'ஜேம்ஸ் பாண்ட்' படங்களில் இருந்து விலக டேனியல் கிரேக் திட்டம்
லண்டன்: ஜேம்ஸ் பாண்ட் நடிகர் டேனியல் கிரேகிற்கு கையில் துப்பாக்கியோடு திரியும் 007 வேலை பிடிக்கவில்லையாம்.
ஹாலிவுட் படங்களில் ஜேம்ஸ் பாண்ட் படங்களுக்கு அதிக வரவேற்பு உண்டு. ஜேம்ஸ் பாண்ட் 007 கதாபாத்திரத்திற்கு உலகம் முழுவதும் ரசிகர்கள் உள்ளனர்.

டேனியல் கிரேக் 007
கடந்த 2005ம் ஆண்டு ஜேம்ஸ் பாண்டாக நடிக்க இங்கிலாந்தைச் சேர்ந்த ஹாலிவுட் நடிகர் டேனியல் கிரேக் ஒப்பந்தமானார். ஜேம்ஸ் பாண்டாக நடிக்கும் வாய்ப்பு தங்களுக்கு கிடைக்காதா என்று பல நடிகர்கள் ஏங்கிக் கொண்டிருக்கையில் கிரேகிற்கு அந்த வாய்ப்பு கிடைத்தது.

பாண்டாக 3 படங்கள்
கிரேக் நடித்த முதல் ஜேம்ஸ் பாண்ட் படமான கெசினோ ராயல் கடந்த 2006ம் ஆண்டு வெளிவந்தது. அதன் பிறகு 2008ம் ஆண்டில் குவான்டம் ஆப் சொலேஸ் மற்றும் தற்போது ஸ்கைஃபால் ஆகிய படங்கள் வெளிவந்துள்ளன.

பட்டையைக் கிளப்பும் ஸ்கைஃபால்
அண்மையில் வெளியான ஸ்கைஃபால் இங்கிலாந்து பாக்ஸ் ஆபீஸில் புதிய சாதனைகளைப் படைத்து வருகிறது. முதல் வாரத்திலேயே இப்படம் 37.2 மில்லியன் பவுண்டுகளை வசூலித்துள்ளது. இது இங்கிலாந்து பாக்ஸ் ஆபீஸ் வரலாற்றிலேயே பெரிய சாதனை ஆகும்.

பாண்டா நடித்தது போதும்: கிரேக்
ஜேம்ஸ் பாண்டாக கடந்த 6 ஆண்டுகளாக வலம் வரும் டேனியல் கிரேகிற்கு அந்த கதாபாத்திரத்தில் நடித்து போரடித்துவிட்டது போலும். ஆளைவிட்டால் போதும் என்ற நிலையில் உள்ளார். பாண்டா நடித்து போதும் போதும் என்றாகிவிட்டாது. என்னை விட்டால் இந்த பாத்திரத்தை கைகழுவத் தயார் என்கிறார் கிரேக். பாண்டான உடனேயே அந்த கதாபாத்திரத்தில் இருந்து வெளியேற முயன்றாராம். ஆனால் தயாரிப்பாளர்கள் தான் அவரை விடாமல் பிடித்து வைத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
ஸ்கைஃபால் படத்தைப் பார்த்து அவரவர் இது தான் சிறந்த பாண்ட் படம் என்று புகழ்ந்து கொண்டிருக்கையில் கிரேகோ வேறு விதமாகவல்லவா யோசிக்கிறார்.

பியர்ஸ் பிராஸ்னனும் அவராகவே விலகினார்..
இதற்கு முன் ஜேம்ஸ் பாண்ட் கேரக்டர்களில் நடித்து வந்த பியர்ஸ் பிராஸ்னனும் அவராகவே விலகினார் என்பது குறிப்பிடத்தக்கது. கலையாக்கம் மிகுந்த படங்களை இயக்குவதிலும் நடிப்பதில் பிராஸ்னனுக்கு ஆர்வம் அதிகம். ஜேம்ஸ் பாண்ட் கேரக்டரில் நடித்ததால், இது போன்ற படங்களை தன்னால் செய்ய முடியவில்லை என்று கூறி பிராஸ்னன் விலகினார்.
இதையடுத்து Seraphim Falls, Butterfly on a Wheel உள்ளிட்ட அழகிய படங்களைத் தந்தார் பிராஸ்னன்.


Click it and Unblock the Notifications











