ஹேக்கர்கள் செய்த வேலை… லீக்கானது டெமி லோவேட்டாவின் அந்தரங்க புகைப்படங்கள்!
நியூயார்க்: பிரபல அமெரிக்க பாடகியும் ஹாலிவுட் நடிகையுமான டெமி லோவேட்டாவின் அந்தரங்க புகைப்படங்கள் இணையத்தில் கசிந்து வருகின்றன.
டெமியின் ஸ்நாப் சாட் அக்கவுன்ட்டை ஹேக் செய்த மர்ம நபர்கள் தான் இந்த வேலையை செய்துள்ளனர்.
இதனால், கடும் அப்செட்டான டெமி, இதுகுறித்து சைபர் கிரைமில் புகார் அளித்துள்ளார்.
பிரபலங்களின் பிரச்னை
சமீப காலமாக சினிமா பிரபலங்களின் சமூக வலைதள கணக்குகள் தொடர்ந்து முடக்கப்பட்டு வருகின்றன. இதன்மூலமாக பிரபலங்களின் அந்தரங்க புகைப்படங்கள் இணையத்தில் கசிந்து வருகின்றன. இதனால் பிரபலங்களுக்கு ஹேக்கர்களால் பெரும் பிரச்னை உருவாகி வருகிறது.

அந்தரங்க புகைப்படம்
இன்ஸ்டாகிராம், ஃபேஸ்புக், ஸ்நாப் சாட் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் தங்களுக்கு நெருக்கமானவர்களுக்கு ரகசியமாக எடுத்து அனுப்பப்படும் அந்தரங்க புகைப்படங்கள் இப்படி அக்கவுன்ட் ஹேக் செய்யப்படும் போது ஹேக்கர்கள் கையில் சிக்கி, இணையத்தில் கசிகின்றன.
டெமி லோவேட்டா
பிரபல அமெரிக்க பாடகியான டெமி லோவேட்டா சில ஹாலிவுட் படங்களில் நடித்துள்ளார். மாடலிங் துறையிலும் டெமி ஆதிக்கம் செலுத்தி வந்தார். இந்நிலையில், அவரது ஸ்நாப் சாட் கணக்கை ஹேக் செய்த மர்ம நபர்கள் அவரின் நிர்வாண புகைப்படங்களை இணையத்தில் கசியவிட்டுள்ளனர்.
டெமிக்கு ஆதரவு
டெமியின் நிர்வாண புகைப்படங்கள் கசிந்த விஷயத்தை அறிந்த அவரது ரசிகர்கள், இதுபோன்ற பிரைவசியான விஷயங்களை வெளியிடுவது கோழைத்தனமான செயல் என்றும், டெமியின் நிர்வாண புகைப்படங்களை யாரும் ஷேர் செய்ய வேண்டாம் என்றும் டெமிக்கு ஆதரவு குரல் கொடுத்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











