twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    ஹாலிவுட்டை கலங்கடித்த கொரோனா.. ஒரே அடியா ரிலீஸ் தேதியை மாற்றிய படங்கள்.. நொந்துப்போன ரசிகர்கள்!

    |

    லாஸ் ஏஞ்சல்ஸ்: ஏப்ரல் மாதம் கோடை விடுமுறையை கொண்டாடும் விதமாக உலகம் முழுவதும் பல மெகா பட்ஜெட் திரைப்படங்களை களமிறக்க ஹாலிவுட் முதல் கோலிவுட் வரை திட்டமிட்டு இருந்தன.

    Recommended Video

    கோ கொரோனா கோ.. கொடிய வைரஸை விரட்ட.. அகில உலக சூப்பர்ஸ்டாரின் அசத்தலான வீடியோ!

    ஆனால், அனைத்திற்கும் கொரோனா வைரஸ் ஆப்பு வைத்து விட்டது. ரிலீஸ் தேதியை அறிவித்து விட்டு ஷூட்டிங் தொடங்கிய பல படங்கள் தற்போது, சில மாதங்களுக்கு அல்ல ஒரே அடியாக அடுத்த ஆண்டுக்கு படங்களை ரிலீஸ் செய்ய முடிவு செய்து புதிய ரிலீஸ் தேதிகளை அறிவித்துள்ளன.

    இதனால், ஹாலிவுட் பட ரசிகர்களுக்கு மிகப்பெரிய ஏமாற்றமே மிஞ்சியுள்ளன.

    கொரோனா பாதிச்சும் திருந்தலையாடா நீங்க.. சீனர்களை வெளுத்து வாங்கிய பாலிவுட் நடிகை!கொரோனா பாதிச்சும் திருந்தலையாடா நீங்க.. சீனர்களை வெளுத்து வாங்கிய பாலிவுட் நடிகை!

    நஷ்டம்

    நஷ்டம்

    கொரோனா வைரஸ் பாதிப்பால் மார்ச் மாதம் உலகம் முழுவதும் தியேட்டர்கள் மூடப்பட்டன. கடந்த மாதத்தில் ஹாலிவுட் தொடங்கி கோலிவுட் வரை கிட்டத்தட்ட 5000 கோடிக்கு மேல் திரைத் துறையினருக்கு லாஸ் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்தியாவில் மட்டும் 800 முதல் 1000 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.

    நோ டைம் டு டை

    நோ டைம் டு டை

    நாளை வெள்ளிக்கிழமை ஏப்ரல் 2ம் தேதி ரிலீசாகும் என அறிவிக்கப்பட்டு டீசர் எல்லாம் விடப்பட்ட ஜேம்ஸ்பாண்ட் படமான நோ டைம் டு டை படத்தின் ரிலீஸ் வரும் நவம்பர் மாதம் 12ம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது. ஜேம்ஸ்பாண்ட் படங்கள் உலகளவில் கலெக்‌ஷனை அள்ளும் என்பதால், நல்ல ஒரு ரிலீஸ் தேதியை பார்த்து ஃபிக்ஸ் செய்துள்ளனர்.

    எஃப் 9

    எஃப் 9

    வரும் மே மாதம் வெளியாக வேண்டிய ஃபாஸ்ட் அண்ட் ஃபியூரியஸ் 9 திரைப்படம் கொரொனா வைரஸ் பாதிப்பு காரணமாக ஒரே அடியாக அடுத்த ஆண்டு ஏப்ரல் 2ம் தேதி ரிலீசாகும் என படக்குழு அறிவித்துள்ளது. இப்படி கிட்டத்தட்ட ஓராண்டுகளுக்கு ரிலீஸ் தேதியை தள்ளி வைத்தது எஃப் 9 ரசிகர்களை வருத்தமடைய செய்துள்ளது.

    பிளாக் விடோ

    பிளாக் விடோ

    கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் மார்வெல் தயாரிப்பில் ரிலீசான அவெஞ்சர்ஸ் எண்ட்கேம் திரைப்படம் அவதார் பாக்ஸ் ஆஃபிஸை முறியடித்து உலகளவில் வசூலில் முதலிடத்தை பிடித்துள்ளது. இந்நிலையில், ஸ்கார்லெட் ஜோஹன்சன் நடிப்பில் உருவாகி உள்ள பிளாக் விடோ திரைப்படத்தை இந்த ஆண்டு மே 1ம் தேதி வெளியிட திட்டமிட்ட நிலையில், தற்போது தேதி குறிப்பிடாமல் தள்ளி வைத்துள்ளனர்.

    மற்ற படங்கள்

    மற்ற படங்கள்

    மேலும், கொரோனா வைரஸ் பாதிப்பால் திரைக்கு வரவிருந்த வொண்டர் உமன், லிட்டில் மெர்மெய்டு, பீட்டர் பான், ஹோம் அலோன் மற்றும் ஜுராசிக் வேர்ல்ட்: டொமினியன் உள்ளிட்ட திரைப்படங்களின் ரிலீஸ் தேதியும் இஷ்டத்துக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளன. பல ஆயிரம் கோடிகளில் உருவாக்கப்பட்ட படங்கள் திட்டமிட்டபடி ரிலீஸ் ஆகவில்லை என்றால், அது ஹாலிவுட்டை மிகப்பெரிய அளவில் பாதிக்கும் என கணித்துள்ளனர்.

    English summary
    Corona virus pandemic postponed the Mega Biggies Hollywood movies like Fast and Furious 9, No Time To Die and Black Widow etc.,
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X