கள் #ChristopherNolan என்ற ஹாஷ்டேக்கை டிரெண்ட் செய்து கொண்டாடி வருகின்றனர். தமிழ் ரசிகர்களும் நோலனின் படங்கள் குறித்தும், அவரது சாதனைகள் குறித்தும் இந்த ஹாஷ்டேக்கில் பல பதிவுகளை இட்டு வருகின்றனர்.

இணையற்ற இயக்குநர்

இணையற்ற இயக்குநர்

1970ம் ஆண்டு ஜூலை 30ம் தேதி லண்டனில் பிறந்த இயக்குநர் கிறிஸ்டோபர் நோலன், இதுவரை 11 படங்களை இயக்கி உள்ளார். அதில், 10 படங்கள் வெளியாகி, சர்வதேச ரசிகர்களை வெகுவாக கவர்ந்திழுத்து இருக்கிறது. கஜினி படத்துக்கு அஸ்திவாரமான மெமெண்டோ படம் இவர் இயக்கியது தான். கனவுகளுக்குள் ஒரு உலகத்தை இன்சப்ஷனில் உருவாக்கி தந்தவர், பிளாக்ஹோலை கடந்து இண்டர்ஸ்டெல்லாரை காட்டிய இணையற்ற இயக்குநர் கிறிஸ்டோபர் நோலன்.

பாபநாசத்துக்கு பாராட்டு

பாபநாசத்துக்கு பாராட்டு

பிரெஸ்டிஜ், இன்செப்ஷன், டன்கிர்க் போன்ற வித்தியாசமான படங்களை இயக்கியுள்ள கிறிஸ்டோபர் நோலன், கடந்த 2018ம் ஆண்டு இந்தியா வந்திருந்தார். அப்போது, அவரை சந்தித்த நடிகர் கமல் ஹாசன், கிறிஸ்டோபர் நோலன் தனது பாபநாசம் படத்தை பார்த்து வியந்ததாக கூறியது, தனக்கு கிடைத்த பெருமை என்றும், ஹே ராம் படத்தின் டிஜிட்டல் வெர்ஷனை அவருக்கு பரிசாக அளித்தேன் என்றும் கூறியிருந்தார். இந்நிலையில், கமல் ரசிகர்கள் தற்போது, இருவரும் சந்தித்துக் கொண்ட புகைப்படங்களை பதிவிட்டு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

ஐஎம்டிபி வெளியிட்ட வீடியோ

பேட்மேன் மற்றும் ஜோக்கர் என பவர்ஃபுல் கதாபாத்திரங்களுக்கு உயிர் கொடுத்த எமகாதக இயக்குநரின் பிறந்தநாளை முன்னிட்டு IMDB தனது ட்விட்டர் பக்கத்தில், ஒரு சிறப்பு பிறந்தநாள் மாஷ் அப் வீடியோவை வெளியிட்டு இருக்கிறது. கிறிஸ்டோபர் நோலன் படங்களில் இடம்பெற்ற அற்புதமான காட்சிகளை அதில் கண்டு ரசிக்கலாம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X