உடல் நலக்குறைவு.. ஆஸ்கர் விருது பெற்ற பிரபல நடிகர் காலமானார்.. திரையுலகம் இரங்கல்!

By

லாஸ் ஏஞ்சல்ஸ்: ஆஸ்கர் விருது பெற்ற பிரபல நடிகர் கிறிஸ்டோபர் பிளம்மர் உடல் நலக்குறைவால் காலமானார்.

பிரபல ஹாலிவுட் நடிகர் கிறிஸ்டோபர் பிளம்மர். த சவுண்ட் ஆப் மியூசிக் என்ற படம் மூலம் பிரபலமானவர் இவர்.

1965 ஆம் ஆண்டு வெளியான இந்தப் படத்தை ராபர்ட் வைஸ் இயக்கியிருந்தார். இதில் ஜூலி ஆண்ட்ரூஸ் ஹீரோயினாக நடித்திருந்தார்.

லியோ டால்ஸ்டாய்

லியோ டால்ஸ்டாய்

இந்தப் படத்தை அடுத்து தொடர்ந்து அவருக்கு வாய்ப்புகள் குவிந்தன. போர் பற்றிய படமான, வாட்டர்லூ (1970), அட்வெஞ்சர் படமான, த மேன் ஹூ வுட் பி கிங் (1975), த இன்சைடர் (1999), லியோ டால்ஸ்டாயின் கடைசிகால வாழ்க்கையை மையப்படுத்திய, த லாஸ்ட் ஸ்டேஷன் (2009) உட்பட பல சிறந்தப் படங்களில் நடித்துள்ளார்.

மேடை நாடகங்கள்

மேடை நாடகங்கள்

கடைசியாக, த லாஸ்ட் ஃபுல் மெசர் என்ற படத்தில் நடித்திருந்தார். இந்தப் படம் கடந்த 2019 ஆம் ஆண்டு வெளியானது. ஏராளமான நாடகங்களிலும் பல்வேறு டிவி சீரியலிலும் நடித்துள்ள இவர், கடந்த சில நாட்களாக உடல் நலமில்லாமல் இருந்தார். இந்நிலையில் அவருடைய வீட்டில் நேற்று காலமானார். அவருக்கு வயது 91.

த லாஸ்ட் ஸ்டேஷன்

த லாஸ்ட் ஸ்டேஷன்

இதை அவருடை நீண்ட நாள் நண்பரும் மானேஜருமான லூ பிட் உறுதி செய்துள்ளார். அவர் மரணமடையும் அவர் மனைவி எலைன் டெய்லர் (Elaine Taylor) உடன் இருந்ததாகவும் கூறியுள்ளார், அவர். மறைந்த கிறிஸ்டோபர் பிளம்மர், பிகினர்ஸ் என்ற படத்தில் சிறப்பாக நடித்ததற்காக ஆஸ்கர் விருதை பெற்றிருந்தார்.

தலைமுறை தாண்டி

தலைமுறை தாண்டி

இதையடுத்து ஹாலிவுட் திரைபிரபலங்கள் அவருக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர். மானேஜர் லூ பிட் வெளியிட்ட இரங்கலில், அவர் அசாதாரண மனிதர். தனது தொழிலை அவர் எப்போதும் நேசித்து வந்தார். அவருடைய நடிப்பின் மூலம் ரசிகர்களின் மனதை தொட்டவர். அவர் புகழ் தலைமுறைகளை தாண்டியும் நீடிக்கும் என்று கூறியுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X