எந்த தைரியத்துல.. அந்த பயம் இருக்கட்டும்.. மீண்டும் தள்ளிப்போன நோலனின் ‘டெனெட்’ ரிலீஸ்!
லாஸ் ஏஞ்சல்ஸ்: கொரோனா வைரஸ் பரவல் உலக அளவில் இன்னும் கட்டுக்குள் வராத நிலையில், மீண்டும் தள்ளி போயிருக்கிறது டெனெட் படத்தின் ரிலீஸ் தேதி.
ஹாலிவுட்டின் மேஜிக் மேன் கிறிஸ்டோபர் நோலன் இயக்கத்தில் உருவாகி உள்ள டெனெட் படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி உலகளவில் வைரலானது.

200 மில்லியன் டாலர் செலவில் பிரம்மாண்டமாக இந்த படத்தை வார்னர் பிராஸ் தயாரித்துள்ளது.
கொரோனா பரவல் உலகையே அச்சுறுத்தி வரும் நிலையில், அதை பொருட்படுத்தாமல், வரும் ஜூலை 17ம் தேதி படம் ரிலீசாகும் என டிரைலர் வெளியீட்டின் போது அறிவித்து, உலகத்தையே ஆச்சர்யப்படுத்தினர்.
ஆனால், அவர்கள் போட்ட கணக்கை எல்லாம் இந்த கொரோனா வைரஸ் கொஞ்சம் கூட குறையாமல், தவிடு பொடியாக்கி விட்டது.
ஜூன் மாதம் நெருங்கிய பின்னர், ஜூலை 31ம் தேதி படம் ரிலீசாகும் என படக்குழு அறிவித்தது. இந்நிலையில், தற்போது மீண்டும் படத்தின் ரிலீஸை ஆகஸ்ட் 12ம் தேதிக்கு தள்ளிப் போட்டுள்ளனர்.
ஆனால், அப்போது கூட தியேட்டரில் டெனெட் படம் ரிலீஸ் ஆகுமா? இல்லை மீண்டும் உங்கள் ரிலீஸ் தேதியை தள்ளித்தான் போடுவீங்க என்றும் ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.

கொரோனா பரவல் காரணமாக மார்ச் மாதம் வெளியாக வேண்டிய ஜேம்ஸ் பாண்டின் நோ டைம் டு டை படம் அப்போதே நவம்பர் மாதத்துக்கு தள்ளிவைக்கப்பட்டது.
வின் டீசலின் ஃபாஸ்ட் அண்ட் ஃபியூரியஸ் திரைப்படம் இந்த ஆண்டு ஏப்ரலுக்கு பதிலாக அடுத்த ஆண்டு ஏப்ரலுக்கு ஒரே அடியாக ஓட்டம் எடுத்தது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











