அடப்பாவமே! கொரோனாவுக்கு சிகிச்சை பெற்ற இன்னொரு காமெடி நடிகரும் பலி.. திரையுலகம் மீண்டும் ஷாக்!

By

சென்னை: கொரோனாவுக்கு சிகிச்சை பெற்றுவந்த மேலும் ஒரு காமெடி நடிகர், நேற்று உயிரிழந்தார். இது, திரையுலகில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Recommended Video

Arnold Massive Contribution | Shah Rukh Khan Donated? | Lock Down

சீனாவில் உருவான கொரோனா வைரஸ், இன்று உலகை அச்சுறுத்திக் கொண்டிருக்கிறது. கொரோனாவை கட்டுப்படுத்தும் நடவடிக்கையில் உலக நாடுகள் தீவிரமாக இறங்கியுள்ளன.

இந்தியாவிலும் கொரோனா பாதிப்பு படிப்படியாக அதிகரித்து வருகிறது. வரும் 14 ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

ஓல்கா குரிலென்கோ

ஓல்கா குரிலென்கோ

இந்த கொரோனா வைரஸ் பிரபலங்களையும் விட்டு வைக்கவில்லை. ஹாலிவுட் நடிகர் டாம் ஹாங்க்ஸ் மற்றும் அவரது மனைவி ரீட்டா வில்சனுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. பின்னர் அவர்கள் சிகிச்சை பெற்று சொந்த ஊருக்குத் திரும்பினர். ஜேம்ஸ்பாண்ட் பட ஹீரோயின், ஓல்கா குரிலென்கோவும் இதன் பாதிப்புக்கு ஆளானார். பின்னர் குணமாகிவிட்டதாகத் தெரிவித்திருந்தார்.

மார்க் ப்ளம் மரணம்

மார்க் ப்ளம் மரணம்

இந்நிலையில், ஹாலிவுட் நடிகர் மார்க் பிளம் கடந்த சில நாட்களுக்கு முன், கொரோனாவால் உயிரிழந்தார். இவர், ஜஸ்ட் பிட்வீன் பிரண்ட்ஸ், க்ரொக்கடைல் டண்டி, பிளசண்ட் டே, லவ்சிக், தி பிரசிடியோ உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த மார்க் ப்ளம், சிகிச்சை பலனின்றி இறந்ததாக அவரது குடும்ப நண்பர் லீ வில்காஃப் தெரிவித்தார்.

கென் ஷிமுரா

கென் ஷிமுரா

பின்னர், பிரபல ஜப்பானிய காமெடி நடிகர் கென் ஷிமுரா, கொரோனா வைரஸால் உயிரிழந்தார்.. ஜப்பானில் அனைவருக்கும் தெரிந்த முகமான இவர், காமெடியில் கொடி கட்டி பறந்தவர். கடந்த 23 ஆம் தேதி, அவருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது தெரியவந்ததை அடுத்து, டோக்கியோவில் உள்ள மருத்துவமனை ஒன்றில் சிகிச்சை பெற்று வந்த அவர் உயிரிழந்தார்.

ஆண்ட்ரூ ஜாக்

ஆண்ட்ரூ ஜாக்

அடுத்து, ஸ்டார் வார்ஸ் படத்தில் நடித்த ஹாலிவுட் நடிகர் ஆண்ட்ரூ ஜாக் கொரோனாவுக்கு பலியானார். இவருக்கு சில தினங்களுக்கு முன்பு கொரோனா தொற்று ஏற்பட்டது. இதற்காக இங்கிலாந்தில் சிகிச்சை பெற்று வந்த அவர் சிகிச்சை பலனின்றி மரணம் அடைந்தார். ஆண்ட்ரூ ஜாக், ஸ்டார் வார்ஸ் படத்தின் 7 மற்றும் 8-ம் பாகங்கள் உட்பட சில படங்களில் நடித்து இருக்கிறார்.

கொரோனா தொற்று

கொரோனா தொற்று

இந்நிலையில், எட்டி லார்ஜ் என்ற பிரிட்டீஷ் காமெடி நடிகர் நேற்று உயிரிழந்துள்ளார். அவருக்கு வயது 78. இதயநோய் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவருக்கு பின்னர் கொரோனா நோய் தொற்று ஏற்பட்டது. அதற்காகச் சிகிச்சை பெற்றுவந்தார். சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்துள்ளார். இதை அவர் குடும்பத்தினர் உறுதி செய்துள்ளனர்.

லிட்டில் அண்ட் லார்ஜ்

லிட்டில் அண்ட் லார்ஜ்

'கொரோனா தடுப்பு நடவடிக்கை காரணமாக எங்களால் அப்பாவை பார்க்க முடியவில்லை. ஆனால், தினமும் அவரிடம் பேசிக் கொண்டிருந்தோம்' என்று அவர் மகன் ரியான் பேஸ்புக்கில் தெரிவித்துள்ளார். மறைந்த எட்டி லார்ஜ், லிட்டில் அண்ட் லார்ஜ் என்ற காமெடி ஷோ மூலம் பிரிட்டீஷில் அதிகம் புகழ்பெற்றவர். மேலும் சில தொடர்களிலும் நடித்துள்ளார். கொரோனாவுக்கு திரை நட்சத்திரங்கள் தொடர்ந்து உயிரிழந்து வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X