உங்களுக்கு அதுதான் அழகு... ஜேம்ஸ்பாண்ட்டுக்கு ரசிகர் அட்வைஸ்

By

லாஸ் ஏஞ்சல்ஸ்: நோ டைம் டு டை என்ற ஜேம்ஸ்பாண்ட் படத்தில் ஹீரோ டேனியல் கிரேக், எட்டு லுக்கில் வருகிறார்.

பாண்ட் பட வரிசைகளில் அடுத்ததாக வர இருப்பது, நோ டைம் டு டை. டேனியல் கிரேக், ரால்ஃப் பியன்னஸ், நவோமி ஹாரிஸ், ராமி மலேக் உட்பட பலர் நடிக்கின்றனர். தொடர்ந்து நான்கு பாண்ட் படங்களில் நடித்த டேனியல் கிரேக், இந்தப் படத்தில் நடிக்க மாட்டேன் என்றார் முதலில்.

இதனால், இட்ரிஸ் எல்பா என்ற நடிகர், பாண்ட் கேரக்டரில் நடிப்பதாகக் கூறப்பட்டது. பாண்ட் கேரக்டரில் நடிக்கும் முதல் கறுப்பின ஹீரோ அவர்தான் என்றும் கூறப்பட்டது. இந்நிலையில், இதுதான் என் கடைசி பாண்ட் படம் என நடிக்கச் சம்மதித்தார் கிரேக்.

டேனி பாய்ல்

டேனி பாய்ல்

படத்தை ஸ்லம்டாக் மில்லினர் இயக்குனர் டேனி பாய்ல் இயக்குவதாக இருந்தது. பாண்ட் கேரக்டர் இறப்பது போன்ற கிளைமாக்ஸை மாற்றச் சொன்னார் பாய்ல். காரணமாக, உலகம் முழுவதும் ஏராளமான ரசிகர்களை கொண்ட ஹீரோவை அப்படி சாகடிக்கக் கூடாது என்றார் ஒரு ரசிகனாக. மறுத்தார் திரைக்கதை ஆசிரியர். படத்தில் இருந்து வெளியேறிவிட்டார், ரோசக்கார பாய்ல்.

கேரி ஜோஜி புகுனகா

கேரி ஜோஜி புகுனகா

பின்னர் கேரி ஜோஜி புகுனகாவை இயக்குனராக்கியது தயாரிப்பு. இவர், சின் நோம்ப்ரே, ஜேன் ஐரே, பீட்ஸ் ஆப் நோ நேஷன் ஆகிய படங்களை இயக்கியவர்.

ஏப்ரல் ரிலீஸ்

ஏப்ரல் ரிலீஸ்

டைரக்டர் பஞ்சாயத்து, கிரேக் மறுப்பு, ஷூட்டிங்கில் விபத்து என இந்தப் படத்துக்கு ஏகப்பட்ட தடங்கல்கள். இது அத்தைனையையும் மீறி, குறித்த நேரத்தில் இல்லாமல் கொஞ்சம் தள்ளியே ரிலீஸ் ஆகிறது, இந்த பாண்ட் படம். அதாவது வருடம் ஏப்ரல் 8-ல் ரிலீஸ் ஆகிறது. இதற்கிடையே இந்தப் படத்தின் டிரைலர் வெளியாகி, ஆக்‌ஷன் ரசிகர்களுக்கு ஆசைகாட்டியிருக்கிறது.

இந்நிலையில் இந்தப் படத்தில் பாண்ட் 8 வித்தியாசமான லுக்கில் வருகிறார் என்று தெரிவித்துள்ளது படக்குழு. அதில் ஒரு லுக்கில் நரைத்த தலைமுடியுடனும் அவர் வருகிறார்.

சால்ட் அண்ட் பெப்பர்

சால்ட் அண்ட் பெப்பர்

இதற்கு சமூக வலைத்தளங்களில் ஏராளமான கமென்ட்ஸ். அதில் ஒரு ரசிகர், 'பாண்ட்டை இளமையாகக் காண்பிக்க முயற்சிக்கிறார்கள். அவருக்கு சால்ட் அண்ட் பெப்பர் லுக்தான் அழகு என்று தெரிவித்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X