twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    ஷூட்டிங் துப்பாக்கியால் நடிகர் சுட்டதில் பெண் ஒளிப்பதிவாளர் பலி.. படப்பிடிப்பில் பகீர் சம்பவம்!

    |

    லாஸ் ஏஞ்சல்ஸ்: சண்டைக் காட்சியின் போது ஷூட்டிங் துப்பாக்கியால் பிரபல நடிகர் சுட்டதில் பெண் ஒளிப்பதிவாளர் உயிரிழந்தார்.

    அமெரிக்காவின் பிரபல ஹாலிவுட் நடிகர் அலெக் பால்டுவின். 63 வயதான அலெக் கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக ஹாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருகிறார்.

    தற்போது ரஸ்ட் என்ற படத்தில் நடித்த வருகிறார். இந்தப் படத்தை ஹாலிவுட்டின் பிரபல இயக்குநரான ஜோயல் சோசா இயக்கி வருகிறார்.

    அக்ஷராவ உன்கிட்டேருந்து பிரிக்க 2 நிமிஷம் ஆகாது... மொத்த திமிரையும் காட்டும் அபிஷேக்.. புதிய புரமோ! அக்ஷராவ உன்கிட்டேருந்து பிரிக்க 2 நிமிஷம் ஆகாது... மொத்த திமிரையும் காட்டும் அபிஷேக்.. புதிய புரமோ!

    சண்டைக் காட்சியில் துப்பாக்கிச் சூடு

    சண்டைக் காட்சியில் துப்பாக்கிச் சூடு

    இந்தப் படத்தின் படப்பிடிப்பு நியூ மெக்ஸிகோவில் நடைபெற்று வந்தது. இந்நிலையில் நேற்று இப்படத்தின் சண்டைக்காட்சி படமாக்கப்பட்டு வந்துள்ளது. சண்டைக் காட்சியின் போது ஷூட்டிங்கிற்கு பயன்படுத்தப்படும் துப்பாக்கி மூலம் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது.

    ஷூட்டிங் துப்பாக்கியால் சுட்டதில்

    ஷூட்டிங் துப்பாக்கியால் சுட்டதில்

    இதில் படத்தின் பெண் ஒளிப்பதிவாளர் ஹலினா ஹட்சின்ஸ் மற்றும் இயக்குனர் ஜோயல் சோசா ஆகியோர் படுகாயம் அடைந்தனர். இதையடுத்து ஒளிப்பதிவாளர் ஹலினா ஹட்சின்ஸ் ஹெலிகாப்டர் மூலம் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

    பெண் ஒளிப்பதிவாளர் மரணம்

    பெண் ஒளிப்பதிவாளர் மரணம்

    ஆனால் ஹலினா ஹட்சின்ஸ் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவருக்கு வயது 42. ஹலினா பல்வேறு படங்களில் ஒளிப்பதிவாளராக பணியாற்றியுள்ளார். படுகாயமடைந்த இயக்குநர் ஜோயல் சோசா ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

    இயக்குநர் கவலைக்கிடம்

    இயக்குநர் கவலைக்கிடம்

    அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக அவரது செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார். 48 வயதான ஜோயல் சோஸா, க்ரவுன் விக், கோஸ்ட் ஸ்குவாட், ஹென்னாஸ் கோல்டு உள்ளிட்ட பல வெற்றிப் படங்களை கொடுத்துள்ளார்.

    படப்பிடிப்பு நிறுத்தம்

    படப்பிடிப்பு நிறுத்தம்

    எதிர்பாராமல் நிகழ்ந்த இச்சம்பவத்தை தொடர்ந்து 'ரஸ்ட்' திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது. இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். ஷூட்டிங் துப்பாக்கியால் ஏற்படும் விபத்தில் உயிரிழப்புகள் நேரிடுவது இது முதல் முறையல்ல.

    பிரண்டன் லீ மரணம்

    பிரண்டன் லீ மரணம்

    லெஜன்ட் நடிகர் புரூஸ் லீயின் மகன் பிரண்டன் லீயும் படப்பிடிப்பில் இதுபோன்று நடந்த ஒரு துப்பாக்கிச் சூட்டில் மரணமடைந்தார். புருஸ் லீயை போலவே தற்காப்பு கலையில் சிறந்து விளங்கிய பிரண்டன் லீ, அமெரிக்க திரைப்படங்களில் நடித்து வந்தார். 1993ஆம் ஆண்டு மார்ச் 31ஆம் தேதி The crow படத்தின் படப்பிடிப்பில் பங்கேற்றிருந்தார் பிரண்டன் லீ.

    28 வயதில் மரணமடைந்த நடிகர்

    28 வயதில் மரணமடைந்த நடிகர்

    நடித்துக் கொண்டிருந்தபோது படப்பிடிப்பில் பயன்படுத்தப்படும் துப்பாக்கி குண்டு பாய்ந்து பலத்த காயமடைந்தார் பிரண்டன் லீ. தீவிர சிகிச்சை அளித்தும் அவர் துரதிர்ஷ்டவசமாக மரணமடைந்தார். அப்போது அவருக்கு வயது 28 என்பது குறிப்பிடத்தக்கது.

    English summary
    Cinematographer died in Rust movie set when prop gun fired by Alec baldwin. Director Joel Souza wounds and he is critical condition. Rust movie shooting happening in New Mexico US.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X