twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    எல்லாம் முடிஞ்சுடுச்சு.. வயசாகுது.. ஜேம்ஸ் பாண்ட்டுக்கு குட்பை சொன்ன டேனியல் கிரெய்க்!

    |

    லண்டன்: டேனியல் கிரேய்க் நடிப்பில் உருவாகி வரும் 'நோ டைம் டு டை' படத்தின் ஷூட்டிங் முடிந்துள்ளது.

    இனிமேலும், தன்னால் ஜேம்ஸ் பாண்ட் கதாபாத்திரத்தில் நடிக்க முடியாது என நடிகர் டேனியல் கிரெய்க், தனது நீண்ட நாள் ஜேம்ஸ் பாண்ட் கதாபாத்திரத்திற்கு பிரியா விடை கொடுத்துள்ளார்.

    25வது ஜேம்ஸ் பாண்ட் படமான 'நோ டைம் டு டை' படம் அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் வெளியாகிறது.

    ஜேம்ஸ் பாண்ட்

    ஜேம்ஸ் பாண்ட்

    1962ம் ஆண்டு வெளியான டாக்டர் நோ படம் தான் முதல் ஜேம்ஸ் பாண்ட் படம். ரகசிய உளவாளி குறித்த கதைகள் உலகளவில் இருந்து வந்தாலும், ஜேம்ஸ் பாண்ட் 007 கதாபாத்திரம் தான் உலகளவில் பிரபலமானது. இதுவரை 24 ஜேம்ஸ் பாண்ட் படங்கள் வெளியாகியுள்ள நிலையில், 25வது ஜேம்ஸ் பாண்ட் படமாக No Time To Die படம் ஏப்ரல் 2020ல் வெளியாகிறது.

    டேனியல் கிரெய்க்

    டேனியல் கிரெய்க்

    கடந்த 2006ம் ஆண்டு வெளியான கேசினோ ராயல் திரைப்படத்தில் தான் முதன்முதலாக ஜேம்ஸ் பாண்ட் அவதாரம் எடுத்தார் டேனியல் கிரெய்க். அந்த படம் மிகப்பெரிய வெற்றியை பெற்ற நிலையில், தொடர்ந்து ஸ்கை ஃபால், குவாண்டம் ஆஃப் சோலேஸ், ஸ்பெக்டர் மற்றும் நோ டைம் டு டை என 5 ஜேம்ஸ் பாண்ட் படங்களில் டேனியல் கிரெய்க் நடித்துள்ளார்.

    இனிமே முடியாது

    ஸ்டன்ட் நடிகராக இருந்து ஜேம்ஸ் பாண்டாக மாறிய டேனியல் கிரெய்குக்கு தற்போது 51 வயதாகிறது. நோ டைம் டு டை படத்தில் கூட தான் நடிக்க விரும்பவில்லை என்றும், தனது வயது அதற்கு தடை போடுகிறது என்றும் முன்னதாக டேனியல் கிரெய்க் கூறியிருந்தார். ஆனால், இறுதியாக இந்த ஒரு படத்தில் நடித்து கொடுக்க வேண்டும் என தயாரிப்பு தரப்பு கோரிக்கை வைக்க, இறுதியாக இந்த படத்தில் ஜேம்ஸ் பாண்டாக நடித்துள்ளார் டேனியல் கிரெய்க்.

    அடுத்த ஜேம்ஸ் பாண்ட் யாரு?

    அடுத்த ஜேம்ஸ் பாண்ட் யாரு?

    கேரி ஜோஜி ஃபுகுநாகா இயக்கத்தில் உருவாகி வரும் 25வது ஜேம்ஸ் பாண்ட் படமான நோ டைம் டு டை படத்தின் ஷூட்டிங் சமீபத்தில் முடிந்துள்ள நிலையில், ஆளவிடுங்கடா சாமி என ஜேம்ஸ் பாண்ட் கதாபாத்திரத்திற்கு குட் பை சொல்லியுள்ளார் டேனியல் கிரெய்க். இதனால், அடுத்த ஜேம்ஸ் பாண்ட் யார் என்ற கேள்வியும் அதற்கான தேடுதல் வேட்டையும் நடந்து வருகிறது.

    லேடி ஜேம்ஸ் பாண்ட்

    அரை நூற்றாண்டுக்கும் மேலாக ஜேம்ஸ் பாண்ட் கதாபாத்திரங்களில் ஆண்களே ஆதிக்கம் செலுத்தி வருவது குறித்து அதிகப்படியான விமர்சனங்களும் சர்ச்சைகளும் எழுந்து வருகின்றன. அடுத்த ஜேம்ஸ் பாண்டாக ஒரு பெண் இருக்க வேண்டும் என்ற கோரிக்கையும் அதற்கான நடிகைகள் பரிந்துரைகளும் கூட நடந்து வருகிறது.

    English summary
    Daniel Craig last outing as 007 is set to be in the upcoming film 'No Time to Die' which will open in theatres next year in April.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X