48 வயது 2வது மனைவி டினாவைப் பிரிந்தார் 83 வயது கிளின்ட் ஈஸ்ட்வுட்

By Sudha

லாஸ் ஏஞ்சலெஸ்: ஹாலிவுட் பழம்பெரும் நடிகர் கிளின்ட் ஈஸ்ட்வுட் தனது 2வது மனைவியை விட்டுப் பிரிந்து விட்டார்.

கிளின்ட்டுக்கு 83 வயதாகிறது. அவரது 2வது மனைவி டினாவுக்கு 48 வயதாகிறது. டினா முன்னாள் டிவி செய்தி வாசிப்பாளர் ஆவார்.

கிளின்ட் ஈஸ்ட்வுட் பலருடன் வாழ்க்கை நடத்தியிருந்தாலும் கூட அவர் விரலைப் பிடித்து மோதிரம் மாட்டி திருமணம் செய்தது இருவரைத்தான் என்பது குறிப்பிடத்தக்கது.

17 வருட தாம்பத்யம்

17 வருட தாம்பத்யம்

முன்னாள் செய்தி வாசிப்பாளரான டினாவுடன் 17 ஆண்டுகள் குடும்பம் நடத்தியுள்ளார் கிளின்ட்.

ஒரு வருடமாக பிரிவு

ஒரு வருடமாக பிரிவு

ஆனால் இந்தத் தம்பதிகள் கடந்த ஒரு வருடமாக பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். தற்போது நிரந்தரமாக பிரிந்துள்ளனர்.

ஆமா பிரிஞ்சுட்டோம்.. டினா

ஆமா பிரிஞ்சுட்டோம்.. டினா

இதை டினா உறுதிப்படுத்தியுள்ளார். தானும், கிளின்ட்டும் தற்போது பிரிந்து விட்டதாக அவர் தெரிவித்துள்ளார்.

'நெருக்கம்' தொடர்கிறது

'நெருக்கம்' தொடர்கிறது

நானும், கிளின்ட்டும் கணவன் மனைவியாக இப்போது இல்லை. ஆனால் எங்களது நட்பு தொடர்கிறது, நெருக்கமும் தொடர்கிறது என்றார் டினா.

16 வயதில் மகள்

16 வயதில் மகள்

டினாவுக்கும், கிளின்ட்டுக்கும் ஒரு மகள் இருக்கிறார். அவரது பெயர் மோர்கன். 16 வயதாகிறது.

காதல் போய் விட்டது

காதல் போய் விட்டது

டினா மீதான கிளின்ட்டின் காதல் போய் நீண்ட காலமாகிறது என்று கிளின்ட்டுக்கு நெருக்கமான வட்டாரம் கூறுகிறது.

2 கல்யாணம் - 5 பெண்கள் - 7 பிள்ளைகள்

2 கல்யாணம் - 5 பெண்கள் - 7 பிள்ளைகள்

கிளின்ட் ஈஸ்ட்வுட் 5 பெண்களுடன் குடும்பம் நடத்தியவர் ஆவார். அதில் மாடல் அழகி மாகி ஜோன்சன் மற்றும் டினா ஆகியோரை மட்டுமே திருமணம் செய்தார் கிளின்ட். இவர்கள் தவிர மேலும் 3 பெண்களுடன் குடும்பம் நடத்தி மொத்தமாக 7 பிள்ளைகளுக்குத் தந்தையானார்.

மாகியுடன் 31 வருடம்

மாகியுடன் 31 வருடம்

மாகியுடன் 31 வருடம் குடும்பம் நடத்தியுள்ளார் கிளின்ட். பின்னர் நடிகை சோன்ட்ரா லோக்கி என்பவருடன் 14 வருடங்கள் சேர்ந்து வாழ்ந்தார்.

சொர்க்கம் அல்ல.. இடியும், மின்னலும்

சொர்க்கம் அல்ல.. இடியும், மின்னலும்

திருமணத்தில் அதிக ஆர்வம் இல்லாதவர் கிளின்ட். ஒருமுறை அவர் கூறுகையில், திருமணங்கள் சொர்க்கத்தி்ல நிச்சயிக்கப்படுவதாக கூறுகிறார்கள். ஆனால் உண்மையில் திருமணம் என்பது இடியும், மின்னலும்தான் என்றார்.

பெண் பித்தர்

பெண் பித்தர்

திருமணத்தின் மீதுதான் கிளின்ட்டுக்கு வெறுப்பு இருந்ததே தவிர பெண்கள் மீது அலாதிப் பிரியம் கொண்டவர். பெண் பித்தர் என்று பலரால் வர்ணிக்கப்பட்டவர். ஆனால் அதுகுறித்து அவர் கவலைப்பட்டதில்லை.

93ல் சந்தித்து 96ல் மணந்தார்

93ல் சந்தித்து 96ல் மணந்தார்

1993ம் ஆண்டு டினாவைச் சந்தித்த கிளின்ட், 1996ல் திருமணம் செய்து கொண்டார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X