பாண்ட்களில் மிக அதிக சம்பளம் வாங்குவது டேனியல் கிரெய்க் தான்!
இதுவரை ஜேம்ஸ் பாண்ட் படங்களில் நடித்த நடிகர்களிலேயே தற்போதைய பாண்டான டேனியல் கிரெய்க் தான் அதிக சம்பளம் வாங்குகிறார்.
எத்தனையோ நடிகர்களுக்கு மத்தியில் இங்கிலாந்தைச் சேர்ந்த டேனியல் கிரெய்க் ஜேம்ஸ் பாண்டாக தேர்வானார்.

படத்துக்குப் படம் எகிறிய கிரெய்க் சம்பளம்
டேனியல் கிரெய்க் ஜேம்ஸ் பாண்டாக நடித்த முதல் படமான கெசினோ ராயலுக்கு 1.9 மில்லியன் பவுண்டும், அடுத்த படமான குவான்ட்டம் ஆஃப் சொலேசுக்கு 4.4 மில்லியன் பவுண்டும், அண்மையில் ரிலீசான ஸ்கைஃபாலுக்கு 10.7 மில்லியன் பவுண்டும் சம்பளமாக வாங்கியுள்ளார். இது தவிர மேலும் இரண்டு பாண்ட் படங்களில் நடிக்க அவருக்கு 31 மில்லியன் பவுண்ட் சம்பளம் கொடுக்கப்படுகிறது.

ஜேம்ஸ் பாண்ட்களின் சம்பளம்
ஷான் கானரி-ஒரு படத்தின் சம்பளம்-3.2 மில்லியன் பவுண்ட்(தற்போதைய மதிப்பில்)
ஜார்ஜ் லாசன்பி-460,000 பவுண்ட்(தற்போதைய மதிப்பில்), ராஜர் மூர்-6.3 மில்லியன் பவுண்ட், டிமோத்தி டால்டன்-5.4 மில்லியன் பவுண்ட், பியர்ஸ் பிராஸ்னன்-8.7 மில்லியன் பவுண்ட், டேனியல் கிரெய்க்-9.6 மில்லியன் பவுண்ட்

பாண்ட்கள் கையால் இறந்த வில்லன்கள்
6 பாண்ட் படங்களில் நடித்த ஷான் கானரி 56 வில்லன்களைக் கொன்றார். ஜார்ஜ் 1 படத்தில் 7 பேரையும், ராஜர் 7 படங்களில் 50 பேரையும், டிமோத்தி 2 படங்களில் 18 பேரையும், பிராஸ்னன் 4 படங்களில் 48 பேரையும், கிரெய்க் 3 படங்களில் 39 பேரையும் கொன்றுள்ளனர்.

பாண்ட்களிடம் முத்தம் வாங்கிய பெண்கள்
முதல் பாண்டான ஷான் கானரி தனது படங்களில் 18 பெண்களுக்கு முத்தம் கொடுத்துள்ளார். ஜார்ஜ் லாசன்பி 3 பேருக்கும், ராஜர் மூர் 20 பேருக்கும், டிமோத்தி 4 பேருக்கும், பிராஸ்னன் 12 பேருக்கு முத்தம் கொடுத்துள்ளனர். கிரெய்க் இதுவரை 7 பெண்களுக்கு முத்தம் கொடுத்துள்ளார்.


Click it and Unblock the Notifications











