ப்ரீமியரில் கலந்துகொண்டது ஒரு குத்தமாய்யா.. தனிமைப்படுத்தப்பட்ட ஏஞ்சலினா ஜோலி மற்றும் சல்மா ஹயக்!

லாஸ் ஏஞ்சல்ஸ்: மார்வெல் தயாரிப்பில் விரைவில் வெளியாக உள்ள Eternals படத்தின் ப்ரீமியரில் கலந்து கொண்ட பிரபலங்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

கொரோனா பீதி காரணமாக Eternals ப்ரீமியர் முடிந்த அடுத்த நாள் நடக்கவிருந்த Elle மேகஸின் விழாவில் பிரபலங்கள் நேரடியாக கலந்து கொள்ளவில்லை.

அதற்கு பதிலாக ஸ்க்ரீனில் பிரபலங்கள் பங்கேற்ற நிலையில், கொரோனா பரவல் பிரச்சனை ஏற்பட்டதா? என்கிற சந்தேகம் கிளம்பியது.

எட்டர்னல்ஸ்

எட்டர்னல்ஸ்

Nomadland படத்தை இயக்கி ஆஸ்கர் விருதை தட்டிச் சென்ற இயக்குநர் Chloe Zhao இயக்கத்தில் மார்வெல் தயாரிப்பில் உருவாகி உள்ள பிரம்மாண்ட திரைப்படம் தான் Eternals. இந்த படத்தில் பல புதிய சூப்பர் ஹீரோக்களை மார்வெல் அறிமுகப்படுத்தி உள்ளது. ஏஞ்சலினா ஜோலி, சல்மா ஹயக், ரிச்சர்ட் மேடன், கேம் ஆஃப் த்ரோன்ஸ் ஹீரோ கிட் ஹாரிங்டன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

ஏஞ்சலினா ஜோலி

ஏஞ்சலினா ஜோலி

டாம்ப் ரைடர், வான்டட், மெலஃபிஷன்ட் உள்ளிட்ட பல ஹாலிவுட் படங்களில் நடித்து பிரபலமான நடிகை ஏஞ்சலினா ஜோலி மார்வெல் தயாரிப்பில் உருவாகி உள்ள எடர்னல்ஸ் படத்தில் சூப்பர் ஹீரோவாக நடித்துள்ளார். வரும் நவம்பர் 5ம் தேதி உலகளவில் இந்த படம் வெளியாக உள்ளது.

குழந்தைகளுடன் பங்கேற்பு

குழந்தைகளுடன் பங்கேற்பு

நடிகை ஏஞ்சலினா ஜோலி தனது குழந்தைகளுடன் எடர்னல்ஸ் படத்தின் ப்ரீமியர் நிகழ்ச்சியில் அட்டகாசமாக கலந்து கொண்டார். ஏஞ்சலினாவின் ஒரு மகள் ஆஸ்கர் விருது விழாவில் ஏஞ்சலினா உடுத்தி வந்த உடையை அணிந்து ரசிகர்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தினார்.

ஸ்டன்னிங் சல்மா ஹயக்

ஸ்டன்னிங் சல்மா ஹயக்

டெஸ்பராடோ, ஃப்ரீடா உள்ளிட்ட படங்களில் நடித்து அசத்திய பிரபல ஹாலிவுட் நடிகை சல்மா ஹயக் கவர்ச்சி பொங்க இந்த ப்ரீமியர் நிகழ்ச்சியில் தனது குழந்தைகளுடன் பங்கேற்றார். இந்த வயதிலும் இவ்வளவு கவர்ச்சியாக இருக்காரே சல்மா ஹயக் என ரசிகர்கள் ஆச்சர்யத்தில் ஆழ்ந்தனர்.

தனிமைப் படுத்தப்பட்டார்கள்

தனிமைப் படுத்தப்பட்டார்கள்

எடர்னல்ஸ் ப்ரீமியர் நிகழ்ச்சியை தொடர்ந்து ஏஞ்சலினா ஜோலி, சல்மா ஹயக் உள்ளிட்ட எடர்னல் பட நடிகர்கள் தனிமைப் படுத்தப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளன. அடுத்த நாள் நடைபெற்ற Elle Women எனும் ஹாலிவுட் நிகழ்ச்சியில் நேரடியாக கலந்து கொள்ளாமல் இவர்கள் விர்ச்சுவலில் தான் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

கொரோனா இல்லை

கொரோனா இல்லை

டிஸ்னி சார்பாக வெளியான அறிவிப்பில் ஏஞ்சலினா ஜோலி, சல்மா ஹயக் உள்ளிட்ட நடிகர்களுக்கு கொரோனா தொற்று பரவும் வாய்ப்பு இருப்பதாக வெளியான தகவலை அடுத்து அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு கொரோனா சோதனை நடத்தப்பட்டது. அதிர்ஷ்டவசமாக யாருக்கும் கொரோனா தொற்று ஏற்படவில்லை. அனைவரது ரிசல்ட்டும் நெகட்டிவ் என்றே வந்துள்ளதாக கூறியுள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X