படகில் சென்றபோது.. ஏரியில் மாயமான நடிகை.. மரணம் என அச்சம்.. பிரார்த்தனை செய்யும் டெமி லொவேட்டா!
லாஸ் ஏஞ்சல்ஸ்: கலிபோர்னியாவின் பிரு ஏரியில் போட்டிங் சென்றபோது பிரபல அமெரிக்க நடிகை நயா ரிவேரா மாயமான சம்பவம் ஹாலிவுட்டில் பெரும் பரபரப்பை கிளப்பி இருக்கிறது.
கடந்த புதன் கிழமை நடிகை ரயா ரிவேரா காணாமல் போன நிலையில், ஏரியில் மூழ்கி அவர் இறந்திருக்கக் கூடும் என்றே அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.
ஆனால், அவரது உடல் கிடைக்காத நிலையில், அவர் உயிருடன் மீண்டு வரவேண்டும் என ஹாலிவுட் பிரபலமான டெமி லொவேட்டா தனது டிவிட்டரில் அவருக்காக பிரார்த்தனை செய்து பதிவிட்டுள்ளார்.

அமெரிக்க நடிகை
Glee Star எனும் பிரபல டிவி ஷோவில் பங்கேற்று பிரபலமானவர் நயா ரிவேரா. 33 வயதாகும் இவர், பல ஹாலிவுட் படங்களிலும் நடித்துள்ளார். அதே போன்று, ஹாலிவுட் வெப்சீரிஸ்களிலும் நடித்து பிரபலமானவர். மேட் ஃபேமிலிஸ், அட் தி டெவில்ஸ் டோர், ஸ்டெப் அப், க்ளீ சீரிஸ் என கலக்கிய இவருக்கு ஏகப்பட்ட ரசிகர்களும் உள்ளனர்.

2.4 மில்லியன் ரசிகர்கள்
இன்ஸ்டாகிராமிலும் பிரபலமான இவருக்கு 2.4 மில்லியன் ரசிகர்கள் உள்ளனர். ஆடை ஏதும் அணியாமல் முழு நிர்வாணமாகவும், அரை நிர்வாணமாகவும் பல விதமான போட்டோக்களை போட்டு, ஏகப்பட்ட ரசிகர்களை தன் வசம் ஈர்த்துள்ள இவரை காணாமல் அவரது குடும்பத்தினர் மற்றும் ரசிகர்கள் பரி தவித்து வருகின்றனர்.

குழந்தையுடன் படகில்
கடந்த புதன் கிழமை தனது குழந்தையுடன் தனியாக படகை இயக்கிக் கொண்டு சென்ற நயா ரிவேரா, ஏரியில் நீச்சல் அடித்துக் கொண்டிருக்கும் போது, மாயமாகி உள்ளார். நீரில் மூழ்கி அவர் இறந்திருக்க வேண்டும் என்றே அதிகாரிகள் கருதி வருகின்றனர். மிதந்து கொண்டிருந்த படகில் அவரது குழந்தை தூங்கிக் கொண்டிருந்ததை பார்த்த அதிகாரிகள் குழந்தையை பத்திரமாக மீட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

இரண்டு நாட்களாக
பிரு ஏரியில் காணாமல் போன பிரபல அமெரிக்க நடிகை ரிவேராவை கண்டுபிடிக்க, கடந்து இரண்டு நாட்களாக ஏரியின் அனைத்து பகுதிகளிலும் மீட்புப் படையினர் தேடி வருகின்றனர். ஆனால், இதுவரை அவரது உடல் கிடைக்காத நிலையில், அவர் இறந்ததை உறுதி செய்ய முடியவில்லை என்றும், ஆனால், அவர் பிழைக்க வாய்ப்பே இல்லை என்றும் அதிகாரிகள் தெரிவித்து வருகின்றனர்.

பிரார்த்தனை செய்யும் பிரபலம்
நடிகையும் அமெரிக்க பாடகியுமான டெமி லொவேட்டா, தனது சக நடிகை நயா ரிவேரா, மாயமானதை அறிந்து மிகவும் வருத்தம் அடைந்துள்ளார். தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் 87 மில்லியன் ரசிகர்களை கொண்டிருக்கும் அவர், அனைவரும் நயா ரிவேரா நலமுடன் திரும்பி வர வேண்டும் என பிரார்த்தனை செய்யுங்க என பதிவிட்டுள்ளார்.


Click it and Unblock the Notifications











