வின் டீசல் செய்த வேலை.. மீண்டும் ஹாலிவுட் பறக்கிறாரா தீபிகா படுகோன்?

மும்பை: பாலிவுட்டின் முன்னணி நாயகியான தீபிகா படுகோன் நடிப்பில் உருவாகியுள்ள சபாக் படம் வரும் ஜனவரி 10ம் தேதி வெளியாகிறது.

சபாக் படத்தை தொடர்ந்து தீபிகா படுகோன், இந்தியில் புதிய படங்கள் ஏதும் கமீட் செய்யவில்லை.

Deepika Padukone back with Vin Diesel in xXx 4?

இந்நிலையில், ஹாலிவுட் நடிகர் வின் டீசல் போட்டுள்ள இன்ஸ்டாகிராம் பதிவில், டிரிப்பிள் எக்ஸ் படத்தின் 4ம் பாகம் தொடங்குவது மற்றும் மீண்டும் தீபிகா படுகோன் வின் டீசலுக்கு ஜோடியாக நடிப்பார் என்ற சிக்னலும் இடம்பெற்றுள்ளது.

டிரிப்பிள் எக்ஸ் படத்தின் மூன்றாம் பாகத்தில் செலினா ஹங்கர் கதாபாத்திரத்தில் முதன்முறையாக ஹாலிவுட் படத்தில் வின் டீசலுக்கு ஜோடியாக தீபிகா படுகோன் நடித்து அசத்தினார்.

இந்நிலையில், டிரிப்பிள் எக்ஸ் 4ம் பாகத்திற்கு வின் டீசல் ரெடி என்பதற்கு அறிகுறியாக, டிரிப்பிள் எக்ஸ் படத்தின் ஐகானிக் உடையான ஃபர் லாங் கோட்டுடன் வின் டீசல் புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

மேலும், அதில், டிரிப்பிள் எக்ஸ் படத்தில் சாண்டர் கேஜ்ஜாக நடித்தது குறித்து மகிழ்ச்சி அடைந்துள்ளார். தனக்கு கிடைத்த குடும்பமும் சிறப்பான ஒன்று என தீபிகா படுகோன், ரூபி ரோஸ் மற்றும் உடன் நடித்தவர்களை டேக் செய்து வின் டீசல் அந்த பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

இதன்மூலம், டிரிப்பிள் எக்ஸ் 4ம் பாகத்திற்கு வின் டீசல் தயாராகி உள்ளார் என்றும், தீபிகா படுகோன் மீண்டும் வின் டீசலுடன் ஜோடி போட்டு நடிப்பார் என்றும் தகவல்கள் பரவி வருகின்றன.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X