பிரபல 'ஸ்டார் வார்ஸ்' நடிகர் டேவ் ப்ரவுஸ் காலமானார்.. ரசிகர்கள் அதிர்ச்சி.. ஹாலிவுட் இரங்கல்!

By

லாஸ் ஏஞ்சல்ஸ்: பிரபல ஸ்டார் வார்ஸ் பட நடிகர் டேவ் ப்ரவுஸ் காலமானார். அவருக்கு வயது 85.

பிரபல ஹாலிவுட் நடிகர் டேவ் ப்ரவுஸ். டாக்டர் ஹூ, பிளாக் ஸ்நேக் உட்பட ஏராளமான படங்களில் நடித்துள்ளார்.

இங்கிலாந்தை சேர்ந்த டேவ் ப்ரவுஸ், பளு தூக்கும் போட்டிகளில் சாம்பியன் பட்டம் வென்றவர்.

கேசினோ ராயல்

கேசினோ ராயல்

1962 ஆம் ஆண்டில் இங்கிலாந்து சார்பில் ஒலிம்பிக் போட்டிக்கும் சென்றவர். பின்னர் சினிமாவுக்கு வந்த இவர், 1967-ல் வெளியான கேசினோ ராயல் படம் மூலம் நடிகராக அறிமுகமானார். இந்தப் படத்தில் அவருக்கு கிரெடிட் கொடுக்கப்படவில்லை என்றாலும் தொடர்ந்து வாய்ப்புகள் வந்தன.

சிறந்த அடையாளம்

சிறந்த அடையாளம்

பல படங்களில் அவர் நடித்திருந்தாலும் அவருக்கு சிறந்த அடையாளத்தைக் கொடுத்தது 'ஸ்டார் வார்ஸ்' சீரிஸ் படங்கள்தான். ஸ்டார் வார்ஸ் பட வரிசையில் முக்கிய கேரக்டராகக் கருதப்படும் டார்த் வேடார் கேரக்டரில் இவர் சிறப்பாக நடித்தார். இந்தப் படங்களில் இவர் கேரக்டர் பேசப்பட்டது.

முதுமை காரணமாக

முதுமை காரணமாக

நோராமா ஸ்கேமல் என்பவரை 1963 ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்ட டேவ் ப்ரவுஸ், மூன்று பிள்ளைகளின் தந்தை. இந்நிலையில், முதுமை காரணமாக கடந்த சில வருடங்களுக்கு முன் நடிப்பதில் இருந்து விலகிய டேவ் ப்ரவுஸ், நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதையும் தவிர்த்தார்.

ஹாலிவுட் பிரபலங்கள்

ஹாலிவுட் பிரபலங்கள்

கடைசியாக, 2015 ஆம் ஆண்டு ஐயம் யுவர் ஃபாதர் என்ற படத்தில் நடித்த அவர், நீண்ட நாள் நண்பருக்காக ஷீல்ட்ஸ் என்ற இசை ஆல்பத்தில், கடந்த 2017 ஆம் ஆண்டு நடித்திருந்தார். இந்நிலையில். உடல் நிலை சரியில்லாமல் இருந்த அவர், நேற்று காலமானார். அவருக்கு வயது 85. டேவ் ப்ரவுஸ் மறைவை அடுத்து ஹாலிவுட் திரை பிரபலங்களும் ரசிகர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X