22 வருட திருமண வாழ்க்கை கசந்தது.. மனைவியை பிரிந்த பிரபல நடிகர்.. மகன்களுக்காக அதிரடி முடிவு!

ஆஸ்கர் விருது பெற்ற நடிகர் கோலின் ப்ரித், மனைவியை பிரிந்தார்.

லண்டன்: ஆஸ்கர் விருது பெற்ற நடிகர் கோலின் ப்ரித், மனைவியை பிரிந்தார்.

இங்கிலாந்தை சேர்ந்தவர் பிரபல ஹாலிவுட் நடிகர் கோலின் ப்ரித். தி கிங்ஸ் ஸ்பீச் எனும் படத்தில் சிறப்பாக நடித்தற்காக, கடந்த 2011ம் ஆண்டு அவருக்கு ஆஸ்கர் விருது வழங்கப்பட்டது.

Colin Firth and Wife Livia Giuggioli Split After 22 Years

நடிகர் கோலின் ப்ரித், இத்தாலியைச் சேர்ந்த பிரபல திரைப்பட தயாரிப்பாளர் லிவியா குகியோலி என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார். கடந்த 22 வருடங்களாக இருவரும் ஒன்றாக லண்டன் மற்றும் ரோம் நகரங்களில் வாழ்ந்து வந்தனர். இவர்களுக்கு லூகா, மாதியோ என இரண்டு மகன்கள் இருக்கின்றனர்.

இந்நிலையில் மனைவி லிவியாவை பிரிவதாக கோலின் ப்ரித் அறிவித்துள்ளார். இதுகுறித்து அவர்கள் இருவரும் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், தாங்கள் இருவரும் திருமண வாழ்க்கையை முடித்துக்கொள்ளப் போவதாக அறிவித்துள்ளனர்.

மேலும், மகன்களின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு, இருவருக்கும் இடையிலான நட்பை தொடர முடிவு செய்திருப்பதாகவும் அவர்கள் கூறியுள்ளனர். பெற்றோரின் முடிவை ஏற்பதாக மகன்கள் இருவரும் தெரிவித்துள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X