தொடர்ந்து மிரட்டும் கொரொனா.. சிகிச்சை பெற்று வந்த பிரபல காமெடி நடிகர் திடீர் பலி..திரையுலகம் ஷாக்

By

லண்டன்: கொரோனா வைரஸுக்கு பிரபல காமெடி நடிகர் பலியாகி இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

'ஒன் மேன் பேண்ட், த தர்ட்டீன் சேர்ஸ், த ஸ்டேஜூ, த சீக்ரெட் போலீஸ்மேன்ஸ் அதர் பால் உட்பட பல ஆங்கில படங்களில் நடித்திருப்பவர் டிம் புரூக் டெய்லர்.

ஏராளமான டிவி தொடர்களிலும் காமெடியனாக நடித்துள்ளார். ஹவ் டூ இரிடேட் பீப்புள், மார்ட்டி, த கூடிஸ் உட்பட பல தொடர்களில் நடித்து அசத்தி இருக்கிறார்.

கொரோனா வைரஸ்

கடைசியாக, டாக்டர்ஸ் என்ற தொடரில் நடித்திருந்தார். இந்த தொடர் கடந்த 2015 ஆம் ஆண்டு வெளியானது. இதற்கு பிறகு அவர் நடிக்கவில்லை. லண்டனில் வசித்து வந்த அவருக்கு கடந்த சில நாட்களுக்கு முன் கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டது. இதையடுத்து சிகிச்சை பெற்று வந்தார். சிகிச்சை பலனின்றி நேற்று மரணமடைந்தார். அவருக்கு வயது 79.

சமூக வலைத்தளங்கள்

சமூக வலைத்தளங்கள்

அவரது மறைவை, அவருடன் இணைந்து நடித்துள்ள பிரபல காமெடி நடிகர் ஜேக் டீ (Jack Dee) உறுதிப்படுத்தியுள்ளார். அவர் கூறும்போது, டிம் குணமடைந்து திரும்பி விடுவார் என்று நினைத்திருந்தோம். ஆனால் அவர் மறைந்துவிட்டார் என்ற செய்தி பெரும்கவலையை கொடுத்திருக்கிறது என்று வருத்தத்துடன் தெரிவித்துள்ளார்.

மார்க் பிளம்

மார்க் பிளம்

இதையடுத்து ஏராளமானோர் சமூக வலைத்தளங்களில் அவருக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர். அவர் நடித்த படங்கள் மற்றும் காட்சிகளை குறிப்பிட்டு இரங்கல் தெரிவிக்கின்றனர். கொரோனாவால் ஹாலிவுட் நடிகர், நடிகைகள் உயிரிழந்து வருவது அதிகரித்து வருகிறது. இதற்கு முன் ஹாலிவுட் நடிகர் மார்க் பிளம், கடந்த சில நாட்களுக்கு முன், உயிரிழந்தார்.

பேட்ரிசியா போஸ்வொர்த்

பேட்ரிசியா போஸ்வொர்த்

பிரபல ஜப்பானிய காமெடி நடிகர் கென் ஷிமுரா, கொரோனா வைரஸால் உயிரிழந்தார். பின்னர், ஸ்டார் வார்ஸ் படத்தில் நடித்த ஆண்ட்ரூ ஜாக் கொரோனாவுக்கு பலியானார். அவருக்குப் பின், எட்டி லார்ஜ் என்ற பிரிட்டீஷ் காமெடி நடிகர், லண்டனில் உயிரிழந்தார். அமெரிக்க நடிகையும் எழுத்தாளருமான பேட்ரிசியா போஸ்வொர்த், நியூயார்க்கில் மரணமடைந்தார்.

ஹிலாரி கீத்

ஹிலாரி கீத்

ஸ்டீவன் ஸ்பீல்பெர்க்கின் ஜாஸ் பட நடிகை லீ ஃபியர்ரோ கொரோனாவால் உயிரிழந்தார். இவர்களை அடுத்து பிரபல பிரிட்டீஸ் நடிகை ஹிலாரி கீத் கடந்த சில நாட்களுக்கு முன் இறந்தார். சீனாவில் உருவான கொரோனா வைரஸ் இப்போது வேகமாக பரவி வருகிறது. இத்தாலி, அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளில் கடும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X